LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

டாலஸ் தமிழ் மன்றம்

டாலஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும்,

வணக்கம்.

"டாலஸ் தமிழ் மன்றம்” என்ற அமைப்பு பல ஒருமித்தக் கருத்து கொண்ட நண்பர்களாலும், பெரும் ஆதரவுடனும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது முற்றிலும் தன்னார்வலர்களால் (volunteers) உருவாக்கப்பட்டு லாப நோக்கமற்ற, மத சார்பற்ற  தொண்டு நிறுவனமாக (non-profit organization) பதிவு செய்யப்பட்டு உள்ள ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பின் நோக்கமானது டாலஸ் மாநகரிலும் இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சகத் தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டுதல், தமிழர் மொழி, கலாச்சாரத்தையும் மற்றும் மரபுகளையும் பேணி காத்தல் ஆகும்.

புலம் பெயர்ந்து வந்து இங்கு வாழும் நமக்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன. உதவிகள் தேவைப்படுகின்றன. குடியுரிமை (Immigration), பிரச்சனைகளுக்கான ஆலோசனை (counseling), இங்கு வருகை தரும் பெற்றோர்களுக்கான மருத்துவம் மற்றும் காப்பீடு (visiting parents medical & insurance), டாலஸ் நகருக்கு சமீபத்தில் குடிபெயர்ந்தோர்க்குத் தேவையான தகவல்கள் (local realty help), சிறந்த பள்ளி பற்றி விபரம் அறிய (find school / after school help) போன்ற பல்வேறு தளங்களில் சரியான உதவிகளைச் செய்ய முகாம்களையும், பயிற்சிப் பட்டறைகளையும், உதவி தொலைபேசி எண்களையும் (Help Lines) ஏற்பாடு செய்ய உள்ளோம்.

நீண்ட நாள் திட்டமாக அனைத்து வசதிகள் கொண்ட ஒரு சமுதாயக் கூடம் (Community Center) அமைத்தல் என்ற குறிக்கோளும் உள்ளது.

உங்கள் ஒவ்வொருவரையும் டாலஸ் தமிழ் மன்றம் அன்போடு அழைக்கிறது. மேலும் விரிவான தகவல்களை www.dallastamilmanram.org என்ற இணையதளத்தில் தொடர்ந்து பார்க்கவும்.

டாலஸ் தமிழ் மன்றம் தொடர்பான அனைத்து கேள்விகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு dallastamilmanram@gmail.com  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்!

தமிழால் இணைவோம்!

நன்றி,
டாலஸ் தமிழ் மன்றம்.
தொடர்புக்கு: 469-616-0386 / 469-616- 0DTM

Communication Mailing Address: 
Dallas Tamil Manram
P.O Box 630971
Irving TX 75063

by Swathi   on 14 Jul 2015  0 Comments
Tags: Dallas   Tamil Manram   டாலஸ் தமிழ் மன்றம்              
 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.