LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் வணிக வாய்ப்பை வழங்கியது கூகுள் ..

 

தமிழில் ஆயிரக்கணக்கில் இணையதளங்கள், வலைப்பூக்கள் இருந்தாலும் இதுவரை தமிழ் மொழி கூகுள் நிறுவனத்தால் அவர்களது ‘AdWords’, ‘AdSense’ ஆகியவற்றில் அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ் இணையதளங்களில் கூகுள் ‘AdSense’ விளம்பரத்தை இணைத்தால் அங்கீகரிக்கப்படாத மொழி என்று சொல்லி தொடர்ந்து அந்த கூகுள் கணக்கு முடக்கப்படும் நிலை இருந்துவந்தது.. இதற்காக பல தமிழ் ஆர்வலர்கள், தமிழ் இணையதள உரிமையாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தனர் ..
இந்திய மொழிகளில் இதுவரை இந்தி மற்றும் பெங்காளி ஆகிய இரு மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் பிப்ரவரி 9, 2018 அன்று கூகுள் தமிழ் மொழியை 41-வது மொழியாகத் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
‘இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அதில், இணையத்தில் பகிரப்படும் இந்திய மாநில மொழியிலான உள்ளடக்கத்தில் 42% தமிழ் என்ற அடிப்படையில் தமிழ் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழுக்கு அடுத்ததாக 39% இந்தி அதனையடுத்து கன்னடம் இருப்பததாக  அதில் கண்டறியப்பட்டது. 
இதன்படி தமிழர்கள் இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழி தமிழாக இருப்பதால், அவர்களுக்கு விளம்பரங்களை சரியாக கொண்டு சென்று சேர்க்கவும், கூகுள் விளம்பரத்தை அதிகப்படுத்தவும் இந்த முடிவு பயன்படும். 
இதனால் என்ன பயன்? 
இதுவரை இணையதளம், வலைப்பூ நடத்துபவர்கள் தமிழில் நடத்தினால் எத்தனை லட்சம் பேர் வாசகர்களாக இருந்தாலும் எவ்வித பயனும் இல்லாமல் இருந்தது.  இதனால் நூற்றுக்கணக்காண  தமிழ் இணையதளங்கள் மூடப்படுவதும், ஆங்கிலத்திற்கு செல்வதும், புதிய தமிழ் இணைய தளங்கள் நடத்துவது பயனற்றது என்ற நிலையம் இருந்துவந்தது. இனி இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் ஆங்கிலத்தில் இணையதளம் நடத்தினால் என்ன பயனோ அதே அளவில் தமிழில் நடத்தினாலும் கூகுள் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
தமிழை கூகுள் அங்கீகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் கடந்த பத்தாண்டுகளாகப் பலர் ஈடுபட்டுவந்தாலும் ‘ஆட்சென்சின்’ சரியான திறவுகோலைக் கண்டுபிடித்தவர் கொழும்பைச் சேர்ந்த ஈழத் தமிழர் விக்டர். சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொலி டிரெண்டிங் ஆனது.
கொழும்பில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைவராகச் செயல்பட்டுவரும் இவர், 2016-ம் ஆண்டின் ‘உலகத் தொழிலதிபர் மாநாட்டில்’அன்றைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். அப்போது தான் சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் தமிழ் இணைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.
“தமிழில் இயங்கும் இணையதளங்கள் பெரிய அளவில் இணையவாசிகளைக் கவராது என இத்தனை காலமாக கூகுள் நினைத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகில் ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதையும் அதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இணையத்தைத் திறம்படப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி ஆட்சென்ஸுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.
அது மட்டுமல்லாமல் சுந்தர் பிச்சையுடன் நேரில் அறிமுகம் கிடைத்ததால் ஆட்சென்ஸ் தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டாண்டுகளாக அவருக்கு டிவீட் செய்துகொண்டே இருந்தேன். அதற்க்கான பலன் கிடைத்துவிட்டது என நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 
இனித் தமிழ் இணையதளங்களுக்கு கூகுளே விளம்பரங்களைத் தேடிக் கொடுக்கும். தமிழிலேயே விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணமாக, கல்வி சார்ந்த கட்டுரைகளை ஒருவர் தன்னுடைய வலைப்பூவில் தமிழில் எழுதி, நிறைய பார்வையாளர்கள் கிடைத்தால்,  அவர் எழுதும் கல்வி  தொடர்புடைய விளம்பரங்களை கூகுளே வாங்கி அவருடைய வலைப்பூவில் வெளியிடும். இதன்மூலம் வருவாய் ஈட்டலாம்” என்கிறார் விக்டர்.
இது இணைய உலகில் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்கிறார்கள் பல  தமிழ் இணையதள உரிமையாளர்கள் .. 
கூகுளில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்:
https://support.google.com/adsense/answer/9727?hl=en

