LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ? என்னென்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் ?

தனிக் குடும்பமாக வாழும் இந்திய குடிமக்கள்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை பெற தகுதி உள்ளது. 


குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம் எங்கு கிடைக்கும் ?


தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் நகல் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்


மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்


விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?


அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [TSO] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.


விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?


விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.


தேவையான ஆவணங்கள் :


1. இருப்பிட சான்று


2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை


3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]


4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [TSO] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.


5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.


6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.


7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.


மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?


1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.


2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.


3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.


புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?


ரூ 5 /- கட்டணத்தை அரசு நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.


அணுக வேண்டிய முகவரி :


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [DSO] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.


மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [TSO] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

 

நீங்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பத்து உரிய கால அளவிற்குள் கிடைக்க வில்லை என்றால், தகவல் பெரும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி உங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். 

by Swathi   on 21 May 2014  11 Comments
Tags: How to Apply Ration Card   Ration Card   Kudumba Attai   ரேஷன் கார்டு   குடும்ப அட்டை        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
27-Jan-2019 15:49:40 காளி ராஜ் said : Report Abuse
ரேஷன் கார்டு பெயர் நீக்க
 
10-Oct-2018 11:24:29 மாதையன் said : Report Abuse
நான் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் துட்டம்பட்டி பைபாஸ் லஞ்சம் கேட்கும் திறன் ஓமலூர் ஈ சேவை மைய்ய அதிகாரிகள் என்னிடம் அனைத்து ஆதாரங்கள் உல்லது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிரேன்
 
14-May-2018 06:13:41 srinivasan said : Report Abuse
நான் 2017 ல ஜூலை மாதம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அப்ளை பண்ண ஆகஸ்ட் மாதம் approved மெசேஜ் வந்தது . ஸ்மார்ட் கார்டு அக்டோபர் மாதம் வந்தது. ரேஷன் கடைக்கு போனேன். அங்கு ரேஷன் கடைக்காரர் அரிசி கிடைக்காது என்றார் . சர்க்கரை மட்டும் தான் கிடைக்கும். என்ன செய்யலாம் என்றார். நான் என்ன செய்வது.நான் அரிசி கார்டு,க்கு தான் அப்ளை செய்தேன் . நானோ கூலிக்கு நெசவு செய்கிறேன். நான் என்ன செய்வது கடவுளே. நீங்கள் தான் வழி சொல்லுங்கள்.
 
10-Mar-2017 02:41:36 Ravikumar said : Report Abuse
Sir love marriage pannunavanga erandu kudupathalaiyum resan cardula peyar neekkam seiya muduyalana yeppadi ne w card apply pannuvathu
 
19-Aug-2016 23:45:09 ஜுபைர் அலி said : Report Abuse
வணக்கம் ஐயா , நான் என்னன்னுடிய குடும்ப அட்டை பிரவேண்டும் நான் எப்படி ஒன்லைன் அப்ளை பண்ணவேண்டும் நன்றி ஜுபைர் அலி
 
08-Oct-2015 06:58:12 sajitha said : Report Abuse
Puthusa vote id apply panna ration card kekranga,ration card apply panna voter id kekranga,random illathavanga Enna than panrathu???????.......
 
07-Jan-2015 03:31:27 மஞ்சுளா said : Report Abuse
ஹொவ் டு அப்பலி மிஸ்ஸிங் ரேஷன் கார்டு ப்ளீஸ் டெல் தி இந்பொர்மதிஒந்
 
02-Jan-2015 10:14:30 RAMKUMAR said : Report Abuse
good
 
25-Nov-2014 02:34:47 shaikmajeed said : Report Abuse
நாஇன் நியூ குடும்ப அட்டை எனக்கு வானுஇம்
 
15-Nov-2014 02:10:59 சிராஜுதீன் said : Report Abuse
நான் ரேஷன் கார்டு விண்ணப்பித்து ஒன்னரை வருடம் ஆகிறது மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தமிழக முதல்வர் வரை புகார் அளித்து விட்டேன் கிடைக்க வில்லை மேற்கொண்டு என்ன செய்வதி ?
 
17-Jul-2014 19:56:15 sathish kumar.R said : Report Abuse
Sir / medam My father and mother death. Sir I want new card please help me sir. my
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.