LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தலைமுறைகளை கடந்தும் வாழ்பவர் இசையமைப்பாளர் T.R. பாப்பா

ஒவ்வொரு தலைமுறையையும் ஒரு இசையமைப்பாளர் தன் வசம் ஈர்த்து வருகிறார் என்றால் அது மிகையில்லை. தமிழனோடு பின்னி பிணைந்ததுதான் இசை மற்றும் பாடல்கள். சுதந்திர போராட்டத்துக்கே பாடல்வடிவில் புரட்சி செய்தவன் நம் மீசை பாரதி அதிலிருந்தே புரிந்துவிடும் தமிழனோடு இசை எந்த அளவுக்கு கலந்துள்ளது என. 
*****************************************************
மனித வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் உணர்வுகளிலும் தவிர்க்கமுடியாத நண்பனாகிவிடுகிறது பாடல்களும், இசையும். அந்த வகையில் ஆனந்தம், மகிழ்ச்சி, சோகம், பிறப்பு, இறப்பு, பிறந்தநாள், புத்தாண்டு, திருவிழா, பண்டிகை என எல்லா நிலைகளிலும் மனதுக்கு மிக    நெருக்கமான இடத்தை பிடித்துள்ளது திரைப்பட இசை.
*********************************************
இயல், இசை, நாடகம் இதுதான் தமிழ் மொழியின் அடிநாதம். தமிழ் திரைப்படங்கள் பிறந்ததே இதனின் அடிப்படையில் தான். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இன்று வரை தமிழ் திரைப்படங்கள்  தவிர்க்க முடியாத செங்ககோலுடன் ஆட்சி செய்து வருகிறது.
***********************************************
அந்த வரிசையில் மெல்லிசை மன்னராக திகழ்ந்தவர் தான் T.R. பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி ராதாகிருஷ்ணன் சிவசங்கரன். 1922 ஜூலை 3-ம் தேதி திருத்துறை பூண்டியில் பிறந்தார் T.R. பாப்பா.
***************************************
 குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் நிறைவான பாடல்களைக் கொடுத்த டி.ஆர்.பாப்பா எனும் வயலின் மேதையை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது. தமிழ், தெலுங்கு, சிங்களப் படங்களுக்கெல்லாம் இசையமைத்த மாமேதை அவர்!
*********************************************
மிகப்பெரிய வயலின் வித்வானாகத் திகழ்ந்து, இசையமைப்பாளராக உயர்ந்தவர். திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊர். அப்பா பெயர் ராதாகிருஷ்ணன். இவருடைய பெயர் சிவசங்கரன். ஆனால், ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார்கள். ஆகவே அவர் டி.ஆர்.பாப்பா என்றே அழைக்கப்பட்டார்.
******************************
இன்றைக்கு லட்சம் லட்சமாக பள்ளிக் கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், அன்றைக்கு நாலே நாலு ரூபாய் இல்லாததால், டி.ஆர்.பாப்பாவின் படிப்பு தடைப்பட்டது. அப்பாவும் வயலின் கலைஞர். வருடம் தவறாமல், திருவையாறு தியாகராஜர் உற்சவத்துக்கு பையனையும் அழைத்துச் சென்றுவிடுவார் அப்பா. கும்பகோணம் சிவனடிப்பிள்ளை பெரிய வயலின் வித்வான். “உன் பையனை எங்கிட்ட அனுப்பு. நான் பாத்துக்கறேன்” என்று கேட்க, அப்பாவும் சம்மதித்தார். அப்படித்தான் டி.ஆர்.பாப்பாவை இசை இழுத்துக்கொண்டது.
****************************
சிவனடிப்பிள்ளை சினிமாக்களுக்கு வாத்தியங்கள் இசைப்பவர். 1936-ம் ஆண்டு வந்த ‘வேலு சீமந்தினி’, ‘பார்வதி கல்யாணம்’ முதலான படங்களுக்கு பிடில் வாசித்தார். அப்போது பாப்பாவும் உடன் செல்வார். 1938-ம் ஆண்டு வயலினில் தனிக்கச்சேரி செய்தார் பாப்பா. இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, திரைப்படங்களுக்கு வாத்தியங்கள் இசைக்கும் பணியில் இறங்கினார். எஸ்.ஜி.கிட்டப்பாவின் அண்ணன் காசி ஐயர் இசையமைப்பாளர். அவர் பாடலின் இணைப்பு இசைப்பணிகள், பின்னணி இசைக் கோர்ப்புகள் என சொல்லச் சொல்ல அவற்றுக்கான ஸ்வரங்களை குறிப்பு எடுத்துக்கொண்டு எல்லா வாத்தியக்காரர்களுக்கும் கொடுக்கும் வேலையையும் செய்தார் பாப்பா. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டே இருந்தவர், ஒருகட்டத்தில் படத்துக்கு இசையமைக்கவும் செய்தார்.