தமிழில் ஆயிரக்கணக்கில் இணையதளங்கள், வலைப்பூக்கள் இருந்தாலும் இதுவரை தமிழ் மொழி கூகுள் நிறுவனத்தால் அவர்களது ‘AdWords’, ‘AdSense’ ஆகியவற்றில் அங்கீகரிக்கப்படவில்லை. தமிழ் இணையதளங்களில் கூகுள் ‘AdSense’ விளம்பரத்தை இணைத்தால் அங்கீகரிக்கப்படாத மொழி என்று சொல்லி தொடர்ந்து அந்த கூகுள் கணக்கு முடக்கப்படும் நிலை இருந்துவந்தது.. இதற்காக பல தமிழ் ஆர்வலர்கள், தமிழ் இணையதள உரிமையாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தனர் ..


இந்திய மொழிகளில் இதுவரை இந்தி மற்றும் பெங்காளி ஆகிய இரு மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் பிப்ரவரி 9, 2018 அன்று கூகுள் தமிழ் மொழியை 41-வது மொழியாகத் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


‘இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. அதில், இணையத்தில் பகிரப்படும் இந்திய மாநில மொழியிலான உள்ளடக்கத்தில் 42% தமிழ் என்ற அடிப்படையில் தமிழ் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழுக்கு அடுத்ததாக 39% இந்தி அதனையடுத்து கன்னடம் இருப்பததாக  அதில் கண்டறியப்பட்டது. இதன்படி தமிழர்கள் இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழி தமிழாக இருப்பதால், அவர்களுக்கு விளம்பரங்களை சரியாக கொண்டு சென்று சேர்க்கவும், கூகுள் விளம்பரத்தை அதிகப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இதனால் யாருக்கு என்ன பயன்? 

இதுவரை இணையதளம், வலைப்பூ நடத்துபவர்கள் தமிழில் நடத்தினால் எத்தனை லட்சம் பேர் வாசகர்களாக இருந்தாலும் எவ்வித பயனும் இல்லாமல் இருந்தது. எவ்வித வருமானமும் இல்லாமல் , சமூகசேவையாக செய்துவரும் நிலை இருந்தது. இதனால் நூற்றுக்கணக்காண  தமிழ் இணையதளங்கள் மூடப்படுவதும், ஆங்கிலத்திற்கு மாறுவதும், புதிய தமிழ் இணைய தளங்கள் நடத்துவது பயனற்றது என்ற நிலையும் இருந்துவந்தது. இனி இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் ஆங்கிலத்தில் இணையதளம் நடத்தினால் என்ன பயனோ அதே அளவில் தமிழில் நடத்தினாலும் கூகுள் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


தமிழை கூகுள் அங்கீகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் கடந்த பத்தாண்டுகளாகப் பலர் ஈடுபட்டுவந்தாலும் ‘ஆட்சென்சின்’ சரியான திறவுகோலைக் கண்டுபிடித்தவர் கொழும்பைச் சேர்ந்த ஈழத் தமிழர் விக்டர். சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொலி டிரெண்டிங் ஆனது. இதுகுறித்து வலைத்தமிழ் அவருடன் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தது மேலும், செய்தியும் வெளியிட்டிருந்தது.


