LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரசுப் பள்ளி டு ஸ்காட்லாந்து! நானோ தொழில்நுட்பத்தில் கலக்கும் தமிழர் சுதாகர் பிச்சை முத்துக்குத் தமிழக அரசு விருது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த ஒருவர் ஸ்காட்லாந்தில் மிகப் பெரிய ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

 

தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம் என்று ஒரு விழாவை ஆண்டு தோன்றும் நடத்தி வருகிறது. அதில் தமிழ்நாட்டிலிருந்து உலக முழுக்க சென்று சாதித்து வரும் தமிழர்கள் அழைக்கப்பட்டு, கவுரவிக்கப்படுகின்றனர்.

 

இந்த ஆண்டுக்கான விழா சில தினங்கள் முன்னர் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் கலந்து கொண்ட சுதாகர் பிச்சைமுத்து முதல்வர் ஸ்டாலின் கைகளில் விருது பெற்றுள்ளார்.

 

விருது குறித்து அவர் கூறும்போது, "இதை நான் பெருமைக்குரிய ஒரு தருணமாகத்தான் பார்க்கிறேன். தமிழ்நாடு அரசு செய்த உதவிகளால் படித்து வெளிநாட்டுக்குச் சென்றவன் நான். இன்றைக்கு என்னை அழைத்து அரசு கவுரவித்திருக்கிறது.

 

கழிவுநீரிலிருந்து ஹைட்ரஜன் வாயு

 

Heriot watt university நான் நானோ தொழில்நுட்பம் துறை சம்பந்தமாக நான் பணியாற்றி வருகிறேன். குறிப்பாகக் கழிவுநீரிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைத் தயாரிப்பது என்பது தொடர்பாகத்தான் நான் ஆய்வு செய்துள்ளேன்.

 

அதிலும் குறிப்பாகப் பசுமை ஹைட்ரஜன் வாயுவைத் தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன். வழக்கமாக இப்போது நடைமுறையில் உள்ள இரசாயனம் மெத்தடாலஜி மூலம் இரசாயனம் ரீஃபார்மிங் செய்கிறார்கள். அதில் கார்பன் டை ஆகிசைட் கலப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே அதற்கு மாற்றாக Electrolysis technology கொண்டுவந்தார்கள்.

 

ஹைட்ரஜனை தயாரிப்பதற்குத் தூய நீர் தான் தேவையாகிறது. அதாவது H2O. இதை நீங்கள் இரண்டாக உடைத்தால் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிக்க வேண்டும். இதனை Water Splitting என்று சொல்வோம்.

 

அந்த முறையில் பிரிக்கத் தூய நீர்த் தேவை. அதாவது நாம் குடிநீராகப் பயன்படுத்தும் நீரின் தரத்தைவிட அதிகத் தரம் தேவை. ஆனால், தூய நீர் முறை என்பது கஷ்டமாக உள்ளது.

 

ஆகவேதான் கழிவுநீர் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று நானோ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்துள்ளேன். இந்த முறையில் பல சாதகமான அம்சங்கள் நமக்குக் கிடைக்கும் என்று ஆராய்ந்துள்ளேன். இன்றைக்கு மின்கலத்துக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் தான். உலகமே அதை நோக்கித்தான் பயணித்துக்கொண்டுள்ளது.

 

ஒரு கிலோ கிராம் ஹைட்ரஜனை எரித்தால் கார்பன் டை ஆக்சைட் வெளியேறாது. அதே நீங்கள் ஒரு கிலோ கிராம் பெட்ரோலோ, டீசலோ, மண்ணெண்ணெய்யோ எரித்தால், கிட்டத்தட்ட 8 மடங்கு கார்பன் டை ஆக்சைட்டை அது வளிமண்டலத்தில் உமிழும்.

 

ஆகவேதான் பெரும்பாலான நாடுகள் ஹைட்ரஜனை நோக்கிச் செல்கிறார்கள். பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான மாற்றாக ஹைட்ரஜனை கையில் எடுத்துள்ளார்கள். அதிலும் பசுமை ஹைட்ரஜன். ஹைட்ரஜனை நாம் உற்பத்தி செய்ய வேண்டும்.

 

ஆனால், அதன் மூலம் நமக்கு கார்பன் டை ஆக்சைட் என்ற நச்சு வெளியேறக் கூடாது. அதுதான் நமது கருத்துரு.

 

மிகப்பெரிய பயன் கிடைக்கும்.

 

இன்றைக்கு உலகமே தண்ணீர் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அப்படியான நிலையில் நன்னீர் மூலம் இந்த ஹைட்ரஜன் தயாரிப்பு தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. கூடுதலான குடிநீர்ப் பிரச்சினையை இது உருவாக்கலாம்.

 

அதை உணர்ந்ததால்தான் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மூலம் ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான ஆய்வு தேவையாக இருந்தது. அதைத்தான் நான் செய்துவருகிறேன்.

 

நான் ஸ்காட்லாந்தில் இருக்கிறேன். அங்கே மிகப்பெரிய வருமானமே விஸ்கி தயாரிப்பு மூலமே கிடைக்கிறது. அங்கே அதிகப்படியான கழுவுநீரை வெளியேற்றும் விஸ்கி தொழிற்சாலைகள்தான் உள்ளன. பல பில்லியன் அளவுக்கான தண்ணீரை நாங்கள் இதற்குப் பயன்படுத்தினால், அதன்மூலம் மிகப்பெரிய பயன் கிடைக்கும்.

 

சுழற்சி பொருளாதார அடிப்படையில் கழுவுநீரைச் சுத்தப்படுத்தியதைப் போன்று ஆகும். அதேநேரத்தில் ஹைட்ரஜன் தயாரிப்பதற்கும் அது பயன்படும். எனவே இது டு இன் ஒன்று இலாபம் தரும் ஆராய்ச்சி.

 

இன்னும் இரண்டு ஆண்டுகளில் தொழிற்சாலைகளில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து விடுவோம். அதற்கான ஆராய்ச்சி தற்போது முடியும் தறுவாயில் உள்ளது" என்றார்.

by Kumar   on 23 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.