LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

எலுமிச்சை சாற்றின் ஆயுர்வேத மகத்துவம்

எலுமிச்சம் பழத்தின் புளிச்சாறு நமது உடலில்  ஜீரணமானதும் இனிப்பாக மாறிவிடும். அதனால் ஏற்படும் நன்மை கல்லீரல் முதலியவற்றில் தேங்கி நிற்கும் பித்தத்தை வெளிக்கொணரப் பயன்படுகிறது. சிறுநீரைஅதிகமாகப் பெருக்கி எரிவை அகற்றுகிறது. வியர்வையை உண்டாக்கிச் சூட்டைக் குறைக்கிறது. சுவையாலும் உடனடி உணர்ச்சியாலும் சூடு தரக்கூடியதாகவும் பித்தத்தை அதிகப்படுத்துவதாகவுமுள்ள எலுமிச்சம்பழம் முழுவதும் ஜீரணமான பின்னுள்ள இனிப்பு நிலையில் பித்தத்தையும் உடல் உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது. அதனால்தான் புளிப்பு நீக்கவேண்டிய சில பத்திய நிலைகளில் புளியை நீக்கிய பின்னரும் புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழத்தை உபயோகிக்கச் சொல்வர்.

எலுமிச்சம் பழச்சாறு ருசி, பசி, ஜீரண சக்தி அளிக்கின்றது.மேலும் நாவறட்சியைக் குறைக்கின்றது.  குடலில் எதையும் வெகுநேரம் தங்கவிடாமல் குடலின் விரிந்து சுருங்கும் பணியைச் சீராக்கி மலத்தையும் ரத்தத்தையும் பிரிக்க உதவி வெளியேற்ற வேண்டியதை சுறுசுறுப்பாக வெளியேற்றுகிறது. வாயு குடலில் தேங்காமல் வெளியேறுவதால் வயிற்று உப்புசம், குடல் காற்றின் கடும் மணம் இவற்றைப் போக்குகிறது. ஆங்காங்கு அடைத்துள்ள கபம் வாயு பித்தம் இவைகளை நீர்க்கச் செய்வதன் மூலம் தடையின்றி வெளியேற்றுகிறது.சிலருக்கு இரைப்பையில் உள்ள புளிப்புக் குறைவால் சாப்பிட்டதும் செரியாமல் பேதியாகும். இதற்கு சாப்பிட உட்காரும்போது எலுமிச்சம்பழச் சாற்றை தண்ணீர் விட்டுச் சாப்பிட்ட பின் உணவருந்த இந்த பேதி சில நாட்களில் குறைந்து விடும்.

எலுமிச்சை  பழச்சாற்றின் முழுமையான குணத்தைப் பெற சீரகம் 50 கிராம் எடுத்து சுத்தமாக்கிப் பீங்கான் கோப்பையிலிட்டு, 1-2 அவுன்ஸ் (30-60 மிலி.) எலுமிச்சம் பழச்சாறு விட்டு வெயிலில் உலர்த்தவும். நன்கு உலர்ந்ததும் மறுபடியும் முன்னளவில் சாறு சேர்க்கவும். இப்படி சிறிது சிறிதாக 10 அவுன்ஸ் (சுமார்300 மிலி.) வரை சாறு சேர்த்து உலர்ததும், கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். ஜீரணக்கோளாறு, அஜீர்ண பேதி, உமட்டல், வாயில் உமிழ்நீர் சுரத்தல், வாந்தி இவை போன்ற தருணங்களில் வாயில் சிறிது அடக்கிக் கொள்ள நல்ல குணம் தரும். ஜீரண இறுதியில் இனிப்பாக மாறுவதால் நீங்கள் இதைத் தொடர்ந்து சாப்பிடுவதை விட வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் காலைச் சிற்றுண்டிக்கு முன்பாகச் சாப்பிடுவது நல்லது.

by Swathi   on 08 Dec 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்
உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்).. உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..
பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான  பயன்களும்!! பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!
சாமையின் பயன்கள் சாமையின் பயன்கள்
சோளத்தின் மருத்துவ பயன்கள் சோளத்தின் மருத்துவ பயன்கள்
உடல் எடையை உயர்த்தும் உலர்திராட்சை !! உடல் எடையை உயர்த்தும் உலர்திராட்சை !!
தக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது !! தக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.