5 புதிய வழித்தடங்களில் விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் துவக்க உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் வாயிலாக மொத்தம் 120 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 73 சிறிய விமானங்களும், 41 பெரிய அளவிலான விமானங்களும் அடங்கும். இந்த நிலையில் வரும் 15-ம் தேதி முதல் கொல்கத்தா - பாங்காங், கொல்கத்தா - ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து 16-ம் தேதி பெங்களூரு - லண்டன் மற்றும் மும்பை - பிராங்களின் இடையே விமான சேவை துவக்கப்பட உள்ளது.
மேலும் வரும் 28-ம் தேதி மும்பை - நியூயார்க் இடையே 6 நாள் சேவையாகவும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. வரும் மாதங்களில் ஏ.320 நியோஸ் வகை விமானங்கள் 6 இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|