|
||||||||
கத்திரிக்காய் சட்னி (brinjal chutney) |
||||||||
தேவையானவை : கத்திரிக்காய் - 4 பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 புளி - நெல்லிக்காயளவு தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் எண்ணை - 4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: 1.வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.கத்திரிக்காயைக் கழுவி துடைத்து, அதன் மேல் சிறிது எண்ணைத் தடவி, இடுக்கியால் பிடித்துக் கொண்டு அடுப்பு தீயின் மேல் காட்டி சுட்டெடுக்கவும். வெந்த கத்திரிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து விடவும். 3.மிக்ஸியில் தேங்காயுடன் புளியையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். 4.ஒரு வாணலியில் எண்ணை காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். 5.நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதக்கவும். 6.அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் விழுது, தேங்காய், புளி ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|