LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!

அனைவரது மனதையும் கவரும் வகையில் எழுதிவரும் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவர் எஸ். இராமகிருஷ்ணன்.  அவரது ‘சஞ்சாரம்’ என்ற படைப்புக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு உள்ளது. 

சாகித்திய அகாடமி விருது என்பது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

'சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதியதற்காக பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் இந்த(2018) ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பக்திச் சொற்பொழிவு ஆகியவற்றின் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இராமகிருஷ்ணன் தலைசிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல; மிகச்சிறந்த சொற்பொழிவாளர். தங்கு தடையின்றி அருவி போலப் பொழியக்கூடியவர். உலக இலக்கியங்களை எல்லாம் பேருரைகளாகத் தந்திருக்கின்றார். தன்னை ஒரு கதைசொல்லி என்றே சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர். 

அவரது படைப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும் தகுதியுடையவர் எனப் பலராலும் பாராட்டப்படக் கூடியவர் எனக் கூறினால் அதில் மிகையில்லை.

by Mani Bharathi   on 06 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவும் அனைவருக்குமான முழுமையான தகவல் தளம்.. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவும் அனைவருக்குமான முழுமையான தகவல் தளம்..
சென்னையில் திருவையாறு….  ஒரு கலாச்சாரத் திருவிழா. சென்னையில் திருவையாறு…. ஒரு கலாச்சாரத் திருவிழா.
உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை நிறுவனர்- தமிழுக்காகவே வாழும் முனைவர் 'ஈழம்' தமிழப்பனார்! உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை நிறுவனர்- தமிழுக்காகவே வாழும் முனைவர் 'ஈழம்' தமிழப்பனார்!
மதுரையில் டிசம்பர் 28, 29, 30  தேதிகளில் உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாடு! மதுரையில் டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாடு!
தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் உள்ள ஊரின் பெயர்களை தமிழில் மாற்ற அரசாணை வெளியிடப்படும்:  அமைச்சர் பாண்டியராஜன் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் உள்ள ஊரின் பெயர்களை தமிழில் மாற்ற அரசாணை வெளியிடப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராமங்கள்  1187 ஐயும்  தொகுத்து  கிராமங்களுக்கு உதவ கஜா தகவல் தளம் வெளியீடு.. கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் 1187 ஐயும் தொகுத்து கிராமங்களுக்கு உதவ கஜா தகவல் தளம் வெளியீடு..
பாரம்பரிய நெல்வகைகளை  மீட்டெடுக்க அர்ப்பணித்து வாழ்ந்து நம்மிடமிருந்து விடைபெற்றார்  நெல் ஜெயராமன்... பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுக்க அர்ப்பணித்து வாழ்ந்து நம்மிடமிருந்து விடைபெற்றார் நெல் ஜெயராமன்...
மென்பொருளில் மாற்றம்: பத்தே நிமிடத்தில் பொதுமக்களின் பத்திரம் பதிவு செய்ய பதிவுத்துறை ஐஜி உத்தரவு! மென்பொருளில் மாற்றம்: பத்தே நிமிடத்தில் பொதுமக்களின் பத்திரம் பதிவு செய்ய பதிவுத்துறை ஐஜி உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.