LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பாக்கியம் ராமசாமி

ஐயோ பாவம் டி.வி. பெட்டி

 

நண்பன் அனந்தமூர்த்தி வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே கண்ட காட்சி என்னைப் பிரமிக்க வைத்தது.
கத்திரி வெய்யில் கூட அவ்வளவு படுத்தாமல் போய் விட்டதே, நண்பருக்கு என்ன ஆச்சு? தடுக்க முயன்றேன்.
“விடுப்பா என்னை? தடுக்காதே. நீயும் வீணாக அடிபடுவே… நகரு..”
மூர்க்கத்தனமாக இருந்தான். கையில் பெரீய கொட்டாப்புளி சுத்தி. எங்கிருந்தோ வாடகைக்கு வாங்கி வந்திருக்க வேண்டும்.
வீட்டுக்கு எதிரே அடுக்கு மாடி உருவாகிக் கொண்டிருந்தது. கட்டுமானக் கம்பிகளை வெட்டும் பயங்கர சுத்தி அங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
கஷ்டத்துடன் அதைத் தூக்கிச் சுழற்றி பொதேல் பொதேல் என்று டி.வி. பெட்டி மீது போட்டுக் கொண்டிருந்தான்.
முதலாவது அடியிலேயே அதன் சகல பாகங்களும் பொடிப் பொடியாகிவிட்டது. ஆனாலும் சந்தேகத்துக்கிடமில்லாமல் அதைக் கொல்ல மேலும் பல அடிகளை அதற்குக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
‘கோபம் தணியட்டும்’ என்று காத்திருந்தேன்.
ஒரு மாசத்துக்கு முன்தான் நானும் அவனும் பழைய டி.வி.யைக் கொடுத்துவிட்டு தி.நகர் போய் புதுசு வாங்கி வந்தோம்.
அதைப் போய் ஜல்லி உடைக்கிறாப்பலே உடைச்சு நொறுக்கலாமா? நொறுக்கியாச்சு.
“சுத்தியைத் தந்துட்டு வந்துடறேன்…” என்று ஜங்கென்று தோளில் அதை வைத்துக் கொண்டு பரசுராமர் போஸில் நடந்து எதிர் மனைக்குக் கொண்டு போய் அதைத் தந்துவிட்டு, அதற்கான வாடகையாக ஐம்பது ரூபாயையும் தந்துவிட்டுத் திரும்பினான்.
“என்னடா சமாசாரம்?” என்று நான் கேட்பதற்கு முன் அவன் முந்திக் கொண்டான். “டேய் சாமி! நீ சொல்லுடா ஒரு மனுஷன் எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கறான். குழந்தை குட்டி பெற்றுக்கிறான்?”
நான் யோசித்தேன். நானும் அனந்த மூர்த்தி மாதிரி குடும்பஸ்தனே தவிர இந்தக் கேள்வியைச் சிந்தித்ததில்லை. ஆனாலும் க்விஸ் மாஸ்டர் கையை நீட்டி விட்டார். பதில் சொல்லாமலிருக்கலாமா?
“எல்லாம் ஒரு சந்தோஷத்துக்குத்தான்.”
“சரியாச் சொன்னே. சந்தோஷம் எங்கேருந்து வருது?”
“குடும்பத்திலிருந்து…”
“குடும்பம்னா யாரு?”
“குடும்பம்னா யார்னு எனக்குப் புரியாதா? ஆனால் நீ டி.வி.யை சுத்தியாலே நொறுக்கினதுதான் புரியலை…”
“சொல்றேன். டி.வி.யாலே குடும்பத்திலே சந்தோஷமா? சண்டையா? நீ சொல்லு.”
“பட்டிமன்றத்திலே இந்தத் தலைப்பு வந்திருக்கலாம்னு தோன்றுகிறது. வராட்டால், வருவதற்கு சான்ஸ் உண்டு.”
“பட்டிமன்றம்! பட்டிமன்றம்! பட்டிமன்றம்!”
நண்பன் ஏலம் விடுவது போலவும், மாஜிஸ்திரேட் கோர்ட் பியூன் குரல் கொடுப்பது போலவும் கூவினான்.
“பட்டிமன்றங்களை ஒழிக்கணும் சாமி.”
“அட ராமா!” என்றேன். “அது உன்னை என்ன பண்ணித்து? அதற்காகவா டி.வி.யை உடைச்சிட்டே…”
“பல காரணங்களிலே அதுவும் ஒரு காரணம். என்ன பட்டி மன்றம் வேண்டியிருக்கிறது? வெங்காய பட்டிமன்றம்! எதுக்கெடுத்தாலும் பட்டிமன்றம். செத்தால் தூக்கறதுக்கு நாலு பேரை ரெடி பண்றாப்பலே, பட்டி மன்றம்னா யாராவது அஞ்சு பேரை ரெடி பண்ணிடறாங்க. நாலு பேர் வழக்காட. ஒருத்தர் நடுவர்…”
“சரி. பின்னே எப்படித்தான் பிரசினைகளை ஆராயறது?”
“போடா!” என்றான் வெறுப்புடன். “ஒரு விவஸ்தை இல்லாமல் எல்லாத்துக்கும் பட்டி மன்றமா? வெய்யில் காலத்துக்கு ஏற்றது ஐஸ் க்ரீமா? இள நீரா? இது ஒரு பட்டிமன்றத் தலைப்பு. ஐஸ் க்ரீம் அணின்னு ரெண்டு பேர். இளநீர்அணின்னு ரெண்டு பேர்.. நடுவர்னு ஒரு பேர்வழி…”
“சரி. சுவாரசியமா இருந்தால் கேட்டுத் தொலைச்சிட்டுப் போயேன். இல்லாட்டா வைக்காதே..”
“அங்கேதாண்டா குடும்பம் வந்து உதைக்குது. வீட்டிலே அவள் ஒரு பட்டிமன்ற ஆளு!”
“அப்படீன்னா?”
“பேச ஆள் வராத அடாஸ் பட்டி மன்றத்திலெல்லாம் பேசப் பேரு குடுத்துடுவா? காலேஜிலே லெச்சர்ரராக ரெண்டு மாசம் எந்தக் காலத்திலோ இருந்திருக்கிறாள்.
“உன் மனைவிக்கு ஒரு பெருமைன்னா அது உனக்குப் பெருமைதானே?”
“வெங்காயம்! இன்னைக்கி ஒரு பட்டி மன்றத்திலே சப்ஜக்ட். ‘பொண்டாட்டி புடவையை புருஷன் துவைப்பது இகழ்ச்சிக்கு உரியதா, புகழ்ச்சிக்கு உரியதா?’ ஒரு அபத்த ஆள் – புகழ்ச்சிக்கு உரியது கட்சிக்காரர் – பட்டிமன்றத்திலேயே எல்லார் எதிரிலேயும் ஒரு வாளித் தண்ணீர் வெச்சுண்டு, ரெடியாக் கொண்டு வந்த மனைவியின் புடவையைத் துவைக்க ஆரம்பிச்சுட்டார். ‘மனைவி புடவையைத் துவைப்பது மட்டுமல்ல, துவைத்து அலசுவது மட்டுமல்ல, துவைத்து அலசி உலர்த்துவது மட்டுமல்ல – அதைத் துவைத்து அலசி உலர்த்தி, மடித்து வைப்பது மட்டுமல்ல. அதைத் துவைத்து அலசி உலர்த்தி, மடித்து வைக்கும் போது முகர்ந்து பார்க்கிறோமே அது கூட மகிழ்ச்சியான சமாசாரம்தான்!’ என்று சொன்னான். கூடியிருந்த பட்டிமன்ற ரசிகப் பட்டாளம் கையைத் தட்டோ தட்டென்று தட்டி…. கூட்டத்தைக் கூட வாடகைக்குப் பிடிப்பாங்கன்னு தோணுது.”
“இப்படி வெறுத்துண்டாவது அதைப் பார்ப்பானேன். மூடிடறது.”
“நான் மூடினால் அந்தப் பிசாசு விட்டால்தானே. அவள் எந்த பட்டிமன்றமானாலும் பார்த்தே தீருவாள். வேற மாற்ற முடியாது! ரிமோட்டைத் தூக்கி விட்டெறிஞ்சேன். அதுலே ஒரு ரெண்டாயிரம் நஷ்டம்…”
“பார்க்க எத்தனையோ சானல் இருக்கு. ராத்திரியிலே மனைவி தூங்கின பிறகு அமைதியாப் பாரேன்.”
“அந்த இழவையும்தான் பார்க்கிறேனே… பதினொரு மணிக்கு மேலே ராப்பிச்சைக்காரன் மாதிரி சானல் சானலா அமுத்திண்டு, பெண்டாட்டிக்குச் சத்தம் கேட்கக் கூடாதேன்னு ‘மியூட்’ பண்ணிண்டு – பார்த்தால் அத்தனை சானலிலும் ஏதாவது பழைய சினிமாப் பட டான்ஸ்… தேசல் தேசலா ஆடறதுகள். வேற மொழி சானல்களுக்குப் போய்த் தொலைக்கலாம்னு கன்னடம், மலையாளம், இந்தின்னு போனாலும் காசிக்குப் போயும் கருமம் தொலையாத சமாசாரம்.”
“பயனுள்ள எத்தனையோ சானல் இருக்கே. டிஸ்கவரி சானல், ஜியாக்ரபிகல் சானல்.”
“அதுலே பாதி நேரம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணிடறா…. முக்கியமா காட்டுப் பிராணிகள் வாழ்க்கையைக் காட்டறேன் பேர்வழின்னு – பயங்கரமாக் காட்டிடறானுங்க.. ரெண்டு புலியைச் சேர்ந்தாப்பலே பார்த்தால்… என்னமோ நடக்கப் போறது ரெண்டு நிமிஷத்துலேன்னு அலர்றதாக இருக்கு. குழந்தை குட்டிகளோடு பார்த்திண்டிருந்தா டபக்குனு அணைக்கணுமாயிருக்கு.
ஒவ்வொரு பிராணி இனமும் புழு, பூச்சி வகையறாவும் எப்படி செக்ஸ் பண்றதுன்னு காமெராவுலே துல்லியமாக் காட்டி மானத்தை வாங்கறாங்க.
பசங்க எதிரிலே சங்கடமாப் போயிடறது.”
“சரி. அது மாதிரி வர்ரப்ப சட்டுனு சானலை மாத்திடேன்.”
“நாசமாப் போச்சு… பசங்க விட்டால்தானே? புலி சர்க்கஸ் வந்துட்டுது! ஹை! புலி சர்க்கஸ் வந்துட்டுதுன்னு ஒரே குதூகலம்!”
“இந்த வரைக்கும் மனுஷாள் வரைக்கும் போய் மானத்தை வாங்காதிருக்கானுங்களேன்னு சந்தோஷப்படு.”
பெப்சி ‘உமா’
“அதையும்தான் வெள்ளைக்கார சானலிலே காட்டோ காட்டோன்னு காட்டிடறானே. அன்னிக்குப் பார்க்கறேன். முத்தக் காட்சியாம், முகரைக் கட்டைக்காட்சி! ஒருத்தியோட மூக்கையே வெள்ளைக்காரன் முழுசா உதட்டோடு சேர்த்துக் கவ்விண்டு – அவளுக்கு ஜலதோஷ மூக்கா இருந்தால்… உவ்வே…”
“அதெல்லாம் ஏன் பார்க்கறே?”
“நம்ம ஊர் கண்ணராவியிலேருந்து தப்பலாம்னா இப்படி வந்துடறது.”
