|
||||||||
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை(sakkaravalli kizhangu adai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப் சர்க்கரை வள்ளிக் கிழங்கு - கால் கிலோ வெல்லம் - கால் கிலோ ஏலக்காய் - 3 நெய் - 100 கிராம் தேங்காய் - அரை மூடி செய்முறை 1.முதலில் அரிசியை இரவே ஊற வைக்க வேண்டும். காலையில் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.சர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்றாகக் கழுவி அதையும் சிறு துண்டுகளாக அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 3.வெல்லத்தை தூளாக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி வெல்லம் கரைந்ததும் மாவில் வெல்லக்கரைசல்,தேங்காயை துருவல் ஊற்ற வேண்டும். 4.ஏலக்காயை தூளாக்கி மாவில் போட்டு அனைத்தையும் நன்கு கலந்து அடை மாவு பதத்திற்கு தயார் படுத்தவும். 5.தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறுசிறு அடைகளாக தட்டி, சுற்றி நெய் விட்டு சிறு தணலில் வேக விடவும். வெந்தவுடன் சூடாக பரிமாறவும் |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|