LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செய்திச்சுருக்கம் (செப்டம்பர் மாதம், 2019)

 

 • தாய்மொழியில் படிக்கும் குழந்தையால் தான் நன்றாகப் படிக்க இயலும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா .

 

 • உச்சநீதி மன்ற நீதிபதியாக ராமசுப்பிரமணியன் பதவி ஏற்பு .

 

 • முதல்முறையாக  கம்யூனிசத்தைத் தாண்டி, அதிமுகவின் பிரவீனா பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்வு .

 

 • தெலுங்கானா ஆளுநராகத் திருமதி தமிழிசை பதவியேற்ற பின்னர் மக்களைச் சந்தித்து குறை கேட்க இருப்பதாக பேட்டி.

 

 • அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை - ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு .

 

 • ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது .

 

 • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 23 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு, 24ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்னுடன் சந்திப்பு. 

 

 • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் தரப்போகும் பிரதமர் கிஷான்  திட்டத்தில் அடுத்த மாதம் முதல்  இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

 

 • மராட்டியம், ஹரியானா மாநிலத் தேர்தலும் தமிழக நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜர்நகர் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் அறிவிப்பு.

 

 • அரசியல் சட்ட வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர அமர்வு .

 

 • சென்னை உயர்நீதிமன்ற இடைக்காலத் தலைமை நீதிபதியாக  வினீத் கோத்தாரி பதவி ஏற்றார் .

 

 • பெட்ரோல் டீசலை ஜீஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது - தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஜீஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தல் .

 

 • கொச்சி மராடு பகுதியில் நீர்நிலைகளை ஒட்டி விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வேண்டும், அங்கு குடியிருப்போருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - உச்சநீதி மன்றம் தீர்ப்பு .

 

 • இந்தியாவில் 7 லட்சம் கோடி முதலீடு செய்ய சௌதி அரேபியா உறுதி .

 

 • வழிகாட்டி மதிப்பைக் குறைத்து, பத்திரப்பதிவு செய்த 6 சார்பதிவாளர்கள் இம்மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் .

 

 • பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்களுக்கான நிலுவைத்தொகையை அக்டோபர் 15க்குள் கொடுங்கள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் .

 

 • தேசியக்கல்வி கொள்கை குறித்து 2 லட்சம் பேர் அரசு இணையத்தில் கருத்து பதிவு   .

 

 • நாடு முழுதும் 5000 தொடரை நிலையங்களில் வைபை  இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .

 

 • அடுத்த ஆண்டுக்குள் 565 கோடி செலவில் மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் பழனிச்சாமி .

 

 • தமிழகம் கேரளா நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு இரண்டு மாதத்தில் தீர்வு - தமிழக முதல்வர் பழனிச்சாமி.

 

 • ரஜினி, கமல் என்னைப் பார்த்துத் திருந்துங்கள், அரசியல் உங்களுக்கு வேண்டாம் - நடிகர் சிரஞ்சீவி அறிவுரை .

 

 • ஜீவசமாதி அடையப்போவதாக கூறி வசூலில் ஈடுபட்ட சிவகங்கை இருளப்பசாமி மற்றும் 7 பேர் மீது வழக்கு பதிவு .

 

 • மேற்கு வங்கம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் சிலிகுரி - துப்ரி இடையே ஓடும் இண்டெர்சிட்டி ரயில் மோதிய வேகத்தில் யானை ஒன்று பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி இறந்தது.

 

 • தமிழக தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு .புதிய கொள்கை வெளியிட்டார் முதல்வர். 

 

by Swathi   on 14 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்னாட்டு தமிழ்த் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு பன்னாட்டு தமிழ்த் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு
நவம்பர் 1ஆம் தேதி இனி “தமிழ்நாடு நாள்” தமிழக அரசு அரசாணை வெளியிட்டது நவம்பர் 1ஆம் தேதி இனி “தமிழ்நாடு நாள்” தமிழக அரசு அரசாணை வெளியிட்டது
கீச்சுச் சாளரம் -தொகுப்பு: நீச்சல்காரன் கீச்சுச் சாளரம் -தொகுப்பு: நீச்சல்காரன்
சிரிப்பு வலை -நீச்சல்காரன் சிரிப்பு வலை -நீச்சல்காரன்
உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு அறிவிப்பு உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு அறிவிப்பு
தமிழகத்தில் இயற்கையைப் பாதுகாக்க உழைத்துவரும் தமிழகத்தில் இயற்கையைப் பாதுகாக்க உழைத்துவரும் "சோலைவனம்" அமைப்புடன் ஓர் நேர்காணல் இரமா ஆறுமுகம், டெலவேர்,அமெரிக்கா
திரு.சாவித்திரிகண்ணன் அவர்கள் எழுதியுள்ள  நான்கு நூல்கள் வெளியீட்டு விழா திரு.சாவித்திரிகண்ணன் அவர்கள் எழுதியுள்ள நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
தமிழ்நாடு நாளில் முதல்வர்அவர்கள் கிழடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு தமிழ்நாடு நாளில் முதல்வர்அவர்கள் கிழடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.