“நீ தப்பா நினைச்சுக்காதே.. டி.வி. மேல வெறுப்பு வர்ரதுக்குக் காரணமே – அதோடு நாம இன்வால்வ் ஆறதில்லே… அதனால்தான்… அவுங்க நடத்தற நிகழ்ச்சியிலே நாமும் பங்கு கொள்ளணும். இப்போ இத்தனை வருஷமாச்சே.. இந்தக் குறிப்பிட்ட சினிமாப் பாட்டு வேணும்னு பெப்சி உமாகிட்டே நீ கேட்டிருக்கியோ.. அட்லீஸ்ட் ட்ரை பண்ணியிருக்கியோ?”
“சீ சீ! அதுக்கெல்லாம் நான் போனுக்கு செலவு பண்ண மாட்டேன். நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்கன்னு ஒரு கேள்வி. ரசிகை ‘நான் பேனு பார்த்துகிட்டிருக்கேன்னு’ சொல்லுவா. ‘பேனுங்களா? ரொம்ப சந்தோஷம்…’ ‘ஆண் பேனா பொம்பிளை பேனா?’ ஒரு பலத்த சிரிப்பு… ‘ஈறு கூடப் பார்ப்பீங்களோ?’ ‘என்னங்க… உங்களுக்குப் பார்த்து வுடணுமா..’ பெருஞ் சிரிப்பு. ‘நீங்க ரொம்பத் தமாஷாப் பேசறீங்க… என் மாமியாரு பேசணும்னு துடிக்கறாங்க…’ ‘குடுங்க’, ‘எப்படீம்மா இருக்கீங்க…. ‘உன் கூடப் பேசணும்னு நான் இருபத்து மூணு வருசமா மொயற்சி பண்றேம்மா? நீ கூடக் கிழவியாயிட்டே.. இப்பத்தான் பேச முடிஞ்சது?’ இந்த மாதிரி ஒரே வகையிலே டயலாக். சிறு பசங்களை ‘என்ன படிச்சிகிட்டிருக்கீங்க…’ ‘என்ன வேலை செய்யறீங்க….’ ‘டென்த்’ அதுக்கு ஒரு ஆச்சரியம்! சிரிப்பு! ‘ஓ! டென்த்தா!’ இதிலே ஆச்சரியம் என்ன வேண்டியிருக்கு. சிரிக்கிற சமாசாரம் என்ன இதிலே?”
அப்புறம் ‘பொழுது போக்கு என்ன’ன்னு குடையறது? அதுக்கெல்லாம் ஆச்சரியப்படறது.”
“ரொம்பத்தான் கடுப்பிலே இருக்கே…”
“ஒரு டீசன்ட்டா, பார்க்கக் குளுமையா ஒரு சமாசாரம் நம்ம டீ.வி.யிலே உண்டா? வாழ்க்கைக்கு வெறுப்பேத்தக்கூடாது. ருசி ஏற்படுத்தணும்.”
“அதுக்குத்தான் விதம் விதமாச் சமையல் சொல்லித் தர்ராங்களே…”
“வீட்டிலே சாதாரணமாச் செய்யற வத்தக்குழம்புக்கு இவ்வளவு பப்ளிஸிடியும் செய்முறை விளக்கங்களும், பளபள பாத்திரங்களும் தேவைதானா? சில இல்லத்தரசிகள் செய்கிற சமையலை விட அவங்க அலங்காரங்கள்தான் தூக்கோ தூக்கு. இதுலே வீட்டு ஆம்பிளைங்களும் சமைக்கறாங்களாக்கும்னு பிரபலங்களையெல்லாம் சமையல்காரர்களாக்கறது.”
“ஸ்போர்ட்ஸெல்லாம் பிடிக்காதாக்கும்? கிரிக்கெட், ·புட்பால்.”
“வயித்தெரிச்சல்! அதற்காகவே இன்னொரு பொட்டியை உடைக்கலாம். கிரிக்கெட்னா தோக்கறது நாமதான். ஒரு நாள் தோற்றால், ஒன்பது நாளைக்கு நாம டல் ஆயிடறோம். அதைப் பார்த்தால் பி.பி. தான் ஏறுது.”
“அரட்டை அரங்கம், அது இது…”
“அய்யே! இந்த விசு நல்லது பண்றேன் பேர்வழின்னு, பட்டி தொட்டியிலே இருக்கிற ராக்காசிங்களையெல்லாம் வீல் வீல்னு கத்த வுடறது மகா அநியாயம். ஒவ்வொரு பொம்மனாட்டியும் ஆவேசமாய் பேசறதைப் பார்த்தால், பொம்பிளை வர்க்கத்து மேலே வெறுப்பே வந்துடுது.”
“இவுங்களைக் காட்டிலும் உன் வீடு எவ்வளவோ சாதுன்னு உனக்குத் தோணியிருக்கணுமே…”
“ஆனால் நம்ம வீட்டிலும் அதைத் தெரிஞ்சிண்டு டி.வி. அளவுக்கு நாமும் கத்தணும்னு கத்த ஆரம்பிச்சிடறாள். பாயிண்ட் எதுனாக் கிடைச்சுதுன்னா கத்திக் கூவி குதறி எடுத்துடறா?”
“யோகப் பயிற்சி, தேகப் பயிற்சி இதெல்லாம் ட்ரை பண்றதில்லையாக்கும்?”
“அதையெல்லாம் பார்த்துப் பண்ணறதுக்கு வசதியா நேரம், இடம் இருக்கா? ஜட்டி, பனியன்தான் ஒரு கவர்ச்சி!”
“சோதிடத்திலே நம்பிக்கை இல்லையாக்கும்? இந்த வாரம் இந்த தினம் உங்களுக்கு இப்படி இருக்கும்னு…”
“நம்ம மூடையே அப்ஸெட் பண்ற ·பிச்சர் ஒண்ணு உண்டுன்னா அது அந்த ஜோசியப் பகுதிதான். அந்த ஜோசியக்காரன் உள்ளே செளகரியமா உட்கார்ந்துண்டு, ‘நீங்க இன்ன ராசியா?’ ‘ஜாக்கிரதையாயிருங்கோ… இந்த வாரம் ஆபீசில் தகராறு வரலாம், ஒரு விபத்து வரலாம். செலவு வரலாம், பெண்சாதி உடல்நிலை பாதிக்கப்படலாம்னு எதையாவது சொல்லி வைப்பான் – நாம அதையே நினைச்சுண்டு – நம்ம மாமூல் உற்சாகம்கூட பணால் ஆயிடறது…”
“இதெல்லாம் வேண்டாம்னுதானே நிறைய நாடகங்கள் போடறாங்க…”
“ஆமாம் ஆமாம். அதுக்காகத்தான் முக்கியமா உடைச்சேன். ஊரை ஏமாத்தறதுக்குப் பேர்தான் நாடகம்னு பேரா? மொதல்லே டைட்டில் சாங்க்னு பத்து நிமிஷத்துக்கு ஒப்பேத்திடறான். அப்புறம் ஒரு நிமிஷம் நாடகம் – ஒரு ஆசாமி டயலாக் பேசி முடிக்கறதுக்கு எப்படியும் ஒரு நிமிஷம் ஆயிடும். உடனே விளம்பரம். அது ஒரு ரெண்டு நிமிஷம். அப்புறம் நாடகம் – உடனே விளம்பரம். டிராமாவிலே நடிக்கிற பசங்கள்ளே யாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கு. பட்டை மீசை. சட்டி மூஞ்சி. கிராப்புத் தலை. அதுவும் பயங்கரமா க்ளோஸப் குடுத்து… என்ன விபரீதம்னா என் பெரிய பிள்ளை கேக்கறான். எனக்கும் பர்சனாலிடி இருக்கு… இவுங்கள்ளாம் நடிக்கறப்ப நான் ஏன் நடிக்கக் கூடாதுன்னு ஸ்டுடியோக்களைச் சுத்திண்டிருக்கான்…”
“யார் கண்டா பெரிய நடிகரா வரக் கூடும். ப்ரோக்ராம் கண்டக்ட் பண்ணறவரா வரலாம்…”
“அது மாதிரி மட்டும் வரவே கூடாது. காலேஜ் பொண்ணுங்களை வெச்சி டிஸ்கோ அது இதுன்னு கூத்தடிக்கிற காரியமெல்லாம் அவன் பண்ணக்கூடாது. யாருக்கும் வெட்கம் இல்லைன்னு ஆயிட்டுது. நம்ம தமிழ்நாட்டுப் பெண்ணுங்களை இப்படியெல்லாம் டிரெஸ் பண்ணிக்கறது, கூத்தடிக்கறதுன்னு எனக்குக் கவலை புடிச்சுப் போயிட்டுது. கடைக்குட்டி விபு இருக்காளே… அவள் டிஸ்கோ ஆடிட்டே வந்துட்டாள்…”
“காலம் முன்னேறிண்டிருக்கு. நீ ரொம்பப் பின்னால் இருக்கே. டி.வி.யெல்லாம் உன்னை மாதிரி ஆளுங்களை முன்னேத்தறதுக்கு வந்திருக்கிற கண்டு பிடிப்புகள்! உனக்கு அதைப் பயன்படுத்தி முன்னேறத் தெரியலை, தட்ஸ் ஆல்…”
“விளம்பரங்களைப் பாரு! ஒரு கூல் டிரிங்க் குடித்தால் பலம் பெற்று உலகத்தையே எடுத்து வளைச்சுடற மாதிரி காட்டறான். ஊரிலுள்ள அழகான பொண்ணுகளெல்லாம் மயங்கிக் கும்பலா கூடவே வந்துடறாப்பலே காட்டறான். இதெல்லாம் பொய்தானே? மிகைதானே?”
“நீ டி.வி.யை சுத்தியாலே உடைச்சதுகூட மிகைதான்! கோபத்தை மிகைப்படுத்திக் காட்டினே.. அது மாதிரிதான் டி.வி.யும் விளம்பரமும் எல்லாமும்…. மிகைப்படுத்தறதுதான் கலை.”
“அரசியல்லே அவ்வளவு இன்ட்ரெஸ் இல்லையாக்கும்?”
“இருந்தது. ஆனால் குழப்பிட்டாங்க…”
“யாரு?”
“ஆவூன்னா, ரெண்டு மூணு பேர் அரசியல் விவகாரத்தை அலசுறேன் பேர்வழி என்று அறுப்பாங்களே… அதுலே குழம்பிப் போயிட்டேன். உருப்படியா எதுனாத் தெரிஞ்சுக்க முடியலே. நமக்குத் தெரிஞ்ச எதையும் குழப்பி விட்டுடறாங்க…”
“என்ன ஒரே நெகடிவ் அப்ரோச்சாவே இருக்கே…”
“நெகடிவா இல்லாம எப்படி இருக்கறது. காலைல பொண்டாட்டி கோவிச்சிட்டு ஊர் போயாச்சு. பொண்ணு எவனோடயோ டிஸ்கோ ஆடப் போனவள். ரெண்டு நாளா வரலே. பையன் சின்னத்திரை டைரக்டராகப் போறேன்னு ப்ளஸ் டூ வே எழுதாமல் சுத்திகிட்டிருக்கான். என்னை நாசம் பண்ணினதை நான் விட்டு வைக்கலாமா? ஒவ்வொரு வீடா சுத்தியோடு போய் இதுங்களை உடைக்கப் போறேன் – பரசுராமர் க்ஷத்திரியர்களை ஒழிக்கப் புறப்பட்டாப்பலே சுத்தியோட புறப்படப் போறேன்…”
“எதையும் யோசனை பண்ணிச் செய். காத்தாலே தினமும் பக்திப் பாட்டு, உபன்யாசம் வருது… பாரு… கேளு…”
“நான் மூடில் இல்லே தயவு பண்ணிப் போயிட்டு அப்புறம் வா…”
“நேத்துக்கூட யாரோ ஒரு ஆனந்தா ‘டோன்ட் ரியாக்ட்’னு டி.வி.யிலே சொல்லித் தந்தார். நீ பார்க்கலையாக்கும்…”
“நீ இப்ப கிளம்பறியா இல்லை எதிரே போய் சுத்தி வாங்கிட்டு வரட்டுமா?”
“இதோ புறப்பட்டேன்!” என்று அவசரமாகப் புறப்பட்டேன்.
ஆமாம். புரோக்ராமுக்கும் பொட்டிக்கும் என்ன சம்பந்தம். ஐயோ பாவம், டி.வி. பொட்டி.

