LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக காவல்துறையில் புதிதாக ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ தொடக்கம்

மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 57.51 கோடி செலவில் தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 380-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார். 
*****************************
 தீவிரவாத தடுப்பு பிரிவு 
*********************************
அதன் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி தலைமையில் ATS எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
************************************
ஒரு டிஐஜி, 4 எஸ்பி, 5 ஏஎஸ்பி, 13 டிஎஸ்பி, 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 383 பேர் இந்த பிரிவில் செயல்பட உள்ளனர். புதிய பிரிவை உருவாக்க 28 கோடியே 92 லட்சத்து 41,000 ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
********************************
அதிகாரம் புதிய பிரிவிற்கு தரப்பட்டுள்ளது
*********************************
தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும் காவல் நிலைய அதிகாரம் புதிய பிரிவிற்கு தரப்பட்டுள்ளது. முன்னதாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சில சிறப்பு பிரிவு மட்டுமே தீவிரமாக விசாரிக்கும் சூழல் இருந்து வருகிறது. 
*************************************
குறிப்பாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை மட்டுமே விசாரிக்கும் நிலைமை இருந்து வருகிறது. இந்த நிலையில், மாநில அளவிலேயே பிரிவை உருவாக்கி  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 57.51 கோடி செலவில் தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 380-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தீவிரவாத தடுப்பு பிரிவு

அதன் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி தலைமையில் ATS எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிஐஜி, 4 எஸ்பி, 5 ஏஎஸ்பி, 13 டிஎஸ்பி, 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 383 பேர் இந்த பிரிவில் செயல்பட உள்ளனர். புதிய பிரிவை உருவாக்க 28 கோடியே 92 லட்சத்து 41,000 ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

அதிகாரம் புதிய பிரிவிற்கு தரப்பட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும் காவல் நிலைய அதிகாரம் புதிய பிரிவிற்கு தரப்பட்டுள்ளது. முன்னதாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சில சிறப்பு பிரிவு மட்டுமே தீவிரமாக விசாரிக்கும் சூழல் இருந்து வருகிறது.

குறிப்பாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை மட்டுமே விசாரிக்கும் நிலைமை இருந்து வருகிறது. இந்த நிலையில், மாநில அளவிலேயே பிரிவை உருவாக்கி  தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 22 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.