LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1202 - கற்பியல்

Next Kural >

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்-தம்மாற்காதலிக்கப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைத் தவர்க்குப் பிரிவினால் வரக்கூடிய துன்பமொன்றும் இல்லாமற் போய் விடுகின்றது; காமம் எனைத்து இனிது ஒன்றே காண்-அதனாற் காமம் எத்துணையேனும் இன்பந் தருவதொன்றே காண். புணர்ந்தவிடத்தும் பிரிந்தவிடத்தும் ஒப்ப வினிதென்பான்-எனைத்து மினிதென்றான், தான் ஆற்றிய வகை கூறியவாறு. ஏகாரம் தேற்றம். காண் முன்னிலை யாசை.
கலைஞர் உரை:
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
காமம் என் காதலரை நினைத்தவுடனே இன்பம் உண்டாக்குகிறது. மற்ற எந்தப் பொருளும் அதைப்போல நினைத்தவுடனே இன்பம் உண்டாக்குவதில்லை.
Translation
How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief.
Explanation
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.
Transliteration
Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar Ninaippa Varuvadhondru El

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >