நாகரிகம் என்ற பெயரில் ஜட்டி தெரியும்படி இடுப்புக்கு கீழ் பேன்ட் அணிய தடை அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இளம்தலைமுறையினர் பேசன் என்ற பெயரில் அரை குறை ஆடை அணிவது, ஜட்டி தெரியும்படி இடுப்புக்கு கீழ் பேன்ட் அணிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த செயல்பாடுகளால் பாலியல் உணர்வுகள் அதிகரிப்பதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அரங்கேறுகின்றன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில், பாரிஸ் நகரில் ஒழுங்கு குறைபாடாக உடை அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தால் முதல் முறையாக இந்த தவறு செய்பவர்களுக்கு, 2,500 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை தவறு செய்தால், 5000 ரூபாய் அபராதம் மற்றும், 16 மணி நேரம் சமூக சேவையும் செய்ய வேண்டும், என்ற தண்டனை வரையறுக்கப்பட்டு உள்ளது.
|