கொழும்பில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைவராகச் செயல்பட்டுவரும் இவர், 2016-ம் ஆண்டின் ‘உலகத் தொழிலதிபர் மாநாட்டில்’அன்றைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். அப்போது தான் சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் தமிழ் இணைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார். 
“தமிழில் இயங்கும் இணையதளங்கள் பெரிய அளவில் இணையவாசிகளைக் கவராது என இத்தனை காலமாக கூகுள் நினைத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகில் ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதையும் அதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இணையத்தைத் திறம்படப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி ஆட்சென்ஸுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அது மட்டுமல்லாமல் சுந்தர் பிச்சையுடன் நேரில் அறிமுகம் கிடைத்ததால் ஆட்சென்ஸ் தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டாண்டுகளாக அவருக்கு டிவீட் செய்துகொண்டே இருந்தேன். அதற்க்கான பலன் கிடைத்துவிட்டது என நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 


இனித் தமிழ் இணையதளங்களுக்கு கூகுளே விளம்பரங்களைத் தேடிக் கொடுக்கும். தமிழிலேயே விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணமாக, கல்வி சார்ந்த கட்டுரைகளை ஒருவர் தன்னுடைய வலைப்பூவில் தமிழில் எழுதி, நிறைய பார்வையாளர்கள் கிடைத்தால்,  அவர் எழுதும் கல்வி  தொடர்புடைய விளம்பரங்களை கூகுளே வாங்கி அவருடைய வலைப்பூவில் வெளியிடும். இதன்மூலம் வருவாய் ஈட்டலாம்” என்கிறார் விக்டர்.


இது இணைய உலகில் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்கிறார்கள் பல  தமிழ் இணையதள உரிமையாளர்கள் .. 


கூகுளில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்:https://support.google.com/adsense/answer/9727?hl=en

by Swathi   on 02 Mar 2018  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் -முக்கிய அறிவிப்புகள் 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் -முக்கிய அறிவிப்புகள்
முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
காவிரி பிரச்சினையில்  தமிழகக்  கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு ஒரே அணியில் நிற்பது வரவேற்கத்தக்க ஒன்று .. காவிரி பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு ஒரே அணியில் நிற்பது வரவேற்கத்தக்க ஒன்று ..
இன்று தாய்மொழி தினம் ... தமிழ் நமது அடையாளம் .. இன்று தாய்மொழி தினம் ... தமிழ் நமது அடையாளம் ..
தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில் ஈரோட்டில் நடந்தேறியது.. தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில் ஈரோட்டில் நடந்தேறியது..
வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் இரு நூல்கள் வெளியிடப்பட்டது.. வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் இரு நூல்கள் வெளியிடப்பட்டது..
தகடூர் கோபியின் மறைவு! தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு! தகடூர் கோபியின் மறைவு! தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு!
டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
கருத்துகள்
06-Mar-2018 10:51:05 Ramesh.,R said : Report Abuse
magizchi!vaiga tamil!
 
03-Mar-2018 13:57:39 ம.கி.சுப்ரமணியன் said : Report Abuse
இது தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி; கூட, இந்த வெற்றிக்கு பாடுபட்ட 'வலைத்தமிழ்' செய்த முயற்சிகட்கும் வெற்றியாக இதைக் கருதுகிறேன். இவர்கள் தவிர, விடுபட்ட மற்றோருக்கும் பாராட்டுக்கள். எல்லோர் இதயங்களும் பூரிப்பு அடைகின்றது என்று சொல்லவும் வேண்டுமா? இதை முன்பாகவே செய்திருக்கவேண்டும். நன்று, தாமதமானாலும் இப்போதாவது கிடைத்தற்கு. வாழ்த்துக்கள். ஒரு தமிழ் மொழிப்பிரியன், ம.கி.சுப்ரமணியன் யு.எஸ்.ஏ.
 
03-Mar-2018 04:47:13 ASHOKKUMAR said : Report Abuse
nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.