LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

சென்னை நமது சென்னை !

சென்னை நமது சென்னை ! சிறப்பு வாய்ந்த சென்னை !
ஊரைப் பிரிந்து ஓடி வந்தால் வாரியணைக்கும் உன்னை !

சென்னை நமது சென்னை ! வாழ வைக்கும் உன்னை !
தாய்மடிக்கு அடுத்ததாக நாம் மதிக்கும் அன்னை !

சென்னை நமது சென்னை ! தினமும் அழைக்கும் என்னை !
அமுதம் விலக்கி அள்ளித் தின்பேன் சென்னை நகர மண்ணை !

சென்னை நமது சென்னை ! யார்க்கும் உரிய திண்ணை !
உழைத்து வாழ நினைப்பவர்க்கு நிழல் விரிக்கும் தென்னை !

சென்னை நமது சென்னை ! அறிவின் நாற்றுப் பண்ணை !
ஆறுதலாய் மருந்து போட்டு ஆற்றும் மனத்தின் புண்ணை !

சென்னை நமது சென்னை ! இளமை பொலியும் சென்னை !
பார்த்ததில்லை எங்கும் இவள்போல் பழக இனிக்கும் பெண்ணை !

சென்னை நமது சென்னை ! சித்திரப் பூஞ்சென்னை !
கடலும் மணலும் கண்ட பின்பே விரும்பினேன் என் கண்ணை !

சென்னை நமது சென்னை ! ஈந்து நிற்கும் தன்னை !
ஒன்றுபட்டுச் சேர்ந்துழைப்போம்... புகழ்தொடட்டும் விண்ணை !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விடை தெரியாமல்.. விடை தெரியாமல்..
வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை
புத்தரின் புன்னகை புத்தரின் புன்னகை
தேநீர் நேரம் தேநீர் நேரம்
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
நீதியைத் தேடி - பாவலர் கருமலைத்தமிழாழன் நீதியைத் தேடி - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.