       நண்பன் அனந்தமூர்த்தி வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே கண்ட காட்சி என்னைப் பிரமிக்க வைத்தது.கத்திரி வெய்யில் கூட அவ்வளவு படுத்தாமல் போய் விட்டதே, நண்பருக்கு என்ன ஆச்சு? தடுக்க முயன்றேன்.“விடுப்பா என்னை? தடுக்காதே. நீயும் வீணாக அடிபடுவே… நகரு..”மூர்க்கத்தனமாக இருந்தான். கையில் பெரீய கொட்டாப்புளி சுத்தி. எங்கிருந்தோ வாடகைக்கு வாங்கி வந்திருக்க வேண்டும்.வீட்டுக்கு எதிரே அடுக்கு மாடி உருவாகிக் கொண்டிருந்தது. கட்டுமானக் கம்பிகளை வெட்டும் பயங்கர சுத்தி அங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும்.கஷ்டத்துடன் அதைத் தூக்கிச் சுழற்றி பொதேல் பொதேல் என்று டி.வி. பெட்டி மீது போட்டுக் கொண்டிருந்தான்.முதலாவது அடியிலேயே அதன் சகல பாகங்களும் பொடிப் பொடியாகிவிட்டது. ஆனாலும் சந்தேகத்துக்கிடமில்லாமல் அதைக் கொல்ல மேலும் பல அடிகளை அதற்குக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

