LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF

சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

வைதேஹி ஹெர்பர்ட்  தமிழ் நாட்டின் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர். இவர் 18 சங்க இலக்கிய தொகை நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டதற்காகப் புகழ் பெற்றவர்.
**************************
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் நலவாழ்வு நிர்வாகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றவர். [1] அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஹவாயில் வசித்துவருகிறார்.
*****************************
கல்லூரியில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றவர் இவர். இவர் சங்க இலக்கிய நூல்களை ஐயம் திரிபற கற்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். சென்னை இராணி மேரி கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியை முனைவர் ருக்மணி ராமச்சந்திரனை அணுகி முல்லைப்பாட்டு என்ற தொகை நூலை இவர் கற்றுக்கொண்டார். 
*******************************
இவர் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை ஆகிய 18 சங்க இலக்கிய நூல்கள், ஏழு பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முத்தொள்ளாயிரம் மற்றும் பாண்டிக்கோவை ஆகிய தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 
*****************************
சங்கத் தமிழ் தொகை நூல்களில் இடம்பெறும் சொற்றொடர் அகராதியையும் (ஆங்கிலம்: Concordance) தொகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது சங்க இலக்கிய தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்காக 20 வலைத்தளங்களையும் (learnsangamtamil.com) உருவாக்கியுள்ளார். மாணவர்களின் நிகழ்நிலை கற்றல் நடவடிக்கைகளுக்காகவும் தொலைதூர கல்வியினை ஊக்குவிக்கவும் இந்த வலைத்தளங்கள் மிகவும் உதவுகின்றன. தமிழ் ஆர்வலர்களுக்காக பல சங்க இலக்கிய பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாட்டில் கரோலினாவின் தமிழ்ச் சங்கம், கிரேட்டர் வாஷிங்டனின் தமிழ்ச் சங்கம், டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், அவ்வை தமிழ் மையம் மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை. மிச்சிகன் தமிழ்ச் சங்கம், தமிழ் இலக்கியத் தோட்டம் மற்றும் டோரான்டோ தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவர் பல பயிற்சி பட்டறைகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு புறநானூறு செய்யுள்களை கற்பிக்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளார்.
*******************************
சங்க இலக்கியநூல்களில் இடம்பெற்றுள்ள பல சொற்கள் மற்றும் சொல்லடைவுகள் இன்று புழக்கத்தில் இல்லை. எனவே இந்தச் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் கடினமும் சிக்கலும் மிகுந்திருந்ததாகவும் குறிப்பிட்டுளார்.
************************************
மொழிபெயர்ப்பு பணியை பாராட்டி விருதுகள்
**********************************
தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா 2012 ஆம் ஆண்டுக்கான விருதினை வழங்கியுள்ளது. 2. நல்லி குப்புசாமியின் புரவலில் திசைஎட்டும் இதழ், 2012 ஆம் ஆண்டுக்கான நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதினை அளித்துள்ளது. 3. 2013 ஆம் ஆண்டு மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங்கில் நடந்த புறநானூறு மாநாட்டில் இவர் கௌரவிக்கப்பட்டார். 4. 2014 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (ஆங்கிலம்: Federation of Tamil Sangams of North America (FETNA) நடத்திய விழாவில் விருது வழங்கினர்.

வைதேஹி ஹெர்பர்ட்  தமிழ் நாட்டின் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர். இவர் 18 சங்க இலக்கிய தொகை நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டதற்காகப் புகழ் பெற்றவர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் நலவாழ்வு நிர்வாகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றவர். [1] அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஹவாயில் வசித்துவருகிறார்.

கல்லூரியில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றவர் இவர். இவர் சங்க இலக்கிய நூல்களை ஐயம் திரிபற கற்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். சென்னை இராணி மேரி கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியை முனைவர் ருக்மணி ராமச்சந்திரனை அணுகி முல்லைப்பாட்டு என்ற தொகை நூலை இவர் கற்றுக்கொண்டார்.

இவர் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை ஆகிய 18 சங்க இலக்கிய நூல்கள், ஏழு பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முத்தொள்ளாயிரம் மற்றும் பாண்டிக்கோவை ஆகிய தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

20 வலைத்தளங்கள்

சங்கத் தமிழ் தொகை நூல்களில் இடம்பெறும் சொற்றொடர் அகராதியையும் (ஆங்கிலம்: Concordance) தொகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது சங்க இலக்கிய தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்காக 20 வலைத்தளங்களையும் (learnsangamtamil.com) உருவாக்கியுள்ளார். மாணவர்களின் நிகழ்நிலை கற்றல் நடவடிக்கைகளுக்காகவும் தொலைதூர கல்வியினை ஊக்குவிக்கவும் இந்த வலைத்தளங்கள் மிகவும் உதவுகின்றன. தமிழ் ஆர்வலர்களுக்காக பல சங்க இலக்கிய பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாட்டில் கரோலினாவின் தமிழ்ச் சங்கம், கிரேட்டர் வாஷிங்டனின் தமிழ்ச் சங்கம், டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், அவ்வை தமிழ் மையம் மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை. மிச்சிகன் தமிழ்ச் சங்கம், தமிழ் இலக்கியத் தோட்டம் மற்றும் டோரான்டோ தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவர் பல பயிற்சி பட்டறைகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு புறநானூறு செய்யுள்களை கற்பிக்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளார்.

சங்க இலக்கியநூல்களில் இடம்பெற்றுள்ள பல சொற்கள் மற்றும் சொல்லடைவுகள் இன்று புழக்கத்தில் இல்லை. எனவே இந்தச் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் கடினமும் சிக்கலும் மிகுந்திருந்ததாகவும் குறிப்பிட்டுளார்.

மொழிபெயர்ப்பு பணியை பாராட்டி விருதுகள்

தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா 2012 ஆம் ஆண்டுக்கான விருதினை வழங்கியுள்ளது. 2. நல்லி குப்புசாமியின் புரவலில் திசைஎட்டும் இதழ், 2012 ஆம் ஆண்டுக்கான நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதினை அளித்துள்ளது. 3. 2013 ஆம் ஆண்டு மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங்கில் நடந்த புறநானூறு மாநாட்டில் இவர் கௌரவிக்கப்பட்டார். 4. 2014 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (ஆங்கிலம்: Federation of Tamil Sangams of North America (FETNA) நடத்திய விழாவில் விருது வழங்கினர்.

by Kumar   on 22 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.