LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
***********************
திருக்குறளை தேசிய நூலாகவும், உலக பொதுமறையாகவும் அறிவிக்கக்கோரி தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, மெல்பர்ன் தமிழ் சங்கம், குவைத் தமிழ் இசுலாமிய சங்கம், பாளையங்கோட்டை தூய யோவான் அரசு கல்லூரி சார்பில் உலக திருக்குறள் ஐந்தாவது மாநாடு திருநெல்வேலி கோடீஸ்வரன் நகரில்  உள்ள லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியில் 2023 செப்டம்பர் 22-ம் தேதிவெள்ளிக்கிழமை தொடங்கியது.
*******************************
திருவள்ளுவர் கருங்கல் சிலை
********************************
மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 3 அடி உயரம் மற்றும் 500 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் கருங்கல் சிலையை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக     முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் திறந்துவைத்து பேசியதாவது, " தஞ்சாவூர் மண்ணுக்கும், தாமி ரவருணி தண்ணீருக்கும் தொடர்பு உண்டு. அதனால்தான், இந்த மாநாடு தாமிரவருணி                 நதிக் கரையில் நடைபெறுகிறது. தமிழை பற்றி பேச வேண்டும், தமிழை பற்றி பாட வேண்டும் என்ற உணர்வு உலகம் முழுவதும் வர வேண்டும். இளைஞர்களுக்கும், அந்த உணர்வு வர வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் உருவாக்கப்படுகிறது. தமிழ் பாதைக்கு இளைஞர்களை ஈர்க்க வேண்டும். அந்தப் பணியை அசிரியர்கள் தான் செய்ய வேண்டும். இன்றைக்கு தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப் பற்றோடு இல்லை. 1,330 திருக்குறள் தெரிந்தால் தான் கல்லூரியில் தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பற்றோடு இருந்துவிட்டால் தமிழை பாதுகாக்க இது போன்ற மாநாடுகள் தேவையில்லை.
********************************
அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும்
************************************
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். கல்விக்கூடங்களில், ஆலயங்களில் தமிழ் விளங்க வேண்டும். வழக்காடு மன்றங்களில் தமிழ் நடமாட வேண்டும் என்ற பொதுக்கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கிற போது அத்தனை அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும். திருக்குறள், தமிழ் போன்ற விஷயங்களில் வேற்றுமையை மறந்து செயல்பட வேண்டும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும். உலக பொதுமறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் காரணமல்ல. நாம்தான் காரணம். திருக்குறள், தமிழ் ஆகியவற் றின் பேரில் அமைப்புகள் வைத்திருப்பவர்கள் சென்னையில் கூடி உண்ணாவிரதம் என அறிவித்தால் உடனடியாக திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
************************************
வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நாம் ஒரு நாள் சென்னையில் கூடிவிட்டால், நம்முடைய கோரிக்கை வெற்றிபெறும். ஒவ்வொருதிருக்குறளும் ஜாதி,மத, இளங்களைக் கடந்து மனிதனுக்கு நெற்றியில் அடித்தாற்போல் கருத்துகளை சொல்லக்கூடியது. வள்ளுவர் உலகத்திற்கே சொந்தக்காரர். அனைத்து விடுதிகளிலும், அனைத்து கல்விக் கூடங்களிலும் திருக்குறள் இருக்க வேண்டும். திரும்புகிற திசையெல்லாம் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகவும், தேசிய நூலாகவும் அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" என்றார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருக்குறளை தேசிய நூலாகவும், உலக பொதுமறையாகவும் அறிவிக்கக்கோரி தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, மெல்பர்ன் தமிழ் சங்கம், குவைத் தமிழ் இசுலாமிய சங்கம், பாளையங்கோட்டை தூய யோவான் அரசு கல்லூரி சார்பில் உலக திருக்குறள் ஐந்தாவது மாநாடு திருநெல்வேலி கோடீஸ்வரன் நகரில்  உள்ள லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியில் 2023 செப்டம்பர் 22-ம் தேதிவெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவள்ளுவர் கருங்கல் சிலை

மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 3 அடி உயரம் மற்றும் 500 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் கருங்கல் சிலையை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக     முன்னாள் துணை வேந்தர் சி.சுப்ரமணியம் திறந்துவைத்து பேசியதாவது, " தஞ்சாவூர் மண்ணுக்கும், தாமி ரவருணி தண்ணீருக்கும் தொடர்பு உண்டு. அதனால்தான், இந்த மாநாடு தாமிரவருணி                 நதிக் கரையில் நடைபெறுகிறது. தமிழை பற்றி பேச வேண்டும், தமிழை பற்றி பாட வேண்டும் என்ற உணர்வு உலகம் முழுவதும் வர வேண்டும். இளைஞர்களுக்கும், அந்த உணர்வு வர வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் உருவாக்கப்படுகிறது. தமிழ் பாதைக்கு இளைஞர்களை ஈர்க்க வேண்டும். அந்தப் பணியை அசிரியர்கள் தான் செய்ய வேண்டும். இன்றைக்கு தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ப் பற்றோடு இல்லை. 1,330 திருக்குறள் தெரிந்தால் தான் கல்லூரியில் தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பற்றோடு இருந்துவிட்டால் தமிழை பாதுகாக்க இது போன்ற மாநாடுகள் தேவையில்லை.

அனைத்து  அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். கல்விக்கூடங்களில், ஆலயங்களில் தமிழ் விளங்க வேண்டும். வழக்காடு மன்றங்களில் தமிழ் நடமாட வேண்டும் என்ற பொதுக்கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கிற போது அத்தனை அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும். திருக்குறள், தமிழ் போன்ற விஷயங்களில் வேற்றுமையை மறந்து செயல்பட வேண்டும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும். உலக பொதுமறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் காரணமல்ல. நாம்தான் காரணம். திருக்குறள், தமிழ் ஆகியவற் றின் பேரில் அமைப்புகள் வைத்திருப்பவர்கள் சென்னையில் கூடி உண்ணாவிரதம் என அறிவித்தால் உடனடியாக திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நாம் ஒரு நாள் சென்னையில் கூடிவிட்டால், நம்முடைய கோரிக்கை வெற்றிபெறும். ஒவ்வொருதிருக்குறளும் ஜாதி,மத, இளங்களைக் கடந்து மனிதனுக்கு நெற்றியில் அடித்தாற்போல் கருத்துகளை சொல்லக்கூடியது. வள்ளுவர் உலகத்திற்கே சொந்தக்காரர். அனைத்து விடுதிகளிலும், அனைத்து கல்விக் கூடங்களிலும் திருக்குறள் இருக்க வேண்டும். திரும்புகிற திசையெல்லாம் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகவும், தேசிய நூலாகவும் அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" என்றார்.

by Kumar   on 26 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.