LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

பிண்டி மசாலா (Bhindi Spices)

தேவையானவை :

வெண்டைக்காய் - கால் கிலோ
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்


மசாலா செய்வதற்கு தேவையானவை:

வெங்காயம் - 1
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது  - 1 டேபிள்ஸ்பூன்
புதினா - 1  கைப்பிடி
காய்ந்த மிளகாய் -1
முந்திரி - 15(அரைத்தது)
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - அலங்கரிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கரம் மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
கசூரி மேத்தி -1 டேபிள்ஸ்பூன்


செய்முறை :

1. வெண்டைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக பரப்பி காய வைக்க வேண்டும். மாலையில் செய்வதென்றால் காலையே நறுக்கி காய வைத்து விட வேண்டும்.அதனுடன் பொரிப்பதற்கு உரியவை அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி வைக்க வேண்டும்.

2.கடலை மாவு  சிறிதளவு ஈரத்தன்மை இருந்தாலும் எடுத்து விடும்.பிறகு எண்ணெய் சூடானதும் அவற்றை பொறித்து எடுத்து நன்கு எண்ணெய் உறுஞ்சும் பேப்பரில் போட்டு வைக்கவும். வெண்டைக்காய் பச்சையாக இருக்கும் போதே எடுத்து விட வேண்டும்.ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, புதினா, கரம் மசாலா, பொடித்த காய்ந்த மிளகாய், கசூரி மேத்தி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மசித்து வைக்கவும்.

3. எண்ணெய் சூடானவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது நேரடியாக வாணலியில் போட்டு வதக்கவும்.இப்பொழுது தக்காளி கலவையை சேர்த்து நன்கு வணங்கும் வரை வதக்கவும்.

4. மசாலாவிற்கு தேவையான அளவு  உப்பு சேர்த்து வதக்கினால் வேகமாக வதங்கி விடும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். முந்திரி சேர்த்தவுடன் தீயை குறைத்து வைக்கவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். தேவைக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் கூட தெளித்துக் கொள்ளலாம்.

5.பிறகு பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை இதனுடன் சேர்த்து வதக்கவும். மசாலா வெண்டைக்காயில் நன்றாக ஏறியதும் இறக்கிவிடவும்.இறக்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூடு சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். முந்திரி மற்றும் வெண்ணெய் சேர்க்காமலும் செய்யலாம்.

Bhindi Spices

Ingredients for Bhindi Spices:

 

Lady Finger-1/4kg

Chaat Masala-1tsp

Black Gram-1tbsp

Rice Flour-1tbsp

Oil-as Needed

Chilly Powder-2tsp

 

Ingredients for Making Masala:

 

Onion-1

Tomato-4

Ginger, Garlic Paste-1tbsp

Mint-Hand Pinch

Dry Chilly-1

Cashew Nuts-15(Grinded)

Butter-1tbsp

Coriander – for Decorate

Salt, Oil-as Needed

Garam Masala-2tbsp

Kasuri Methi-1tbsp

 

Procedure to make Bhindi Spices:

 

1. Wash the lady fingers  and cut in to small pieces and pat dry.if we cook in the evening, should pat dry on before morning itself. Then mix the frying ingredients together with this pieces and stir finely.

2. Black gram use to absorb the wet. Heat oil in a pan and deep fry the lady fingers and drain on absorbent paper. Take a vessel, mix chopped tomato, mint, garam masala, grinded chilly powder and kasuri methi along with water and mash them well.

3. Heat oil in a pan, add onion and saute well. Then add ginger, garlic paste and fry till the raw smell subsides. Then add tomato paste and fry until get mashy.

4. Add enough need salt to cook well. Then add grinded cashew nut paste, butter and boil for 2 minutes. Slow the flame, when adding cashew nut paste. Add water to avoid stick at bottom.

5. Then add fried lady fingers and fry well. When masala mix together with lady fingers , remove from flame. Garnish with coriander leaves. Rice and chappati is nice combination for this. We can also do this without cashew nuts and butter.

 

by   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.