       ‘கோபம் தணியட்டும்’ என்று காத்திருந்தேன்.ஒரு மாசத்துக்கு முன்தான் நானும் அவனும் பழைய டி.வி.யைக் கொடுத்துவிட்டு தி.நகர் போய் புதுசு வாங்கி வந்தோம்.அதைப் போய் ஜல்லி உடைக்கிறாப்பலே உடைச்சு நொறுக்கலாமா? நொறுக்கியாச்சு.“சுத்தியைத் தந்துட்டு வந்துடறேன்…” என்று ஜங்கென்று தோளில் அதை வைத்துக் கொண்டு பரசுராமர் போஸில் நடந்து எதிர் மனைக்குக் கொண்டு போய் அதைத் தந்துவிட்டு, அதற்கான வாடகையாக ஐம்பது ரூபாயையும் தந்துவிட்டுத் திரும்பினான்.“என்னடா சமாசாரம்?” என்று நான் கேட்பதற்கு முன் அவன் முந்திக் கொண்டான். “டேய் சாமி! நீ சொல்லுடா ஒரு மனுஷன் எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கறான். குழந்தை குட்டி பெற்றுக்கிறான்?”நான் யோசித்தேன். நானும் அனந்த மூர்த்தி மாதிரி குடும்பஸ்தனே தவிர இந்தக் கேள்வியைச் சிந்தித்ததில்லை. ஆனாலும் க்விஸ் மாஸ்டர் கையை நீட்டி விட்டார். பதில் சொல்லாமலிருக்கலாமா?“எல்லாம் ஒரு சந்தோஷத்துக்குத்தான்.”“சரியாச் சொன்னே.

 

       சந்தோஷம் எங்கேருந்து வருது?”“குடும்பத்திலிருந்து…”“குடும்பம்னா யாரு?”“குடும்பம்னா யார்னு எனக்குப் புரியாதா? ஆனால் நீ டி.வி.யை சுத்தியாலே நொறுக்கினதுதான் புரியலை…”“சொல்றேன். டி.வி.யாலே குடும்பத்திலே சந்தோஷமா? சண்டையா? நீ சொல்லு.”“பட்டிமன்றத்திலே இந்தத் தலைப்பு வந்திருக்கலாம்னு தோன்றுகிறது. வராட்டால், வருவதற்கு சான்ஸ் உண்டு.”“பட்டிமன்றம்! பட்டிமன்றம்! பட்டிமன்றம்!”நண்பன் ஏலம் விடுவது போலவும், மாஜிஸ்திரேட் கோர்ட் பியூன் குரல் கொடுப்பது போலவும் கூவினான்.“பட்டிமன்றங்களை ஒழிக்கணும் சாமி.”“அட ராமா!” என்றேன். “அது உன்னை என்ன பண்ணித்து? அதற்காகவா டி.வி.யை உடைச்சிட்டே…”“பல காரணங்களிலே அதுவும் ஒரு காரணம். என்ன பட்டி மன்றம் வேண்டியிருக்கிறது? வெங்காய பட்டிமன்றம்! எதுக்கெடுத்தாலும் பட்டிமன்றம். செத்தால் தூக்கறதுக்கு நாலு பேரை ரெடி பண்றாப்பலே, பட்டி மன்றம்னா யாராவது அஞ்சு பேரை ரெடி பண்ணிடறாங்க. நாலு பேர் வழக்காட. ஒருத்தர் நடுவர்…”“சரி. பின்னே எப்படித்தான் பிரசினைகளை ஆராயறது?”“போடா!” என்றான் வெறுப்புடன்.

 

