சனிக்கோள் தொடர்பான, இதுவரை கண்டிறாத புதிய புகை படங்களை, நாசா விண்வெளி மையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய புகைப்படத்தில், சனிக்கோளின் உப கிரகங்களான 7 சந்திரன்கள் மற்றும் வளையங்கள், பூமி, வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவை காணப்படுகின்றன.
அமெரிக்கா விண்வெளி அமைப்பான நாசா சமீபத்தில், சனிக்கோள் குறித்து ஆராய காசினி என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் தற்போது சனிக்கோள் குறித்த 141 படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. காசினி விண்கலத்தில் இருந்து கிடைத்துள்ள படங்கள் வியக்கத்தக்கவையாக உள்ளன என பல நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|