LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டேக்வாண்டோ போட்டிகளில் அசத்தும் தமிழக மாணவி ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு

வாட்டி வதைக்கும் குடும்ப வறுமை. இதை டேக் இட் ஈசியாக கடந்து, கல்வியோடு டேக்வாண்டோவை இறுகப் பற்றியதால் தமிழக அரசு சார்பில் ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் குழுவில் வாய்ப்பு கிடைத்தது.
****************************
தனது முயற்சியால் சாதனை படைத்த ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஜப்பான் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவ, மாண விகளுக்கு கல்விச் சாரா மன்ற செயல்பாடுகள், விநாடி-வினா, சிறார் திரைப்படம், வானவில் மன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப் படுகின்றன.
**********************************
இப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வெளிநாடு அழைத்து சென்று வருகிறது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் கல்விசாரா மன்ற செயல்பாடுகளால் முதலிடம் பெற்ற 25 மாணவ, மாணவிகள் ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
************************************
மாணவ, மாணவிகளுடன் 5 ஆசிரியர்களும் 6/11/2023-ம் தேதி சென்னை விமான நிலையத்தி்ல் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் நவம்பர் 11-ம் தேதி சென்னைக்கு திரும்புகின்றனர். விளையாட்டு போட்டியில் மாநிலஅளவில் முதலிடம் பெற்ற ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த ஜனனியும் (17) இக்குழுவில் இடம் பெற்று ஜப்பானுக்கு சென்றுள்ளார்.
***********************************
மாநில போட்டி யில் முதலிடம் 
**********************************
மாணவி ஜனனி கடந்தாண்டு ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்றார். தற்போது திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படித்து வருகிறார். இவர் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் போது, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்தார்.
**************************************
இதன் தொடர்ச்சியாக மாநில அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். கடந்த 2016-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி யில் முதலிடம் பெற்றார். 2018-19 ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற போட்டியில் இரண்டா மிடம் பிடித்தார்.
*****************************
2022 - 23 -ம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தார். இவர் அரசுப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்தததால் தமிழக அரசு ஏற்பாடு செய்த ஜப்பான் நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்வோர் பட்டியலில் இடம் பிடித்தார்.
************************************
குடும்ப சூழ்நிலை 
*************************
ஜப்பானுக்கு புறப்பட்டு செல்லும் முன்பாக இது குறித்து மாணவி ஜனனி கூறுகையில், "எனக்கு சிறிய வயது முதலே தற்காப்பு கலை கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் எங்களது குடும்பம் விவசாயகுடும்பம். விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தற்காப்பு கலையில் பயிற்சி பெற முடியவில்லை. ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன்.
********************************
6-ம் வகுப்பு படிக்கும் போதே டேக்வாண்டோ குறித்த ஆர்வத்தை கண்டறிந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் எனக்கு ஊக்கமளித்து தொடர்ந்து பயிற்சி அளித்தார். கராத்தே பயிற்சியாளர் ரங்க நாதன் மாஸ்டரும் எனக்கு ஊக்கம் அளித்தார். இதனால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது.
*******************************
இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டேன். இது எனக்கும், எனது பெற்றோர் வரத ராஜன் - சுமதிக்கும் மிகவும் பெருமையாக உள்ளது. தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு நிச்சயம் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பேன்" என்றார்.

வாட்டி வதைக்கும் குடும்ப வறுமை. இதை டேக் இட் ஈசியாக கடந்து, கல்வியோடு டேக்வாண்டோவை இறுகப் பற்றியதால் தமிழக அரசு சார்பில் ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் குழுவில் வாய்ப்பு கிடைத்தது.

தனது முயற்சியால் சாதனை படைத்த ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஜப்பான் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவ, மாண விகளுக்கு கல்விச் சாரா மன்ற செயல்பாடுகள், விநாடி-வினா, சிறார் திரைப்படம், வானவில் மன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப் படுகின்றன.

இப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வெளிநாடு அழைத்து சென்று வருகிறது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் கல்விசாரா மன்ற செயல்பாடுகளால் முதலிடம் பெற்ற 25 மாணவ, மாணவிகள் ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாணவ, மாணவிகளுடன் 5 ஆசிரியர்களும் 6/11/2023-ம் தேதி சென்னை விமான நிலையத்தி்ல் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் நவம்பர் 11-ம் தேதி சென்னைக்கு திரும்புகின்றனர். விளையாட்டு போட்டியில் மாநிலஅளவில் முதலிடம் பெற்ற ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த ஜனனியும் (17) இக்குழுவில் இடம் பெற்று ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

மாநில போட்டியில் முதலிடம்

மாணவி ஜனனி கடந்தாண்டு ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்றார். தற்போது திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படித்து வருகிறார். இவர் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் போது, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்தார்.

இதன் தொடர்ச்சியாக மாநில அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். கடந்த 2016-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி யில் முதலிடம் பெற்றார். 2018-19 ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற போட்டியில் இரண்டா மிடம் பிடித்தார்.

2022 - 23 -ம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தார். இவர் அரசுப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்தததால் தமிழக அரசு ஏற்பாடு செய்த ஜப்பான் நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்வோர் பட்டியலில் இடம் பிடித்தார்.

குடும்ப சூழ்நிலை 

ஜப்பானுக்கு புறப்பட்டு செல்லும் முன்பாக இது குறித்து மாணவி ஜனனி கூறுகையில், "எனக்கு சிறிய வயது முதலே தற்காப்பு கலை கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் எங்களது குடும்பம் விவசாயகுடும்பம். விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தற்காப்பு கலையில் பயிற்சி பெற முடியவில்லை. ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன்.

6-ம் வகுப்பு படிக்கும் போதே டேக்வாண்டோ குறித்த ஆர்வத்தை கண்டறிந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ் எனக்கு ஊக்கமளித்து தொடர்ந்து பயிற்சி அளித்தார். கராத்தே பயிற்சியாளர் ரங்க நாதன் மாஸ்டரும் எனக்கு ஊக்கம் அளித்தார். இதனால் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஜப்பான் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டேன். இது எனக்கும், எனது பெற்றோர் வரத ராஜன் - சுமதிக்கும் மிகவும் பெருமையாக உள்ளது. தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு நிச்சயம் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பேன்" என்றார்.

by Kumar   on 08 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.