**************************************
சிட்டாடல் பிலிம்ஸ் அதிபர் ஜோஸப் தளியத் மிகப்பெரிய ஜாம்பவான். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் முதலான எண்ணற்றவர்களை அறிமுகப்படுத்தியவர். மலையாளப்படமான ‘ஆத்மகாந்தி’ என்ற படத்துக்கு இசையமைத்த டி.ஆர்.பாப்பாவை, தமிழுக்குக் கொண்டு வந்தார் ஜோஸப் தளியத்.
*********************************
'மாப்பிள்ளை’, ‘அம்மையப்பன்’, ‘ரம்பையின் காதல்’, ‘ராஜாராணி’, ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’, ‘குறவஞ்சி’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘குமாரராஜா’, ‘விஜயபுரி வீரன்’ ‘அருணகிரிநாதர்’, ‘இரவும் பகலும்’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘வைரம்’, ‘அவசரக் கல்யாணம்’, ’வாயில்லாப்பூச்சி’ என்று ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து எண்ணற்ற ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் பாப்பா.
****************************
சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கி எஸ்பி சைலஜா வரை அனைத்து பாடகர்களும் இவரது இசையில் பாடி உள்ளனர். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பரவி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இவர் பெற்றார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகிய மூன்று முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
************************************
’முத்தைத்தரு பத்தித் திருநகை/ அத்திக்கிறை சத்திச் சரவண/ முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்...’ என்ற பாடலை இசையாகக் கொடுத்து உருகவைத்தார். ’சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி/ சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்/ பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது/ பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது.
**************************************************
மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி/ இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்/ பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்/ பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்’ என்ற பாடலின் மூலம் அம்பாளையே கனிந்துருகச் செய்தார். உளுந்தூர்பேட்டை சண்முகம் எழுதிய இந்தப் பாடலும் சீர்காழி கோவிந்தராஜனின் கொஞ்சும் குரலும் டி.ஆர்.பாப்பாவின் தெய்வீக இசையும் ரசிகர்களை கிரங்கடித்தது.
*************************************
’காதல் என்பது தேன் கூடு/ அதை கட்டுவதென்றால் பெரும்பாடு/ காலம் நினைத்தால் கைகூடும்/ அது கனவாய் போனால் மனம் வாடும்’ என்று மெல்லிய இசையை மயிலிறகு வருடலில் பாட்டுடன் கலந்து கொடுத்து, நமக்கு இதம் தந்திருப்பார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ’குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா’ என்கிற எம்ஜிஆர் பாடலுக்கு இசையும் டி.ஆர்.பாப்பா தான்.
**********************************
’ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ என்ற ‘குமாரராஜா’ படத்தின் பாடலை சந்திரபாபு பாடினார். ’கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்/ கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்/ பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே/ என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே/ ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ என இசை வழியே உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுத்திருப்பார் டி.ஆர்.பாப்பா.
*******************************
தலைமுறைகளை கடந்து இன்றைய இளைஞர்களையும் சுண்டியிழுக்கும் திரை இசையை  கொடுத்த டி.ஆர்.பாப்பா 2004-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தனது 82-வது வயதில் காலமானார்.

