LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் எண்ணிமப் பாதுகாப்பு நாள் கருத்தரங்கம்

ஓலைச்சுவடிகளைக் காப்பாற்றுவது ஏன்? - பிரதமரின் ஊடகப் பிரிவு இணை இயக்குநர் அருண்குமார் விளக்கம்
***************************
எண்ணிமப் பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றது. "ஓலைச்சுவடிகளைக் காப்பாற்றுவது அதில் உள்ள நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் அறிவைப் காப்பாற்றுவதற்காக" என்று பிரதமரின் ஊடகப் பிரிவு மற்றும் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இணை இயக்குநர் அருண்குமார் கூறியுள்ளார்.
**********************************
இதுதொடர்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாகவி பாரதியாரின் புகழைப் பறைசாற்றும் வகையில் அவர் பிறந்த நாளான டிசம்பர் 11 – ம் நாளை 2022-ம் ஆண்டு முதல் ‘பாரத மொழிகளின் நாள்’ என்று இந்திய அரசு கொண்டாடி வருகின்றது. இந்த நாளை முன்னிட்டு ‘இந்திய மொழிகளின் வேற்றுமையில் ஒற்றுமை’யை எதிர்கால இளைஞர்களின் மனங்களில் மேலோங்க செய்வதற்காக பாரத மொழிகளின் திருவிழாவினைக் கொண்டாடி வருகிறது.  2023 செப்டம்பர் 28 முதல் 11 டிசம்பர் 2023 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகிறது.
************************************
எண்ணிமப் பாதுகாப்பு நாள்
************************************
எண்ணிமப் பாதுகாப்பு தினமானது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வியாழக்கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. எண்ணிமப் பாதுகாப்பு என்பது (Digital Preservation) வணிகம், கொள்கை வகுப்பு ஒழுகலாறுகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இரண்டறக் கலந்துள்ளது எனலாம்.
*********************************
இன்றைய கணினி யுகத்தை வரையறுக்கும் எண்ணிமத் தொழில்நுட்பங்கள் பரவலான எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற தொடர்ச்சியாக மாற்றமடையும் அம்சங்களாக அமைந்துள்ளன. மருத்துவம், விஞ்ஞானம், சட்டம் போன்ற துறைகள் மட்டுமன்றி ஆய்வுகள், நூலகம், கைத்தொழில், அரசியல் முதலான அனைத்துத் துறைகளிலும் எண்ணிமச் சாதனங்கள் இன்றியமையாத பங்குவகிக்கின்றன. பண்பாட்டு மரபுரிமையும், ஊடகச் செயல்பாடுகளும் கூட எண்ணிமச் சாதனங்களிலேயே தங்கியிருக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிமப் பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்தரங்கினை நவ.2 2023-ம் தேதியன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தியது.
*******************************
இவ்விழாவில் பிரதமரின் ஊடகப் பிரிவு, ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இணை இயக்குநர் அருண்குமார் தனது உரையில் கூறியதாவது: "கடந்தகால வரலாறு மற்றும் இலக்கியங்களை எதிர்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்ல அவற்றைப் பாதுகாக்க வேண்டும். நம் வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் கிடைக்கின்றன.
***************************** 
ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும்
*****************************************
ஓலைச்சுவடிகள் மூலிகைப் பூச்சு செய்து பாதுகாத்தாலும் 200 வருடம் வரை மட்டுமே வரும். அதன்பிறகு படி எடுக்க வேண்டும். அதனால் தான் printing press கண்டுபிடிப்பை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றார்கள். அது படி எடுப்பதை எளிதாக்கிவிட்டது. அதனால் நூல்களை நிறையபேரிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். ஆறுமுக நாவலர், சி. வை தாமோதரம்பிள்ளை போன்றோர் ஓலைச்சுவடிகளை அச்சில் ஏற்றி அழிவில் இருந்து காப்பாற்றினார்கள்.ஓலைச்சுவடிகளைக் காப்பாற்றுவது அதில் உள்ள எழுத்துக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல. நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் அறிவைப் காப்பாற்றுவதற்காக.
********************************
சங்க இலக்கியங்களில் அடம்பப்பூ பற்றிய குறிப்பு உள்ளது. அதில் அதை வெட்டி வெயிலில் உழுது போட்டால் soil salinization சரி செய்யலாம் என்று இருக்கிறது. டெல்டா மாவட்ட மண்ணில் இந்த பிரச்சினை உள்ளது. கடற்கரை ஓரங்களில் அடம்பப்பூ களையாக உள்ளது. முன்னோர்களின் இந்த அறிவைக் காக்க நாம் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும். சில புலனக் குழுக்களில் வெளிநாடு வாழ் தமிழர்கள் அவர்கள் ஊரில் உள்ள தமிழ்க் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளைப் படமெடுத்து இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களை வைத்து கல்வெட்டில் உள்ளதைக் கட்டுடைக்கின்றனர். எடுத்துக்காட்டாக சீனாவில் உள்ள கானீசுவரம் கோயிலைக் குறிப்பிடலாம்" என்றார்.

by Kumar   on 04 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.