LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்- மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு!

இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியம் தலைவர் சுஷில் சந்திரா கூறியதாவது:

வரி செலுத்தும் முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்பட உள்ளன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம், அதாவது 6.08 கோடியாக அதிகரித்து உள்ளது. அமலாக்கப் பிரிவு வரி விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்போர் அல்லது வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்போர் வருமான வரி கணக்கு தாக்கலின் போது அது தொடர்பான விபரம் அளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய பான் கார்டு அவசியம் ஆக்கப்பட்டு உள்ளது. 

பான் கார்டு விண்ணப்பிக்க தாய் மட்டும் கொண்டவராக இருந்தால் விண்ணப்ப படிவத்தில் தந்தை பெயர் குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை. ரூ.5 லட்சத்திற்கு கீழ் மொத்த விற்பனை அல்லது விற்றுமுதல் அல்லது மொத்த வருவாய் கொண்டவர்களுக்கு பான் கார்டு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 06 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நரேந்திர மோடி மீண்டும்  பிரதமர் ஆகிறார்! நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்!
2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல் 2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்
பெட்ரோல்-டீசல் விலையை குறுஞ்செய்தி மூலம் அறிய இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு! பெட்ரோல்-டீசல் விலையை குறுஞ்செய்தி மூலம் அறிய இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு!
பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும்  22-ந் தேதி விண்ணில்  செலுத்தப் படுகிறது! பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் வரும் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப் படுகிறது!
உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர்- இங்கல்ல; ஜப்பானில்! உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர்- இங்கல்ல; ஜப்பானில்!
ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி.  தேர்வு முடிவுகள் வெளியீடு! ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு!
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்! நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.