LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.

தமிழக அரசியலையும், திரைத்துறையையும் பிரித்துப் பார்க்க முடியாதவண்ணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடக்கின்றன. அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் என 'பிளாக் அண்ட் வொயிட்' காலத்திலேயே தமிழக அரசியலில் திரைப்படத்துக்காரர்கள் குழுமியிருந்தனர். திராவிட இயக்கத்தின் கொள்கையைத் தரைவழியே எடுத்துச் சொன்ன பலர், அரசியலிலும் கோலோச்சினார்கள். திராவிட இயக்க அரசியல் செயல்பாடுகளும், களச் செயல்பாடுகளும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கவும், பின்னாள்களில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக உருவெடுக்கவும் உதவின. கலைஞருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் `அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

 

அண்ணா, எம்.ஜி.ஆர் மட்டுமன்றி சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார்,கருணாஸ் வரை பலருமே தனிக்கட்சித் தொடங்கினார்கள். ஆனால், அந்தக் கட்சிகள் எவையுமே தி.மு.க., அ.தி.மு.க அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. சில கட்சிகள் இன்றுவரை தேர்தல் அரசியலில் போட்டியிடுகின்றன. சில நடிகர்களால் தொடங்கப்பட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் நீடிக்க முடியாமல் கலைக்கப்பட்டன. அப்படி, திரைத்துறையில் பிரபலமடைந்து, தனிக்கட்சி தொடங்கியவர்கள் பட்டியலைப் பார்ப்போம்.

 

 

சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தது நம்மில் பலருக்கும் தெரியாது. அவர் 1989 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்னும் கட்சியைத் தொடங்கினார். தற்போது இந்த கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.u

 

பாக்யராஜ்

நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் எம்ஜிஆரின் பக்தனாக இருந்தது எல்லோருக்கும் தெரியும். எம்ஜிஆருக்கும் பாக்கியராஜ் ரொம்பவும் பிடிக்கும். 1989 ஆம் ஆண்டு பாக்யராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்தார்.

டி.ராஜேந்தர்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட கலைஞர் ஆக இருப்பவர் தான் டி ராஜேந்தர். இவர் 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ன கட்சியை ஆரம்பித்தார்.

 

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் கடந்த 25 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். சரியான நேரத்தில் அவருடைய உடல்நிலை சீராக இருந்திருந்தால் முதலமைச்சராகக் கூட அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

 

 

சரத்குமார்

 

அரசியலில் ஆர்வம் கொண்ட நடிகர் சரத்குமார் திமுக, அதிமுக என மாறி மாறி பயணித்து, விஜயகாந்த் பாணியில் 2007 ஆம் ஆண்டு மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினர். இதுவரை ஓர் எம்எல்ஏ தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் சரத்குமார் கட்சி இருந்து வருகிறது.

 

கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக் கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சி என்னும் கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி அவருக்குப் பெரிதாகப் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்த கட்சியாக இவர் அதை அடையாளப்படுத்தியது தான் அதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

 

கருணாஸ்

நடிகர் கருணாஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு முக்குலத்தோர் புளிப்படை என்னும் கட்சியைத் தொடங்கினார். குறிப்பிட்ட சாதியின் முன்னேற்றத்திற்காகத் தொடங்கிய கட்சி என இதைக் குறிப்பிடுவது உண்டு. கருணாசும் அதை ஒருபோதும் மறுத்தது கிடையாது.

 

கமல்ஹாசன்

கமலஹாசனின் அரசியல் என்று என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஒரு சில மாதங்களிலேயே ஒரு பெரிய மாநாட்டைக் கூட்டி தன்னுடைய மக்கள் நீதி மையக் கட்சியைத் தொடங்கினார். இன்று வரை தன்னை ஒரு ஆக்டிவான அரசியல்வாதியாக வைத்திருக்கிறார்.

 

மன்சூர் அலிகான்

தன்னுடைய வித்தியாசமான கருத்துக்களால் எப்போதுமே சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகப் புலிகள் என்னும் கட்சியைத் தொடங்கினார்.

 

விஜய்

தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக இருக்கும் தளபதி விஜய் நேற்று தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கியதோடு மட்டுமல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருப்பதாகவும், சினிமாவிலிருந்து விலகுவதாகவும் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

by Kumar   on 28 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.