LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

நினைத்துப் பார்க்கும் நேரம் இதா?

" நான் உங்களை தாய்லாந்த் அனுப்பி அங்கு நம் வியாபாரத்தின் கிளை ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். நீங்களோ வேலையிலிருந்து ஒய்வு வேண்டும் என்று கடிதம் கொடுக்கிறீர்களே ?" என்று ராமதுரையிடம் ராமதுரையின மேல் அதிகாரி ஆதங்கப்பட்டார். சமீப காலமாக ராம துரை தன் மனைவி விமலாவை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார். நல்ல வேலையில் இருந்த அவர் மனைவி கல்யாணம்  முடிந்தவுடன் சேர்ந்து இருக்க வேலையை விட்டார். அதன் பிறகு ராம துரை யின் பெற்றோர்கள் நோய்வாய் பட வேலைககுப் போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வயதானவர்கள் இறந்தபின் பிள்ளைகள் வளர்ப்பில் காலம் போயிற்று. பிள்ளைகள் வளர்ந்தபின் ராமதுரையின் அத்தை விவாகரத்து வாங்கி வீட்டுக்கு வந்து நோயாளியாக திரும்ப விமலா விற்கு வீட்டில் வேலை பளு. வளர்ந்த குழந்தைகள் கல்யாணம், வேலை என்று நாடு விட்டு போய் விட்டார்கள். இப்பொழுதாவது தன மனைவி வேலைக்கு போக வேண்டும், தனி அந்தஸ்து பெற வேண்டும் என ராமதுரைக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. ராமதுரையின் மனைவி விமலா என்று இல்லாமல் பேராசிரியர் விமலா என்று அறியப்படவேண்டும் என்று தோன்றியது. தான் வேலையில் இருந்து சீக்கிரமாக ஒய்வு பெற்றால் தன் மனைவி வேலைக்குபோய் வாழ்க்கையை ரசிக்க முடியும் என்றுதான் ஒய்வு பெற மேல் அதிகாரியிடம் கடிதம் கொடுத்தார். " நீங்கள் வேலையில் இருந்தாலும் உங்கள் மனைவி வேலைக்கு போகலாமே" என்று மேலதிகாரி வினவினார். வீட்டில் விமலாவின் அத்தை நோயாளியாக இருக்கிறார். மேலும் ராமதுரையின் சித்தப்பா தன வயதான காலத்தில் ஒய்வு பெற ராமதுரையுடுன் வந்து இருக்க நினைக்கிறார். எனவே விமலாவிற்கு விடிவு காலமே இல்லை. ராமதுரை இந்த பொறுப்புகளை தான் எடுத்து கொள்ளத்தான் இந்த வேலையில்  இருந்து ஒய்வு திட்டம். ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியில்  ராமதுரையின் பங்கு சொன்னால் மாளாது ஆனாலும் கம்பெனி அவர் கோரிக்கையை ஏற்றது. 

பிரிவு நிகழ்ச்சியில் எல்லோரும் அவரைப் புகழ்ந்து பேசினார்கள். ராமதுரை தன் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். தான் ஒய்வு பெற்றதை சொல்லி மனைவியை திகைக்க வைக்க வேண்டும் என்று வீட்டிற்கு வந்தால் வீடு பூட்டியிருந்தது. பக்கத்துக்கு வீட்டு பையன் சாவி கொண்டு வந்து கொடுத்தான். கதவை திறந்து உள்ளே வந்தால் ஒரு போன் வந்தது. " முதியோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் அத்தையை உங்கள் மனைவி சேர்த்து இருக்கிறார்". கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு போன். " துரை நான் சித்தப்பா பேசுகிறேன். இந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்து இருக்கிறேன், விமலா கூட வந்து இருந்தாள்."  டி . வி பக்கத்தில் ஒரு கடிதம்."நான் படித்த படிப்பிற்கு ஒரு வாய்ப்பும் அந்தஸ்தும் வரும் வரும் என காத்து இருந்தேன். இதைப் பற்றி நினைக்க யாருக்கும் நேரமில்லை.நான் எனக்காக வாழ போகிறேன். என்னைத் தேட வேண்டாம்."
"விமலா பற்றி நினைத்து பார்க்க காலம் தாழ்த்தி விட்டோமோ " என்று ராமதுரைக்குத் தோன்றியது.
Ninaithu parkkum neram itha?
by Ramakrishnan   on 24 Apr 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
31-May-2013 23:22:15 கே.ஹேமமாலினி said : Report Abuse
முடிவு நேர்மறையாக இருந்திருக்கலாம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.