LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் பழமையான தமிழ் எழுத்துகளில் கப்பல் மணி

பண்டைய காலத்தில் தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்கு சான்றாக, நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் மிகப் பழமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கப்பல் மணி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
*******************************
‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற முதுமொழியை பறைசாற்றும்விதமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்தில் தமிழர்கள் கோலோச்சினர். சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கப்பற்படைகளை உடையவர்களாக இருந்தனர். அதில், ராஜராஜ சோழன் பல்லாயிரக்கணக்கான வீரர்களை கப்பலில் கொண்டுசென்று இலங்கை, மலாய் உள்ளிட்ட நாடுகளை வென்றதாக வரலாறு கூறுகிறது. தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்கு சான்றாக அமைந்துள்ளது நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கப்பல் மணி.
-********************************************************
இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு சென்ற வில்லியம் கோல்ன்ஸோ என்ற பாதிரியார், 1836-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் வெங்கேரி எனும் இடத்தில் மவுரி இனப்பழங்குடியின மக்கள் ஒரு விநோதப் பாத்திரத்தில் கிழங்குகளை சமைத்துக் கொண்டிருந்ததை கண்டார். உடனே பாதிரியார், இரும்பிலான ஒரு பாத்திரத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அந்த விநோதப் பாத்திரத்தை பெற்றுக்கொண்டார். பின்னர், அது ஒரு கப்பல் மணி என்பதை அறிந்தார். மவுரி இனப் பழங்குடியினர் பெரும் புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து இந்த மணியை கண்டெடுத்துள்ளனர். இவர்கள் இந்த மணியை எந்த ஆண்டில் கண்டெடுத்தனர், எவ்வளவு காலம் பயன்படுத்தினர், மணி எவ்வாறு உடைந்தது உள்ளிட்ட எந்த குறிப்புகளும் இல்லை.
*********************************************
கடல் கடந்த வணிகத்துக்குச் சான்று
****************************************
பாதிரியார் உயிரிழந்த பிறகு, அவரது உயிலின்படி இந்த கப்பல் மணி வெலிங்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வெண்கல மணியின் விளிம்பில் ‘முகைய்யதின் வககுசுஉடைய கபலஉடைய மணி’ என்று எழுதப்பட்டுள்ளது. முற்றிலும் வெண்கலத்தால் ஆன இந்த மணியில் 23 தமிழ் எழுத்துகள் உள்ளன. இந்த மணி 166 மி.மீ. உயரமும், 155 மி.மீ. சுற்றளவும் கொண்டது. இதில் உள்ள எழுத்துகளைக் கொண்டு அந்த மணி சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இந்த கப்பல் மணி, தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்குச் சான்றாக மட்டுமின்றி, நியூசிலாந்து வரலாற்றிலும் முக்கிய தொன்மைப் பொருளாகக் கருதப்படுகிறது.
******************************************
டச்சு நாட்டைச் சேர்ந்த ஏபெல் டாஸ்மான் என்ற கடல் ஆய்வாளர் 1642-ம் ஆண்டில் நியூசிலாந்தை கண்டுபிடித்தார். நியூசிலாந்து கடற்கரையில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், நியூசிலாந்தை ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அங்கு தமிழர்கள் வணிகம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் நியூசிலாந்து வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

பண்டைய காலத்தில் தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்கு சான்றாக, நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் மிகப் பழமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கப்பல் மணி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற முதுமொழியை பறைசாற்றும்விதமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்தில் தமிழர்கள் கோலோச்சினர். சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கப்பற்படைகளை உடையவர்களாக இருந்தனர். அதில், ராஜராஜ சோழன் பல்லாயிரக்கணக்கான வீரர்களை கப்பலில் கொண்டுசென்று இலங்கை, மலாய் உள்ளிட்ட நாடுகளை வென்றதாக வரலாறு கூறுகிறது. தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்கு சான்றாக அமைந்துள்ளது நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கப்பல் மணி.

இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு சென்ற வில்லியம் கோல்ன்ஸோ என்ற பாதிரியார், 1836-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் வெங்கேரி எனும் இடத்தில் மவுரி இனப்பழங்குடியின மக்கள் ஒரு விநோதப் பாத்திரத்தில் கிழங்குகளை சமைத்துக் கொண்டிருந்ததை கண்டார். உடனே பாதிரியார், இரும்பிலான ஒரு பாத்திரத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அந்த விநோதப் பாத்திரத்தை பெற்றுக்கொண்டார். பின்னர், அது ஒரு கப்பல் மணி என்பதை அறிந்தார். மவுரி இனப் பழங்குடியினர் பெரும் புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து இந்த மணியை கண்டெடுத்துள்ளனர். இவர்கள் இந்த மணியை எந்த ஆண்டில் கண்டெடுத்தனர், எவ்வளவு காலம் பயன்படுத்தினர், மணி எவ்வாறு உடைந்தது உள்ளிட்ட எந்த குறிப்புகளும் இல்லை.

கடல் கடந்த வணிகத்துக்குச் சான்று

பாதிரியார் உயிரிழந்த பிறகு, அவரது உயிலின்படி இந்த கப்பல் மணி வெலிங்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வெண்கல மணியின் விளிம்பில் ‘முகைய்யதின் வககுசுஉடைய கபலஉடைய மணி’ என்று எழுதப்பட்டுள்ளது. முற்றிலும் வெண்கலத்தால் ஆன இந்த மணியில் 23 தமிழ் எழுத்துகள் உள்ளன. இந்த மணி 166 மி.மீ. உயரமும், 155 மி.மீ. சுற்றளவும் கொண்டது. இதில் உள்ள எழுத்துகளைக் கொண்டு அந்த மணி சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இந்த கப்பல் மணி, தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்குச் சான்றாக மட்டுமின்றி, நியூசிலாந்து வரலாற்றிலும் முக்கிய தொன்மைப் பொருளாகக் கருதப்படுகிறது.

டச்சு நாட்டைச் சேர்ந்த ஏபெல் டாஸ்மான் என்ற கடல் ஆய்வாளர் 1642-ம் ஆண்டில் நியூசிலாந்தை கண்டுபிடித்தார். நியூசிலாந்து கடற்கரையில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், நியூசிலாந்தை ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அங்கு தமிழர்கள் வணிகம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் நியூசிலாந்து வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

by Kumar   on 03 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.