LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தனி ஆணையம்: இலங்கை அரசு முடிவு

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை வலுப்படுத்த தனி ஆணையம் அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
*****************************
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  உள்நாட்டுப் போருக்குப் பிறகு தேச ஒற்றுமையை வலுப்படுத்த தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சீர்திருத்தங்கள், நீதிமன்றங்கள் மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வினையாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை நோக்கி, தனி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.      உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அந்த ஆணையம், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு விரைவில் உருவாக்கப்படும். இதுதொடர்பாக அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கோரப்படும்.
*****************************
உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது
***********************************************
இந்தத் தனி ஆணையம் என்பது போரால் ஏற்பட்ட வேதனையில் இருந்து தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் விடுபடும் வகையில், உண்மையைத் தெரிந்துகொள்ள மறுக்க முடியாத உரிமையை இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                                        போருக்குப் பிறகு முந்தைய காலங்களில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாகவும் இந்தத் தனி ஆணையம் மறு ஆய்வு செய்து பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
********************************
இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை வலுப்படுத்த தனி ஆணையம் அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  உள்நாட்டுப் போருக்குப் பிறகு தேச ஒற்றுமையை வலுப்படுத்த தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் சீர்திருத்தங்கள், நீதிமன்றங்கள் மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எதிர்வினையாற்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை நோக்கி, தனி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.      உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அந்த ஆணையம், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு விரைவில் உருவாக்கப்படும். இதுதொடர்பாக அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கோரப்படும்.

உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது

இந்தத் தனி ஆணையம் என்பது போரால் ஏற்பட்ட வேதனையில் இருந்து தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் விடுபடும் வகையில், உண்மையைத் தெரிந்துகொள்ள மறுக்க முடியாத உரிமையை இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                                        போருக்குப் பிறகு முந்தைய காலங்களில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாகவும் இந்தத் தனி ஆணையம் மறு ஆய்வு செய்து பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், 2009-இல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 10 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.