ஒவ்வொரு தலைமுறையையும் ஒரு இசையமைப்பாளர் தன் வசம் ஈர்த்து வருகிறார் என்றால் அது மிகையில்லை. தமிழனோடு பின்னி பிணைந்ததுதான் இசை மற்றும் பாடல்கள். சுதந்திர போராட்டத்துக்கே பாடல்வடிவில் புரட்சி செய்தவன் நம் மீசை பாரதி அதிலிருந்தே புரிந்துவிடும் தமிழனோடு இசை எந்த அளவுக்கு கலந்துள்ளது என. 

மனித வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் உணர்வுகளிலும் தவிர்க்கமுடியாத நண்பனாகிவிடுகிறது பாடல்களும், இசையும். அந்த வகையில் ஆனந்தம், மகிழ்ச்சி, சோகம், பிறப்பு, இறப்பு, பிறந்தநாள், புத்தாண்டு, திருவிழா, பண்டிகை என எல்லா நிலைகளிலும் மனதுக்கு மிக    நெருக்கமான இடத்தை பிடித்துள்ளது திரைப்பட இசை.

இயல், இசை, நாடகம் இதுதான் தமிழ் மொழியின் அடிநாதம். தமிழ் திரைப்படங்கள் பிறந்ததே இதனின் அடிப்படையில் தான். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இன்று வரை தமிழ் திரைப்படங்கள்  தவிர்க்க முடியாத செங்ககோலுடன் ஆட்சி செய்து வருகிறது.

இசை மாமேதை 

அந்த வரிசையில் மெல்லிசை மன்னராக திகழ்ந்தவர் தான் T.R. பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி ராதாகிருஷ்ணன் சிவசங்கரன். 1922 ஜூலை 3-ம் தேதி திருத்துறை பூண்டியில் பிறந்தார் T.R. பாப்பா.

குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் நிறைவான பாடல்களைக் கொடுத்த டி.ஆர்.பாப்பா எனும் வயலின் மேதையை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது. தமிழ், தெலுங்கு, சிங்களப் படங்களுக்கெல்லாம் இசையமைத்த மாமேதை அவர்!

மிகப்பெரிய வயலின் வித்வானாகத் திகழ்ந்து, இசையமைப்பாளராக உயர்ந்தவர். திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊர். அப்பா பெயர் ராதாகிருஷ்ணன். இவருடைய பெயர் சிவசங்கரன். ஆனால், ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார்கள். ஆகவே அவர் டி.ஆர்.பாப்பா என்றே அழைக்கப்பட்டார்.

இசை இழுத்துக்கொண்டது

இன்றைக்கு லட்சம் லட்சமாக பள்ளிக் கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், அன்றைக்கு நாலே நாலு ரூபாய் இல்லாததால், டி.ஆர்.பாப்பாவின் படிப்பு தடைப்பட்டது. அப்பாவும் வயலின் கலைஞர். வருடம் தவறாமல், திருவையாறு தியாகராஜர் உற்சவத்துக்கு பையனையும் அழைத்துச் சென்றுவிடுவார் அப்பா. கும்பகோணம் சிவனடிப்பிள்ளை பெரிய வயலின் வித்வான். “உன் பையனை எங்கிட்ட அனுப்பு. நான் பாத்துக்கறேன்” என்று கேட்க, அப்பாவும் சம்மதித்தார். அப்படித்தான் டி.ஆர்.பாப்பாவை இசை இழுத்துக்கொண்டது.

