LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 873 - நட்பியல்

Next Kural >

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். (தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார்.தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பித்து உற்றவரினும் அறிவிலன், தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன். இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன்-தான் துணையின்றித் தனியனா யிருந்துகொண்டே பலரொடு பகைகொள்பவன்; ஏமுற்றவரினும் ஏழை-பித்தம் பிடித்தவரினும் பேதையானவன். தனிமை நட்பின்மை, அறிவின் திரிவால் இருவரும் ஒப்பாராயினும், பித்தன் பொதுவாக ஒருவரையும் பகையாமையாலும் அதனால் அவனுக்குப்பிறராற் கேடின்மையானும், துணையோடு கூடிய வழியும் பகைவரை வெல்லுதல் உறுதியில்லாதிருக்க, அஃதில்லாதவன் ஒரே சமையத்திற் பலரொடு பொரின் தான் உடனே அழிதல் முழுவுறுதியென்பதை அறியாமையானும், பலர்பகை கொண்ட தனியனை ’ஏமுற்றவரினும் ஏழை’ என்றார். இவ்விரு குறளாலும் பகைகொள்ளுதல் சிறப்பு வகையால் விலக்கப்பட்டது.
கலைஞர் உரை:
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(வில்லேருழவர் பகையானாலும்) தனியாக இருந்து கொண்டு பலபேரைக் பகைத்துக்கொள்ளுகிறவன் பைத்தியக் காரனைவிடப் புத்திக் கெட்டுப்போனவன்.
Translation
Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scorn.
Explanation
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
Transliteration
Emur Ravarinum Ezhai Thamiyanaaip Pallaar Pakaikol Pavan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >