LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- மற்றவை

கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்..

இயற்கை வளத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று தான் மரம். நாம் அதிகம் அறிந்திருக்கிறது அரச மரம், ஆலமரம், வேப்பமரம், புளியமரம், தென்னை மரம், மாமரம், பூவரசமரம், அத்தி மரம், தேக்கு மரம், சந்தன மரம் உட்பட ஒருசிலவை மட்டுமே. இதில், நாம் அதிகம் அறிந்திராத ஒன்று தான் கருங்காலி மரம். இந்தக் கருங்காலி மரம் பற்றி அவ்வளவு பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம்முடைய முன்னோர்கள் அதிகளவு பயன்படுத்திய மரங்களில் ஒன்று தான் இந்தக் கருங்காலி மரம். கருங்காலியில் செய்த பொருட்கள் www.magizhhandicrafts.com இணையதளத்தில் வாங்கலாம்.

கருங்காலி மரத்தின் சிறப்பு

இந்த மரத்தின் ஆற்றலானது சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்குமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த மரம் இது.

குட முழுக்கில் கருங்காலி மரக் குச்சிகள்

மின் காந்த ஆற்றலைச் சேமிக்கும் ஆற்றல் இந்த மரத்திற்கு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தான் இந்து மதங்களில் கோவில் குட முழுக்கில் இந்த மரத்தின் குச்சிகளைப் போடுகின்றனர்.

மேலும், இந்தக் கருங்காலி மரத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை அளிக்கும் சக்தி உள்ளது. இதன் காரணமாகத் தான் அந்தக் காலத்தில் இந்த மரத்தில் செய்யப்பட்ட சிற்பங்கள் வீட்டில் வைத்திருந்தனராம். குறிப்பாக அந்தக் காலத்தில் பெரிய, பெரிய பணக்காரர்கள் இந்தக் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட வாக்கிங் ஸ்டிக்கினை பயன்படுத்தியுள்ளனர்.

சிலர் கெட்ட ஆத்மாக்களை விரட்ட இந்த கருங்காலி மரத்தை பயன்படுத்துவர்களாம்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த கருங்காலி மரத்தல் செய்த பொருட்களை வாங்க வேண்டும் என்றால் http://www.magizhhandicrafts.com என்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

 உடலில் எந்த வியாதிகளும் வராதாம்

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கையைப் பயன்படுத்தித் தான் நெல் குத்தி அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியைச் சமைப்பதற்குப் பயன்படுத்துவார்களாம். இதற்கு என்ன காரணம் அப்படியென்றால் இந்த மரத்தில் உள்ள வீரியக் குணம் மற்றும் மூலிகைத் தன்மை அந்த அரிசியுடன் சேரும். அவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும் போது நமது உடலில் எந்த வியாதிகளும் வராதாம்.

நாம் அறிந்த மரப்பாச்சி பொம்மைகள் கூட இந்தக் கருங்காலி மரத்தில் தான் செய்வார்களாம்.

குறிப்பாக இந்த மரத்தின் நிழலடியில் அமர்ந்திருப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு நற்குணங்களைப் பெற்றதுதான் இந்தக் கருங்காலி மரம்.

வீட்டுப் பொருட்களில் உபயோகம்

கருங்காலி மரத்தில் செய்த பொருள்கள் நமக்குப் பாதுகாப்பு வளையம் போலச் செயல்படுவதாக நம்பப்படுகிறது. கருங்காலி மரத்தில் மின்காந்தக் கதிர்வீச்சு இருப்பதாகக் கூறப்படுகிறது. கருங்காலி மரம் கோயில் கோபுரங்கள், அங்குள்ள சிலைகள், வீட்டுப் பொருட்களில் உள்ளிட்ட பலவற்றில் உபயோகம் செய்யப்படுகிறது.

ஜோதிட முக்கியத்துவம்

ஜோதிட ரீதியாகக் கருங்காலியைச் செவ்வாய்க் கிரகத்திற்கான உகந்த மரம் என்கிறார்கள். செவ்வாய்க் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை கருங்காலிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது. கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட பொருட்களை அணிந்து கொள்பவர் ஜாதகத்திலிருந்து செவ்வாய் தோஷம் குறைவதை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

கருங்காலி பொருள்களை எப்போது அணியலாம்?

சுப நாள்களில் கருங்காலியில் செய்யப்பட்ட மாலை, கைப்பட்டை போன்றவற்றை யார் வேண்டுமானாலும் அணியலாம். குறிப்பாக, முருகன் அல்லது வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபட்டு அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். அங்குச் செல்ல முடியாவிட்டால் வீட்டில் உள்ள தெய்வங்களின் புகைப்படங்களுக்கு அருகில் வைத்த பிறகு அணிவது நல்லது. செவ்வாய்க் கிரகத்திற்கு உகந்தது கருங்காலி மரம் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

யார் அணியலாம்?

கருங்காலியைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்குக் கருங்காலி மாலை ஏற்றது. இதனை மாணவர்கள் பயன்படுத்தும்போது நினைவாற்றல் மேம்படுகிறது. சிந்திக்கும் திறனில் மாற்றம் உண்டாகி கல்வியில் சிறந்து விளங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

தொழிலதிபர்கள்

பயன்படுத்தும்போது வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டு, நல்ல லாபம் பெற முடியும்.
வேலையில் உயர் பதவி உள்ளிட்ட முன்னேற்றத்தை எதிர்பார்ப்பவர்கள், புதிய வேலை தேடுபவர்கள் கருங்காலியைப் பயன்படுத்தலாம் கண் திருஷ்டி, மாந்திரீகம் போன்ற தீய சக்திகளால் அவதிப்படுபவர்கள் அணியலாம்.
கருங்காலி பொருட்கள் நம்மிடம் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றும்.

கருங்காலி மாலை அணிவதால் நன்மைகள்

ஆன்மீகப் பாதையில் வாழ உந்துதலை அளிக்கும். ஜாதகத்தில் செவ்வாய்க் கிரகத்தின் தோஷங்களைக் குறைக்கும். ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் போலக் கூடவே இருந்து தீய சக்திகள் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது கருங்காலி மாலை. அனைத்துத் தெய்வங்களும் இதில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. நவகிரகங்களின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தி எதிர்மறையான விளைவுகளை மட்டுப்படுத்தும் வல்லமை கருங்காலிக்கு உள்ளது. கருங்காலி பொருள்களைக் குலதெய்வமாகக் கருதி அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மருத்துவப் பயன்கள்

கருங்காலி மரத்தில் மின் கதிர்வீச்சுகளைச் சேமிக்கும் திறன் உள்ளது. ஆகவே இதன் நிழலில் இளைப்பாறினால் கூட நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
கருங்காலி கட்டையை நீரில் ஊற வைத்தால் அந்த நீரின் நிறம் சற்று மாறுபடும். அந்த நீரால் குளித்து வர உடலில் இருக்கும் அநேக வலிகள் குணமாகும்.
கருங்காலி மரத்தின் வேரை நீரில் ஊற வைத்து, அந்த நீரைச் சூடாக்கி வடிகட்டி அருந்தினால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும். நீரிழிவு நோயால் அவதிப்பட்டால் இந்த நீர் உங்களுக்கு உதவும். ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும். கருங்காலி பொருள்களைப் பயப்படுத்தும்போது வயிற்றில் உள்ள கொழுப்பு குறைகிறது.

கருங்காலி கைப்பட்டை

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து நன்கு உலர வைத்து பாலுடன் அருந்தினால் உடல் வலுப்பெறும்.
கருங்காலி பொருள்கள் பயப்படுத்துவது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைச் சீராக வைக்கும். உடலில் உள்ள வெப்பத்தைக் குறைக்கக் கருங்காலி கைப்பட்டையை அணியுங்கள்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த கருங்காலி மரத்தல் செய்த பொருட்களை வாங்க வேண்டும் என்றால் http://www.magizhhandicrafts.com என்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைய தளத்தில் என்னென்ன கருங்காலி பொருட்கள் உள்ளன

8 மி.மீ அசல் கருங்காலி சேங்காலி வளையல், ஜிபு சின்னத்துடன் ஜேட் மணி கல், கருங்காலி மாலை, கருங்காலி மரப்பாச்சி பொம்மை, கருங்காலி மர விநாயகர் சாவி சங்கிலி, 6 அங்குல கருங்காலி வேல், கருங்காலி குச்சி, கருங்காலி மர ஓம் கீ செயின், கருங்காலி மர சூலம், 108 பீட்ஸ் கொண்ட 10 மி.மீ அளவுள்ள கருங்காலி தியான மாலை, கருங்காலி வராஹி அம்மன் சிற்பம், கருங்காலி லிங்கம் மற்றும் நந்தி, பதக்கத்தில் கருங்காலி மர மணி, கருகாலி மர தாயத்து, கருங்காலி மர காப்பு உட்பட இன்னும் ஏராளமான பொருட்கள் விற்பனைக்காக உள்ளன.

by Swathi   on 03 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்: வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:
பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்
விவசாய பழமொழிகள்.. விவசாய பழமொழிகள்..
நம்பிக்கை பஞ்சாயத்துகள்  1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி நம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி
வனத்துக்குள் தமிழ்நாடு வனத்துக்குள் தமிழ்நாடு
கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.. கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..
கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்! கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.