        “ஒரு விவஸ்தை இல்லாமல் எல்லாத்துக்கும் பட்டி மன்றமா? வெய்யில் காலத்துக்கு ஏற்றது ஐஸ் க்ரீமா? இள நீரா? இது ஒரு பட்டிமன்றத் தலைப்பு. ஐஸ் க்ரீம் அணின்னு ரெண்டு பேர். இளநீர்அணின்னு ரெண்டு பேர்.. நடுவர்னு ஒரு பேர்வழி…”“சரி. சுவாரசியமா இருந்தால் கேட்டுத் தொலைச்சிட்டுப் போயேன். இல்லாட்டா வைக்காதே..”“அங்கேதாண்டா குடும்பம் வந்து உதைக்குது. வீட்டிலே அவள் ஒரு பட்டிமன்ற ஆளு!”“அப்படீன்னா?”“பேச ஆள் வராத அடாஸ் பட்டி மன்றத்திலெல்லாம் பேசப் பேரு குடுத்துடுவா? காலேஜிலே லெச்சர்ரராக ரெண்டு மாசம் எந்தக் காலத்திலோ இருந்திருக்கிறாள்.“உன் மனைவிக்கு ஒரு பெருமைன்னா அது உனக்குப் பெருமைதானே?”“வெங்காயம்! இன்னைக்கி ஒரு பட்டி மன்றத்திலே சப்ஜக்ட். ‘பொண்டாட்டி புடவையை புருஷன் துவைப்பது இகழ்ச்சிக்கு உரியதா, புகழ்ச்சிக்கு உரியதா?’ ஒரு அபத்த ஆள் – புகழ்ச்சிக்கு உரியது கட்சிக்காரர் – பட்டிமன்றத்திலேயே எல்லார் எதிரிலேயும் ஒரு வாளித் தண்ணீர் வெச்சுண்டு, ரெடியாக் கொண்டு வந்த மனைவியின் புடவையைத் துவைக்க ஆரம்பிச்சுட்டார். ‘மனைவி புடவையைத் துவைப்பது மட்டுமல்ல, துவைத்து அலசுவது மட்டுமல்ல, துவைத்து அலசி உலர்த்துவது மட்டுமல்ல – அதைத் துவைத்து அலசி உலர்த்தி, மடித்து வைப்பது மட்டுமல்ல. அதைத் துவைத்து அலசி உலர்த்தி, மடித்து வைக்கும் போது முகர்ந்து பார்க்கிறோமே அது கூட மகிழ்ச்சியான சமாசாரம்தான்!’ என்று சொன்னான்.

 

         கூடியிருந்த பட்டிமன்ற ரசிகப் பட்டாளம் கையைத் தட்டோ தட்டென்று தட்டி…. கூட்டத்தைக் கூட வாடகைக்குப் பிடிப்பாங்கன்னு தோணுது.”“இப்படி வெறுத்துண்டாவது அதைப் பார்ப்பானேன். மூடிடறது.”“நான் மூடினால் அந்தப் பிசாசு விட்டால்தானே. அவள் எந்த பட்டிமன்றமானாலும் பார்த்தே தீருவாள். வேற மாற்ற முடியாது! ரிமோட்டைத் தூக்கி விட்டெறிஞ்சேன். அதுலே ஒரு ரெண்டாயிரம் நஷ்டம்…”“பார்க்க எத்தனையோ சானல் இருக்கு. ராத்திரியிலே மனைவி தூங்கின பிறகு அமைதியாப் பாரேன்.”“அந்த இழவையும்தான் பார்க்கிறேனே… பதினொரு மணிக்கு மேலே ராப்பிச்சைக்காரன் மாதிரி சானல் சானலா அமுத்திண்டு, பெண்டாட்டிக்குச் சத்தம் கேட்கக் கூடாதேன்னு ‘மியூட்’ பண்ணிண்டு – பார்த்தால் அத்தனை சானலிலும் ஏதாவது பழைய சினிமாப் பட டான்ஸ்… தேசல் தேசலா ஆடறதுகள். வேற மொழி சானல்களுக்குப் போய்த் தொலைக்கலாம்னு கன்னடம், மலையாளம், இந்தின்னு போனாலும் காசிக்குப் போயும் கருமம் தொலையாத சமாசாரம்.”

 

         “பயனுள்ள எத்தனையோ சானல் இருக்கே. டிஸ்கவரி சானல், ஜியாக்ரபிகல் சானல்.”“அதுலே பாதி நேரம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணிடறா…. முக்கியமா காட்டுப் பிராணிகள் வாழ்க்கையைக் காட்டறேன் பேர்வழின்னு – பயங்கரமாக் காட்டிடறானுங்க.. ரெண்டு புலியைச் சேர்ந்தாப்பலே பார்த்தால்… என்னமோ நடக்கப் போறது ரெண்டு நிமிஷத்துலேன்னு அலர்றதாக இருக்கு. குழந்தை குட்டிகளோடு பார்த்திண்டிருந்தா டபக்குனு அணைக்கணுமாயிருக்கு.ஒவ்வொரு பிராணி இனமும் புழு, பூச்சி வகையறாவும் எப்படி செக்ஸ் பண்றதுன்னு காமெராவுலே துல்லியமாக் காட்டி மானத்தை வாங்கறாங்க.பசங்க எதிரிலே சங்கடமாப் போயிடறது.”“சரி. அது மாதிரி வர்ரப்ப சட்டுனு சானலை மாத்திடேன்.”“நாசமாப் போச்சு… பசங்க விட்டால்தானே? புலி சர்க்கஸ் வந்துட்டுது! ஹை! புலி சர்க்கஸ் வந்துட்டுதுன்னு ஒரே குதூகலம்!”“இந்த வரைக்கும் மனுஷாள் வரைக்கும் போய் மானத்தை வாங்காதிருக்கானுங்களேன்னு சந்தோஷப்படு.”பெப்சி ‘உமா’“அதையும்தான் வெள்ளைக்கார சானலிலே காட்டோ காட்டோன்னு காட்டிடறானே. அன்னிக்குப் பார்க்கறேன்.

 

