LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமீரகத்தில் VPN பயன்படுத்துவது சட்ட விரோத செயலா..?அதற்கான தண்டனை?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களைச் செய்ய நீங்கள் VPN பயன்படுத்துகிறீர்களா?? உங்களுக்கான பதிவு இதுதான்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் VPN எனப்படும் விர்ச்சுவல் பிரைவேட் (Virtual Private Networks) பயன்பாடு உலகளவில் பார்க்கும்போது அமீரகத்தில் மிகவும் உயர்ந்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக குடியிருப்பாளர்களில் பத்து நபர்களுக்கு நான்கு பேர் வீதம் VPN ஐ பதிவிறக்கம் செய்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் VPN பயன்பாடு சட்டப்பூர்வமானது என்றாலும், இது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் அதன் உள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படலாம். அதே சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடைசெய்யப்பட்ட காலிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளை அணுக அல்லது அதனைப் பதிவிறக்கும்போது அது சட்டவிரோதமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு 2 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

அட்லஸ் VPN தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களால் 14 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான மதிப்புள்ள 5.58 மில்லியன் VPN அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

ஒரு தவறான முகவரி 

 

"ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வலைத்தளங்கள், காலிங் அப்ளிகேஷன், கேமிங் அப்ளிகேஷன் போன்றவற்றிற்கான அணுகலைப் பெற IP முகவரியை மறைத்து VPN பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் குற்றத்திற்கு ஒப்பானது" என்று ஆஷிஷ் மேத்தா & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் ஆஷிஷ் மேத்தா கூறியுள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரக சைபர் சட்டத்தின் கீழ், ஒரு தவறான முகவரி (IP address) அல்லது மூன்றாம் தரப்பு முகவரி (third party address) அல்லது ஒரு குற்றத்தைச் செய்ய அல்லது அதன் கண்டுபிடிப்பைத் தடுக்க வேறு வழிகளைப் பயன்படுத்தி தவறான கணினி நெட்வொர்க் நெறிமுறை  (fraudulent computer network protocol address) பயன்படுத்துபவருக்குத் தற்காலிகச் சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம் முதல் 2 மில்லியன் திர்ஹம் வரையிலான அபராதம் அல்லது இந்த இரண்டில் ஏதேனும் ஒரு தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 04 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.