சிவனடிப்பிள்ளை சினிமாக்களுக்கு வாத்தியங்கள் இசைப்பவர். 1936-ம் ஆண்டு வந்த ‘வேலு சீமந்தினி’, ‘பார்வதி கல்யாணம்’ முதலான படங்களுக்கு பிடில் வாசித்தார். அப்போது பாப்பாவும் உடன் செல்வார். 1938-ம் ஆண்டு வயலினில் தனிக்கச்சேரி செய்தார் பாப்பா. இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, திரைப்படங்களுக்கு வாத்தியங்கள் இசைக்கும் பணியில் இறங்கினார். எஸ்.ஜி.கிட்டப்பாவின் அண்ணன் காசி ஐயர் இசையமைப்பாளர். அவர் பாடலின் இணைப்பு இசைப்பணிகள், பின்னணி இசைக் கோர்ப்புகள் என சொல்லச் சொல்ல அவற்றுக்கான ஸ்வரங்களை குறிப்பு எடுத்துக்கொண்டு எல்லா வாத்தியக்காரர்களுக்கும் கொடுக்கும் வேலையையும் செய்தார் பாப்பா. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டே இருந்தவர், ஒருகட்டத்தில் படத்துக்கு இசையமைக்கவும் செய்தார்.

மூன்று முதலமைச்சர்களுடன்

சிட்டாடல் பிலிம்ஸ் அதிபர் ஜோஸப் தளியத் மிகப்பெரிய ஜாம்பவான். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் முதலான எண்ணற்றவர்களை அறிமுகப்படுத்தியவர். மலையாளப்படமான ‘ஆத்மகாந்தி’ என்ற படத்துக்கு இசையமைத்த டி.ஆர்.பாப்பாவை, தமிழுக்குக் கொண்டு வந்தார் ஜோஸப் தளியத்.

'மாப்பிள்ளை’, ‘அம்மையப்பன்’, ‘ரம்பையின் காதல்’, ‘ராஜாராணி’, ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’, ‘குறவஞ்சி’, ‘நல்லவன் வாழ்வான்’, ‘குமாரராஜா’, ‘விஜயபுரி வீரன்’ ‘அருணகிரிநாதர்’, ‘இரவும் பகலும்’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘வைரம்’, ‘அவசரக் கல்யாணம்’, ’வாயில்லாப்பூச்சி’ என்று ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து எண்ணற்ற ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் பாப்பா.

சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கி எஸ்பி சைலஜா வரை அனைத்து பாடகர்களும் இவரது இசையில் பாடி உள்ளனர். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பரவி மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இவர் பெற்றார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகிய மூன்று முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தெய்வீக இசை ரசிகர்களை கிரங்கடித்தது

’முத்தைத்தரு பத்தித் திருநகை/ அத்திக்கிறை சத்திச் சரவண/ முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்...’ என்ற பாடலை இசையாகக் கொடுத்து உருகவைத்தார். ’சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி/ சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்/ பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது/ பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது.

மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி/ இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்/ பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்/ பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்’ என்ற பாடலின் மூலம் அம்பாளையே கனிந்துருகச் செய்தார். உளுந்தூர்பேட்டை சண்முகம் எழுதிய இந்தப் பாடலும் சீர்காழி கோவிந்தராஜனின் கொஞ்சும் குரலும் டி.ஆர்.பாப்பாவின் தெய்வீக இசையும் ரசிகர்களை கிரங்கடித்தது.

’காதல் என்பது தேன் கூடு/ அதை கட்டுவதென்றால் பெரும்பாடு/ காலம் நினைத்தால் கைகூடும்/ அது கனவாய் போனால் மனம் வாடும்’ என்று மெல்லிய இசையை மயிலிறகு வருடலில் பாட்டுடன் கலந்து கொடுத்து, நமக்கு இதம் தந்திருப்பார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ’குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா’ என்கிற எம்ஜிஆர் பாடலுக்கு இசையும் டி.ஆர்.பாப்பா தான்.

இசை வழியே ஒத்தடம்

’ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ என்ற ‘குமாரராஜா’ படத்தின் பாடலை சந்திரபாபு பாடினார். ’கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்/ கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்/ பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே/ என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே/ ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே’ என இசை வழியே உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுத்திருப்பார் டி.ஆர்.பாப்பா.

தலைமுறைகளை கடந்து இன்றைய இளைஞர்களையும் சுண்டியிழுக்கும் திரை இசையை  கொடுத்த டி.ஆர்.பாப்பா 2004-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தனது 82-வது வயதில் காலமானார்.

by Kumar   on 21 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.