         முத்தக் காட்சியாம், முகரைக் கட்டைக்காட்சி! ஒருத்தியோட மூக்கையே வெள்ளைக்காரன் முழுசா உதட்டோடு சேர்த்துக் கவ்விண்டு – அவளுக்கு ஜலதோஷ மூக்கா இருந்தால்… உவ்வே…”“அதெல்லாம் ஏன் பார்க்கறே?”“நம்ம ஊர் கண்ணராவியிலேருந்து தப்பலாம்னா இப்படி வந்துடறது.”“நீ தப்பா நினைச்சுக்காதே.. டி.வி. மேல வெறுப்பு வர்ரதுக்குக் காரணமே – அதோடு நாம இன்வால்வ் ஆறதில்லே… அதனால்தான்… அவுங்க நடத்தற நிகழ்ச்சியிலே நாமும் பங்கு கொள்ளணும். இப்போ இத்தனை வருஷமாச்சே.. இந்தக் குறிப்பிட்ட சினிமாப் பாட்டு வேணும்னு பெப்சி உமாகிட்டே நீ கேட்டிருக்கியோ.. அட்லீஸ்ட் ட்ரை பண்ணியிருக்கியோ?”“சீ சீ! அதுக்கெல்லாம் நான் போனுக்கு செலவு பண்ண மாட்டேன். நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்கன்னு ஒரு கேள்வி. ரசிகை ‘நான் பேனு பார்த்துகிட்டிருக்கேன்னு’ சொல்லுவா. ‘பேனுங்களா? ரொம்ப சந்தோஷம்…’ ‘ஆண் பேனா பொம்பிளை பேனா?’ ஒரு பலத்த சிரிப்பு… ‘ஈறு கூடப் பார்ப்பீங்களோ?’ ‘என்னங்க… உங்களுக்குப் பார்த்து வுடணுமா..’ பெருஞ் சிரிப்பு. ‘நீங்க ரொம்பத் தமாஷாப் பேசறீங்க… என் மாமியாரு பேசணும்னு துடிக்கறாங்க…’ ‘குடுங்க’, ‘எப்படீம்மா இருக்கீங்க…. ‘உன் கூடப் பேசணும்னு நான் இருபத்து மூணு வருசமா மொயற்சி பண்றேம்மா? நீ கூடக் கிழவியாயிட்டே.. இப்பத்தான் பேச முடிஞ்சது?’ இந்த மாதிரி ஒரே வகையிலே டயலாக். சிறு பசங்களை ‘என்ன படிச்சிகிட்டிருக்கீங்க…’ ‘என்ன வேலை செய்யறீங்க….’ ‘டென்த்’ அதுக்கு ஒரு ஆச்சரியம்! சிரிப்பு! ‘ஓ! டென்த்தா!’ இதிலே ஆச்சரியம் என்ன வேண்டியிருக்கு.

 

          சிரிக்கிற சமாசாரம் என்ன இதிலே?”அப்புறம் ‘பொழுது போக்கு என்ன’ன்னு குடையறது? அதுக்கெல்லாம் ஆச்சரியப்படறது.”“ரொம்பத்தான் கடுப்பிலே இருக்கே…”“ஒரு டீசன்ட்டா, பார்க்கக் குளுமையா ஒரு சமாசாரம் நம்ம டீ.வி.யிலே உண்டா? வாழ்க்கைக்கு வெறுப்பேத்தக்கூடாது. ருசி ஏற்படுத்தணும்.”“அதுக்குத்தான் விதம் விதமாச் சமையல் சொல்லித் தர்ராங்களே…”“வீட்டிலே சாதாரணமாச் செய்யற வத்தக்குழம்புக்கு இவ்வளவு பப்ளிஸிடியும் செய்முறை விளக்கங்களும், பளபள பாத்திரங்களும் தேவைதானா? சில இல்லத்தரசிகள் செய்கிற சமையலை விட அவங்க அலங்காரங்கள்தான் தூக்கோ தூக்கு. இதுலே வீட்டு ஆம்பிளைங்களும் சமைக்கறாங்களாக்கும்னு பிரபலங்களையெல்லாம் சமையல்காரர்களாக்கறது.”“ஸ்போர்ட்ஸெல்லாம் பிடிக்காதாக்கும்? கிரிக்கெட், ·புட்பால்.”“வயித்தெரிச்சல்! அதற்காகவே இன்னொரு பொட்டியை உடைக்கலாம். கிரிக்கெட்னா தோக்கறது நாமதான். ஒரு நாள் தோற்றால், ஒன்பது நாளைக்கு நாம டல் ஆயிடறோம். அதைப் பார்த்தால் பி.பி. தான் ஏறுது.”“அரட்டை அரங்கம், அது இது…”“அய்யே! இந்த விசு நல்லது பண்றேன் பேர்வழின்னு, பட்டி தொட்டியிலே இருக்கிற ராக்காசிங்களையெல்லாம் வீல் வீல்னு கத்த வுடறது மகா அநியாயம். ஒவ்வொரு பொம்மனாட்டியும் ஆவேசமாய் பேசறதைப் பார்த்தால், பொம்பிளை வர்க்கத்து மேலே வெறுப்பே வந்துடுது.”“இவுங்களைக் காட்டிலும் உன் வீடு எவ்வளவோ சாதுன்னு உனக்குத் தோணியிருக்கணுமே…”“ஆனால் நம்ம வீட்டிலும் அதைத் தெரிஞ்சிண்டு டி.வி. அளவுக்கு நாமும் கத்தணும்னு கத்த ஆரம்பிச்சிடறாள்.

 

          பாயிண்ட் எதுனாக் கிடைச்சுதுன்னா கத்திக் கூவி குதறி எடுத்துடறா?”“யோகப் பயிற்சி, தேகப் பயிற்சி இதெல்லாம் ட்ரை பண்றதில்லையாக்கும்?”“அதையெல்லாம் பார்த்துப் பண்ணறதுக்கு வசதியா நேரம், இடம் இருக்கா? ஜட்டி, பனியன்தான் ஒரு கவர்ச்சி!”“சோதிடத்திலே நம்பிக்கை இல்லையாக்கும்? இந்த வாரம் இந்த தினம் உங்களுக்கு இப்படி இருக்கும்னு…”“நம்ம மூடையே அப்ஸெட் பண்ற ·பிச்சர் ஒண்ணு உண்டுன்னா அது அந்த ஜோசியப் பகுதிதான். அந்த ஜோசியக்காரன் உள்ளே செளகரியமா உட்கார்ந்துண்டு, ‘நீங்க இன்ன ராசியா?’ ‘ஜாக்கிரதையாயிருங்கோ… இந்த வாரம் ஆபீசில் தகராறு வரலாம், ஒரு விபத்து வரலாம். செலவு வரலாம், பெண்சாதி உடல்நிலை பாதிக்கப்படலாம்னு எதையாவது சொல்லி வைப்பான் – நாம அதையே நினைச்சுண்டு – நம்ம மாமூல் உற்சாகம்கூட பணால் ஆயிடறது…”“இதெல்லாம் வேண்டாம்னுதானே நிறைய நாடகங்கள் போடறாங்க…”“ஆமாம் ஆமாம். அதுக்காகத்தான் முக்கியமா உடைச்சேன். ஊரை ஏமாத்தறதுக்குப் பேர்தான் நாடகம்னு பேரா? மொதல்லே டைட்டில் சாங்க்னு பத்து நிமிஷத்துக்கு ஒப்பேத்திடறான். அப்புறம் ஒரு நிமிஷம் நாடகம் – ஒரு ஆசாமி டயலாக் பேசி முடிக்கறதுக்கு எப்படியும் ஒரு நிமிஷம் ஆயிடும். உடனே விளம்பரம். அது ஒரு ரெண்டு நிமிஷம். அப்புறம் நாடகம் – உடனே விளம்பரம். டிராமாவிலே நடிக்கிற பசங்கள்ளே யாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கு.

