LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!

செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடுத்த பயணத்தில் இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோனின் சாயலில் ஹெலிக்காப்டர்களை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2021-ம் பிப்ரவரியில் நாசாவின் இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோன் செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது, இதன்மூலமாக செவ்வாய் வளிமண்டலத்தில் விமானத்தைத் தரையிறக்குவது சாத்தியமான விஷயம் என்பதை நாசா நிரூபித்துக்காட்டியிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (ISRO) தற்போது இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோனின் சாயலில் ஹெலிகாப்டர்களை செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

 

மங்கள்யான் லாண்டர்

 

அதன்படி, எதிர்வரும் 2030-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் மங்கள்யான் லாண்டருடன் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை செவ்வாய்க்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில் செவ்வாய்க்கு ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலமானது 2014-ம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர் 08 ஆண்டுகள் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இந்த விண்கலம் கடந்த 2022 ஆம் ஆண்டு பூமியுடனான தனது தொடர்பினைத் துண்டித்துக்கொண்டது.

 

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு

எவ்வாறாயினும், இஸ்ரோ தனது முயற்சிகளைக் கைவிடாமல் மீண்டும் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது, இப்போது விண்கலத்துடன் இணைந்ததாக ஹெலிகொப்டரயும் செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது.

 

இந்த முயற்சியில் பறக்கும் ட்ரோனுக்கான திட்டமிடப்பட்ட அறிவியல் பேலோடுகளில் வெப்பநிலை சென்சர், ஈரப்பதம் சென்சர், அமுக்க சென்சர், காற்றின் வேக சென்சர், மின் புல சென்சர் மற்றும் தூசி ஏரோசோல்களின் செங்குத்து விநியோகத்தை அளவிடக்கூடிய தூசு சென்சர் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு ட்ரோனுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தவிரவும் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆராய்வதற்காகச் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 328 அடி (100 மீட்டர்) வரை பறக்கும் திறன் கொண்டதாக இந்த ட்ரோன் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 06 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.