LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மக்கள் பணிக்கு தன்னை அர்ப்பணித்தவர் பொ. வே. பக்தவச்சலம்

1936-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் பிறந்தார் பக்தவச்சலம். சென்னை பச்சையப்பன் கல்லூரியில்இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். இவருடைய அண்ணன் மார்க்சியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் பக்தவச்சலமும் பொதுவுடைமைக் கருத்துகளில் நாட்டம் கொண்டார். இந்திய பொதுவுடைமை மாணவர் அமைப்பில் சேர்ந்தார். அமெரிக்கச் சுதந்திரப் போர், பிரஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி, பகத் சிங்கின்வரலாறு போன்றவற்றைப் படித்து சமூக உணர்வு பெற்றார்.

நீதி மன்றத்தில் வாதாடினார்


தொழிலாளர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர் ஆகியோரின் உரிமைகளுக்காகப் பக்தவச்சலம் நீதிமன்றங்களில் வழக்காடினார்.தமிழ் நாட்டைச் சேர்ந்த 2000 கொத்தடிமைகளை ஆந்திர மாநிலத்திலிருந்து மீட்டெடுத்தார். அது மட்டுமல்லாது அவர்களுடைய வாழ்க்கைப் புனரமைப்புக்கான பணிகளைச் செய்தார்.தருமபுரி வடார்க்காடு மாவட்டங்களில் 24 இளைஞர்களை 'மோதல் கொலைகள்' என்னும் பெயரில் கொல்லப் பட்டபோது தனியொரு வழக்கறிஞராக நீதி மன்றத்தில் போராடினார்.மக்கள் உரிமைக் கழகம் என்னும் அமைப்பில் தலைவராக இருந்து மனித உரிமைப் பணியைச் செய்தார்.காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் எதிர்த்தும் கிராமங்கள்தோறும் ஊர்கள்தோறும் மக்களிடையே பேசினார்.தம் மூன்று பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும்போது 'மதம் சாதி இல்லை' என்று விண்ணப்பத்தில் குறித்தார்.மார்க்சிய-லெனினிய நெறியில்தமிழ்த் தேசியம் என்னும் கொள்கையை வலியுறுத்தினார்.1991 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின்போராட்டத்திற்குக் குரல் கொடுத்து ஆதரவு காட்டினார்.தமிழ் பயிற்று மொழி, ஆட்சி மொழி, நீதி மன்ற மொழி எனப் பல துறைகளிலும் விளங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார்தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி தாமே மனுதாரராகப் பதிவு செய்து நீதி மன்றத்தில் வாதாடினார்.


மனிதாபிமானமுள்ள வழக்கறிஞர்

தமிழகத்தில் அரசு அமைப்புகள், அதன் கடமையை சரிவர செய்யாத நிலையில்; மக்களின் குறைகளை ஜனநாயக முறையில் எடுத்துச்சொல்லியும் அக்குறைகள் தீர்க்கப்படாத நிலையில் நக்சல்பாரி இயக்கம் தமிழகத்தில் வேரூன்றியது. நக்சல்பாரிகள் பிறக்கும்போதே ஆயுதங்களோடு பிறந்ததுபோலவும், அவர்களை அவ்வாறு உருவாக்கியதில் தங்களுக்கு எந்த தொடர்புமே இல்லை என்பது போலவும் அனைத்து துறையினரும் ஒதுங்கியபோது, மனிதாபிமானமுள்ள வழக்கறிஞராக அந்த நக்சல்பாரிகளுக்காக வாதாடியவர் .

முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான மோகன் குமாரமங்கலத்திடம் ஜூனியராக பணியாற்றினார். பின்னர் திருப்பத்தூரில் வழக்கறிஞராக தொழில் புரிந்தார். பீடி தொழிலாளர்கள், டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவராக பணியாற்றினார். 1971/72 ஆம் ஆண்டுகளில் நிலமீட்சி போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். மிசா சட்டத்தின் கீழும் அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

போலி என்கவுன்டர்

75ஆம் ஆண்டு மக்கள் உரிமை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அகில இந்திய அளவில் மனித உரிமை மாநாட்டையும் புதுடெல்லியில் நடத்தினார். 78ஆம் ஆண்டுகளில் வட ஆற்காட்டில் நக்சலைட்டுகள் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து அவர் இயக்கம் நடத்தினார்.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொத்தடிமைகளாக இருந்த நூற்றுக் கணக்கானோரை வழக்கு மூலம் மீட்டார். அவருடைய இந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் கொத்தடிமை மீட்புக் குழுவில் உயர்நீதிமன்றத்தின் சார்பில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

மக்களுக்காக வாதாடி வந்தார்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட போது, அவருக்கு ஆதரவாக வழக்காட உலகம் முழுவதும் வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்த போது, இந்தியாவின் சார்பில் பி.வி.பக்தவச்சலம் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நக்சல்பாரி இயக்கத்தில் பங்கேற்று செயல்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி வந்தார். 1965 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர் 1975 இல் மக்கள் உரிமைக் கழகத்தில் தீவிரப் பங்கெடுத்து செயல்பட்டார்.

1980 இல் காவல்துறையுடன் மோதல் என்று இளைஞர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்ததால், தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து ஈழத் தமிழர் அகதிகள் மீது அன்றைய ஜெயலலிதா ஆட்சி கட்டவிழ்த்துவிட்ட உரிமை பறிப்புகளை எதிர்த்ததற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


சேவைகள் மூலம் நிரூபித்தார்

எனினும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இவருக்கு உள்ள பொறுப்பு காரணமாக எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் தமது பணியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இவரைவிட தகுதியும், திறமையும் குறைந்தவர்கள் எல்லாம் அரசு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர், நீதிபதி உள்ளிட்ட பல உயர்வுகளை பெற்றபோதும் அதுகுறித்து சிறிதும் கவலையின்றி “மக்கள் பணிக்கு அந்த பதவிகளால் எந்த பயனும் இல்லை” என்பதை தமது சேவைகள் மூலம் நிரூபித்தார்.

வயது முதிர்ந்த காலத்திலும் மக்கள்பணியில் அயராது ஈடுபட்ட அவர் 2007-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி மாலை இயற்கை எய்தினார்.

by Kumar   on 14 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.