LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1291 - கற்பியல்

Next Kural >

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ? இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகன்கண் தவறுண்டாய விடத்தும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சே-என் உள்ளமே!; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும்-அவருடைய உள்ளம் நம்மை நினையாது. அவருக்கே யுதவுதல் கண்டபின்பும் ; நீ எமக்கு ஆகாதது எவன்- நீ எமக்கு உதவாது அவரையே நினைத்தற்குக் கரணியம் யாது? பிறர் நமக்குதவாது எப்போதுந் தன்னலமாகவே யிருக்கும் போது , நீ மட்டும் ஏன் தன்னலம் பேணாது பிறர் நலத்தையே நோக்குகின்றாய் என்பதாம் . அவர்க்காதல் அவர் கருதியதற் குடம் படுதல் . ' எமக்காகாதது ' என்றது புலவிக் குடம்படாமையை.
கலைஞர் உரை:
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும் போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலன் பொறுக்கும்படி சொல்லிவிட்டதில் வெட்க மடைந்து திரும்பி வந்த காதலி வருத்தத்துடன் பிணங்கிக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவளுடைய மனம் மீண்டும் காதலரிடமே சென்றது. அதற்காகத் தன்னுடைய மனத்தைக் கண்டிக்கிறாள்:) மனமே! அவருடைய மனம் அவருக்கு அடங்கி யிருப்பதைப் பார்த்தாய். பார்த்த பின்னும் நீ அதைப்போல் எனக்கு அடங்கி நடக்க மறுப்பது ஏன்?
Translation
You see his heart is his alone O heart, why not be all my own?.
Explanation
O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?.
Transliteration
Avarnenju Avarkkaadhal Kantum Evannenje Neeemakku Aakaa Thadhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >