|
|||||
லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களா நீங்கள் ! உங்களுக்கான சில டிப்ஸ் ! |
|||||
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் Desktop கம்ப்யூட்டர்களைவிட மடிக்கணினி (Laptop), டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த ஆசைபடுகின்றனர். ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவு பற்றி இங்கு காண்போம்,
* மடிக்கணினியில் இருந்து வெளிப்படும் வேப்ப கதிர்கள் அவர்களின் உயிரணுக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட கூட வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
* மடிக்கணினியை பயன்படுத்தும் 18 முதல் 25 வயதுடைய ஆண்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப்பதுவதாக மேல் நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* மடிக்கனிகளை மடியில் வைத்து உபயோகப்படுத்தும் போது, கழுத்து வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். ஆகையால் மடிக்கனிகளை மேசையின் மீது வைத்து உபயோகிப்பது நல்லது.
* பொதுவாக கணினிகளை அதிகமாக உபயோகப்படுத்தும் போது கண்கள் பாதிப்படைகிறது. எனவே கணினிகளை பயன்படுத்தும் போது சாதாரண கண்ணாடிகளையாவது அணிந்து பயன்படுத்துவது நல்லது. |
|||||
by Swathi on 27 Apr 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|