LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பல ஆயிரம் வேலைவாய்ப்புகளுக்கும், தொழில்களுக்கும் வேட்டு வைத்த கஜா புயல்...

ஒரு ஏக்கருக்கு 25அடிக்கு ஒரு மரம்னு 75 மரம் ரெண்டு மாசத்துக்கு ஒரு வெட்டு  வெட்டுக்கு ஒரு மரத்துக்கு குறைந்தது 30 காய். அப்படியென்றால் குறைந்தது 2500 காய் ஒரு காய் குறைந்தது 10 ரூபாய் என்றாலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஏக்கருக்கு 25000 முதல் 30000 வரை கிடைக்கும். தோராயமாக மாதம் ஒரு ஏக்கர் தென்னை விவசாயம் பார்த்தவர்கள் 15000 சம்பாதித்தார்கள்..

விவசாயம் விவசாயம் அதைத்தவிர வேறு எதுவும் தெரியாது குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைத்தார்கள் பெண்களை படிக்க வைத்து கட்டிக்கொடுத்தார்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்கள்..

அதையும் அவர்கள் உடனே அடையவில்லை தென்னையை நட்டு ஐந்து வருடங்கள் குருத்துப்பூச்சி களைகளிலிருந்து பாதுகாத்து ஊடுபயிர்களை இட்டு உரமாக்கி அறுவடைகாலமான ஐந்தாவது வருடம் வரை மிகப்பெரிய உடலுழைப்பை மன உளைச்சலை அடைந்து மரத்தை கிளப்பியிருப்பார்கள்..

தென்னை விவசாயம் என்பது மற்ற பயிர்களைப்போல் மூன்றுமாதம் ஆறுமாதத்தில் கிடைக்கும் பலனல்ல..  அது ஒரு தவம்

அதனால் சமூகத்தில் என்ன மாற்றம்னு கேக்குறீங்களா?
சராசரியா பேராவூரணி பட்டுக்கோட்டை ஆலங்குடி பகுதிகளில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 லட்சம் தேங்காய்கள் உறிக்கப்படும் ஒரு காய் உறிப்பதற்கான கூலி சராசரியா 40 பைசாக்கள் ஒரு உறியல்காரர் குறைந்தது ஒரு நாளைக்கு 5000 தேங்காய்கள் உறிப்பார்கள் குறைந்தது 2000 ரூபாய் நாளொன்றிற்கு சம்பாதிப்பார்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் ஏமாற்றி வாழ்வதல்ல குறைந்தது 1000 உறியக்காரர்கள் இருக்கிறார்கள்..

மட்டையிலிருந்து வரும் நாரை பிரித்தெடுக்கும் கம்பெனிகள் 600 க்கு மேல் உள்ளன ஒவ்வொரு கம்பெனிக்கும் குறைந்தது பத்து பெண் தொழிலாளர்கள் ஆவ்ரேஜாக மாதம் 8000 ரூபாய் சம்பளம் அந்த வகையில் 10000 பெண்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு..

அதேபோல் மட்டையிலிருந்து வரும் தூளை பித்து கம்பெனிகள் எக்ஸ்போர்ட் செய்வதன் மூலம் பயனடையும் தொழிலாளர்கள் 2000 பேர்

ஒவ்வொரு தென்னை மட்டை கம்பனிக்கும் குறைந்து இரண்டு மட்டை லோடு லாரிகள் என்றாலும் 1000 லாரிகள் ஆயிரம் டிரைவர்களுக்கு வேலை வாய்ப்பு..

இப்படி குறைந்தது 10000 பேரை பெரும்பாலும் பெண்கள் யாரிடமும் கையேந்தாமல் அடிமையாக இல்லாமல் எந்த வித கட்டுப்பாடுமின்றி விரும்பிய இடங்களுக்கு சென்று உழைத்து தங்களது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வைத்தது தென்னை..

இதனால் சாமானிய மக்களிடம் கல்வி பொருளாதாரம் முன்னேறி அவனவனுக்கு பிழைப்பை பார்க்கவே நேரம் இருந்ததால் வட மற்றும் தென் மாவட்டங்களைப் போல் எந்த விதமான சாதி மத சண்டைகள் கலவரங்களுக்கும் வேலையே இல்லாமல் அமைதியான சமூகத்தை ஒரே ஒரு மரவகையான தென்னைமரம் கட்டமைத்தது..

இன்று ஒரு புயல் வந்து அத்தனையையும் சிதைத்து சமூக கட்டமைப்பையே ஆட்டம் காண வைத்துள்ளது..

நாம் கொடுக்கும் நிவாரணங்கள் அரசு கொடுக்கும் உதவிகள் என்பது ஒரு துரும்பிற்கு கூட சமமாகாது கண்ணீரை துடைக்கும் வேலை மட்டுமே நாம் செய்வது குற்றுயிராய் கிடக்கும் சமூகத்தை எம்மக்கள் எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார்கள் என்பதில் இருக்கிறது எம் விவசாய பெருங்குடி மக்களின் பலம்..

மத்திய மாநில அரசுகள் இதில் அரசியல் செய்யாமல் பேரிடராக அறிவித்து கரம் கொடுக்க வேண்டியது மிகப்பெரிய கடமை..

மீண்டெழுவோம் விவசாயிகளாக..

-ராஜா 

by Swathi   on 05 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.