 

            பட்டை மீசை. சட்டி மூஞ்சி. கிராப்புத் தலை. அதுவும் பயங்கரமா க்ளோஸப் குடுத்து… என்ன விபரீதம்னா என் பெரிய பிள்ளை கேக்கறான். எனக்கும் பர்சனாலிடி இருக்கு… இவுங்கள்ளாம் நடிக்கறப்ப நான் ஏன் நடிக்கக் கூடாதுன்னு ஸ்டுடியோக்களைச் சுத்திண்டிருக்கான்…”“யார் கண்டா பெரிய நடிகரா வரக் கூடும். ப்ரோக்ராம் கண்டக்ட் பண்ணறவரா வரலாம்…”“அது மாதிரி மட்டும் வரவே கூடாது. காலேஜ் பொண்ணுங்களை வெச்சி டிஸ்கோ அது இதுன்னு கூத்தடிக்கிற காரியமெல்லாம் அவன் பண்ணக்கூடாது. யாருக்கும் வெட்கம் இல்லைன்னு ஆயிட்டுது. நம்ம தமிழ்நாட்டுப் பெண்ணுங்களை இப்படியெல்லாம் டிரெஸ் பண்ணிக்கறது, கூத்தடிக்கறதுன்னு எனக்குக் கவலை புடிச்சுப் போயிட்டுது. கடைக்குட்டி விபு இருக்காளே… அவள் டிஸ்கோ ஆடிட்டே வந்துட்டாள்…”“காலம் முன்னேறிண்டிருக்கு. நீ ரொம்பப் பின்னால் இருக்கே. டி.வி.யெல்லாம் உன்னை மாதிரி ஆளுங்களை முன்னேத்தறதுக்கு வந்திருக்கிற கண்டு பிடிப்புகள்! உனக்கு அதைப் பயன்படுத்தி முன்னேறத் தெரியலை, தட்ஸ் ஆல்…”“விளம்பரங்களைப் பாரு! ஒரு கூல் டிரிங்க் குடித்தால் பலம் பெற்று உலகத்தையே எடுத்து வளைச்சுடற மாதிரி காட்டறான்.

 

          ஊரிலுள்ள அழகான பொண்ணுகளெல்லாம் மயங்கிக் கும்பலா கூடவே வந்துடறாப்பலே காட்டறான். இதெல்லாம் பொய்தானே? மிகைதானே?”“நீ டி.வி.யை சுத்தியாலே உடைச்சதுகூட மிகைதான்! கோபத்தை மிகைப்படுத்திக் காட்டினே.. அது மாதிரிதான் டி.வி.யும் விளம்பரமும் எல்லாமும்…. மிகைப்படுத்தறதுதான் கலை.”“அரசியல்லே அவ்வளவு இன்ட்ரெஸ் இல்லையாக்கும்?”“இருந்தது. ஆனால் குழப்பிட்டாங்க…”“யாரு?”“ஆவூன்னா, ரெண்டு மூணு பேர் அரசியல் விவகாரத்தை அலசுறேன் பேர்வழி என்று அறுப்பாங்களே… அதுலே குழம்பிப் போயிட்டேன். உருப்படியா எதுனாத் தெரிஞ்சுக்க முடியலே. நமக்குத் தெரிஞ்ச எதையும் குழப்பி விட்டுடறாங்க…”“என்ன ஒரே நெகடிவ் அப்ரோச்சாவே இருக்கே…”“நெகடிவா இல்லாம எப்படி இருக்கறது. காலைல பொண்டாட்டி கோவிச்சிட்டு ஊர் போயாச்சு. பொண்ணு எவனோடயோ டிஸ்கோ ஆடப் போனவள். ரெண்டு நாளா வரலே. பையன் சின்னத்திரை டைரக்டராகப் போறேன்னு ப்ளஸ் டூ வே எழுதாமல் சுத்திகிட்டிருக்கான். என்னை நாசம் பண்ணினதை நான் விட்டு வைக்கலாமா? ஒவ்வொரு வீடா சுத்தியோடு போய் இதுங்களை உடைக்கப் போறேன் – பரசுராமர் க்ஷத்திரியர்களை ஒழிக்கப் புறப்பட்டாப்பலே சுத்தியோட புறப்படப் போறேன்…”“எதையும் யோசனை பண்ணிச் செய். காத்தாலே தினமும் பக்திப் பாட்டு, உபன்யாசம் வருது… பாரு… கேளு…”“நான் மூடில் இல்லே தயவு பண்ணிப் போயிட்டு அப்புறம் வா…”“நேத்துக்கூட யாரோ ஒரு ஆனந்தா ‘டோன்ட் ரியாக்ட்’னு டி.வி.யிலே சொல்லித் தந்தார். நீ பார்க்கலையாக்கும்…”“நீ இப்ப கிளம்பறியா இல்லை எதிரே போய் சுத்தி வாங்கிட்டு வரட்டுமா?”“இதோ புறப்பட்டேன்!” என்று அவசரமாகப் புறப்பட்டேன்.ஆமாம். புரோக்ராமுக்கும் பொட்டிக்கும் என்ன சம்பந்தம். ஐயோ பாவம், டி.வி. பொட்டி.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.