LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.

ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்தது.

 

இது கடந்த மார்ச் 11-ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இதற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஒடிஷாவில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவு என்றழைக்கப்படும் சிறிய தீவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

 

 

இந்தியாவுக்குப் பெரிய சாதனை

 

அக்னி-5 ‘எம்.ஐ.ஆர்.வி’ எனப்படும் ‘மல்டிபிள் இன்டிபென்டெண்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி’ தொழில்நுட்பத்துடன் கூடியது. இது பல இலக்குகளைத் தாக்குவதற்கான ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் ஒரே ஏவுகணையைக் குறிக்கும்.

 

உலகில் ஒரு சில நாடுகளே இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன. இது இந்தியாவுக்கு ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

 

இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, ஒரு நாடு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல இலக்குகளை ஒரே ஏவுகணை மூலம் குறிவைத்துத் தாக்க முடியும்.

 

எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் என்றால் என்ன?

 

அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

 

இந்தியாவின் நீண்ட காலப் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டால் அக்னி-5 நாட்டுக்கு மிக முக்கியமானது.

 

அக்னி-5 கிட்டத்தட்ட முழு ஆசியாவையும், சீனாவின் முனையில் இருக்கும் வடக்குப் பகுதிகளையும், ஐரோப்பாவின் சில பகுதிகளையும் சென்று தாக்கும் அளவுக்குத் திறன்வாய்ந்தது.

 

முன்னதாக அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான ஏவுகணைகள் 700கி.மீ முதல் 3,500கி.மீ தூரம் மட்டுமே சென்று தாக்கும் திறன் கொண்டிருந்தன.

 

தனது இலக்கை ஒரு சிறிய தவறும் இல்லாமல் சென்று தாக்கும் வகையில் அக்னி-5 இல் உணர்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று இந்தியா கூறுகிறது.

 

இந்தியாவில் 1990 முதல் அக்னி ஏவுகணைகள் உள்ளன. அப்போதிருந்து அதன் நவீன வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

அக்னி-5 ஏவுகணையில் உள்ள எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது, ஆனால் இப்போது வரை அது சில நாடுகளில் மட்டுமே உள்ளது.

 

அக்னி-5 அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது.

 

இதுவரை எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகள் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஏவுகணைகளை நிலத்தில் அல்லது கடலில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவ முடியும்.

 

இதே வகையான ஏவுகணை அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. இஸ்ரேலிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது, அல்லது அதை உருவாக்க முயன்று வருகிறது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.

 

ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பத்தை உருவாக்குவது மிகவும் கடினம். அதனால்தான் சில நாடுகளிடம் மட்டுமே இது உள்ளது. இதை உருவாக்க, பெரிய ஏவுகணைகள், சிறிய குண்டுகள், சரியான வழிகாட்டுதல், மற்றும் பறக்கும் போதே குண்டுகளை விடுவிக்கும் திறன் ஆகியவை தேவை.

 

1970- ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருந்தது. அதன்பிறகு சோவியத் ஒன்றியமும் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்தப் படியலில் இந்தியா புதிதாக இணைந்துள்ளது.

 

இந்தியாவிடம் இருக்கும் அக்னி ஏவுகணைகளின் திறன் என்ன?

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைகள் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

 

700கி.மீ. தூரம் வரை செல்லக்கூடிய அக்னி-1 ஏவுகணையிலிருந்து, 5,000கி.மீ. வரை செல்லக்கூடிய அக்னி-5 வரை இது முன்னேறியிருக்கிறது.

 

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், டிஆர்டிஓ அக்னி-P (ப்ரைம்) ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. இது 1,000கி.மீ. முதல் 2,000கி.மீ. வரையிலான தூரம் செல்லக்கூடியது. இதனைச் சாலையிலிருந்தோ, ரயில் தளத்தில் இருந்தோ ஏவ முடியும்.

 

2007-ஆம் ஆண்டு அக்னி-5-ஐ உருவாக்குவதாக இந்தியா அறிவித்திருந்தது.

 

அக்னி-5-இன் முதல் வெற்றிகரமான சோதனை 2012-ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அப்போது டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் வி.கே.சரஸ்வத், இந்தியா எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

 

அக்னி-5 திட்டத்தின் வெற்றியில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

 

இதுவரை இந்தியப் பாதுகாப்புப் படைகளிடம் இருக்கும் அக்னி-1 700கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-2 2,000கி.மீ. செல்லக்கூடியது, அக்னி-3 2,500 கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-4 3,500 கி.மீ. செல்லக்கூடியது.

 

அக்னி-5 நீண்ட தூரம் செல்லக்கூடியதாலும், அணுசக்தி திறன் கொண்டிருப்பதாலும், சீனாவை மனதில் வைத்தே இந்தியா இந்த ஏவுகணையை வடிவமைக்காதுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

அதே நேரத்தில், பாகிஸ்தான் போன்ற நெருங்கிய இலக்குகளுக்குப் பழைய அக்னி ஏவுகணைகள் போதுமானது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

by Kumar   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.