LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு!

மனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஈரோட்டில் பேசினார்.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி  நடந்தது. 

இதில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய துணைத்தலைவரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: 

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன் அறிவியல் தமிழையும் நான்காவதாக சேர்க்க வேண்டும். அறிவியல் என்பது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை கொண்டது. புதிய கண்டுபிடிப்பு மட்டுமே மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்லும். 

கடந்த ஒரு வாரம் வரை இந்த பேரண்டம் 13 ஆயிரத்து 800 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக சொல்லப்பட்டது. முதன்முதலில் ஆதிமனிதன் கல்லை பயன்படுத்துவதை கண்டுபிடித்தான். அதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு. 

ஆதிமனிதன் தமிழைத்தான் பேசி உள்ளான் என்பதை உறுதியுடன் கூறுவேன்.  சந்திரனில் சென்று ஆய்வு செய்த பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நீர் இல்லை என்று கூறினார்கள். ஆனால், 40 ஆண்டுக்கு பிறகு நாம் முழு நிலவையும் ஆய்வு செய்து பல இடங்களில் நீர் இருப்பதை முதல் முறையிலேயே கண்டறிந்து விட்டோம்.

அறிவியல் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், மனிதனின் அன்றாட வாழ்வில் கணினிகள் மனிதன் மூளையை மழுங்கடித்து விடுகின்றன.  இன்று வரை மனிதன் தன் புத்திக் கூர்மையால் வளர்ந்து இருக்கிறான். ஆனால், தற்போது கம்ப்யூட்டர் பயன்பாட்டால் சிந்திப்பது குறைந்து விட்டது. தொழில்நுட்ப கோளாறால் தவறு ஏற்பட்டாலும், நாம் அதை உண்மை என்று நம்பிவிடுகிறோம். 

கால்குலேட்டர் தவறான எண்ணை காண்பித்தாலும், கூகுள் மேப் தவறான வழியைக் காட்டினாலும் சிந்திக்காமல் நம்பும் நிலையில் மனிதர்கள் மாறிவிட்டார்கள். இது மனிதனை மீண்டும் கீழே கொண்டு செல்லும் வகையில் எச்சரிக்கை விடுக்கிறது. 

by Mani Bharathi   on 13 Aug 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மதுரையில் முதலாவது உலகத்  தமிழிசை மாநாடு! மதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு!
செய்திச்சுருக்கம் (செப்டம்பர் மாதம், 2019) செய்திச்சுருக்கம் (செப்டம்பர் மாதம், 2019)
வரலாற்றைத் திரும்(ப் )பிப் பார்க்க வைத்த கீழடி வரலாற்றைத் திரும்(ப் )பிப் பார்க்க வைத்த கீழடி
கீச்சுச் சாளரம் தொகுப்பு: நீச்சல்காரன் கீச்சுச் சாளரம் தொகுப்பு: நீச்சல்காரன்
சிரிப்பு வலை  -நீச்சல்காரன் சிரிப்பு வலை -நீச்சல்காரன்
மூன்றாவது  தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. மூன்றாவது தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
செய்திச்சுருக்கம் (ஆகஸ்ட் மாதம், 2019)  -தொகுப்பு: இளவழுதி வீரராசு செய்திச்சுருக்கம் (ஆகஸ்ட் மாதம், 2019) -தொகுப்பு: இளவழுதி வீரராசு
தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்தல் மற்றும் மரம் நடுதல் பணிகள் தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்தல் மற்றும் மரம் நடுதல் பணிகள்
கருத்துகள்
08-Sep-2019 16:11:57 இராமகிருஷ்ணன் சங்கர பிள்ளை said : Report Abuse
மனிதனுக்கு சோம்பேறித்தனங்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் போகிறதே தவிர குறைந்தபாடில்லை. கேட்பது...பார்ப்பது அவர்களுக்கு மிக எளிதாகப் போய்விட்டது. ஒருவகையில் திரைப்பட ஊடக் வளர்ச்சிக்கு மனிதனின் சோம்பல்தனமும் ஒரு சாதகம்தான். எந்த நேரமும் மனிதனின் இணயதள தொடர்பாடுகள் அவனுடைய மூளையை மழுஙகடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. positive சிந்தனை உள்ள மனிதர்களைக் காட்டிலும் negative சிந்தனை உள்ள மனிதர்களே இப்போது அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பாதிப்புகளுக்கு கணினிகளும் மிகப் பெரிய காரணியாக அமைந்துபோய்விட்டது. ஒரு காலகட்டத்தில் தாய்ப்பாலில் எந்தவித மாசுகளும் க்ற்பிக்கப்படவில்லை. ஆனால், இப்போது நடப்பது என்ன? நிலாச்சோறு என்று பிள்ளைகளுக்கு சோறூட்டிய காலத்தில் பாட்டியின் கைச்சுத்தம் பார்க்கவில்லை...ஆனால், இப்போது நடப்பது என்ன? மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்கிறார்கள். ஆனால், எந்த மாற்றங்களைச் சொல்கிறோம். மாற்றம் என்ற சொல்லையா? அல்லது நித்தம் மாற்றம் கொண்டிருக்கும் செயல்பாடுகளையா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.