|
||||||||
பலாப்பழம் சுவைக்கலாம் |
||||||||
எங்கள் ஊர் பலாப்பழம் உருவத்திலே பெரியது
பார்ப்பதற்கு கொடியது
உள்ளுக்குள்ளே இனியது
சுவைத்து பார்த்தால் இனிப்பது
அதனை எப்படி சுவைப்பது?
நாங்கள் சொல்லி தருகிறோம்
பலாப்பழத்தை அறுக்கவும்
உருவம் திறந்து பார்க்கவும்
கோழி முட்டை வடிவத்தில்
கொழு கொழுவென இருக்குது
சுற்றி வர நாருக்குள்
குத்துக்கல்லாய் இருக்குது
மஞ்சல் நிறமாய் இருக்குது
கையில் எண்ணை பூசியே
நாரிலிருந்து பிரிக்கவும் உள்ளிருக்கும்
கொட்டையை தனியாய் எடுத்து வைக்கவும்
மீதமுள்ள சுளைகளை வாயில்
போட்டு சுவைக்கவும், சுவையை நாக்கு
உணர்ந்தபின் உள்ளம் துள்ளி ஆடுமே !
எடுத்த வைத்த கொட்டையை
வேக வைத்தும் உண்ணலாம், தீயில்
சுட்டும் உண்ணலாம் புரத சத்து உள்ளது. |
||||||||
Eat jackfruit | ||||||||
by Dhamotharan.S on 21 Apr 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|