LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!

தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, நமது பெருமை மிகு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாக, ஒப்புமை பெற்று, அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்ந்து வரும் 2021 சனவரி மாதத்திற்கும் பெற்றிருக்கின்றோம்.

இணைப்பில் உள்ள அரசு பிரகடனத்தில் நமது தமிழ் மொழி, கலை, வரலாறு, பண்பாட்டுச் சிறப்பு அது சார்ந்து நாம் தொடர்ந்து ஆற்றி வரும் பணிகள் குறித்தும், நமது தமிழ் மாணவர்கள் பெற்ற இருமொழி முத்திரை மற்றும் அவர்களுக்காக நாம் ஏற்படுத்திய கல்வி ஊக்கத்தொகை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெருமை மிகு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது. இதற்காக உழைத்த அனைத்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும், மினசோட்டா மாநில ஆளுநர் மற்றும் அலுவலர்களுக்கும் நன்றி...பல்வேறு சாதனைகளைப் படைத்திட்ட நமது தமிழ்ச் சங்கத்திற்கு என்றும் ஆதரவளிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி! இணையம் வழியாக நடைபெறப்போகும் சங்கமம் - 2021 (சனவரி 24 - கோரிக்கைக்கு ஏற்ப தியதி மாற்றப்பட்டுள்ளது) நிகழ்வில் நாம் அனைவரும் மறவாமல் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்வோம்.

தமிழ் மொழி மாதம் பிரகடனம் - https://youtu.be/wtMqdzuGqVc

மினசோட்டாத் தமிழ்ச் சங்க குடும்பத்தினர்

Vanakkam,
we take this opportunity to wish all our members and our Tamil community A happy new year!! We are excited and happy to start the New Year with exciting news to our Tamil community. Our State Governor Tim Walz has proclaimed continuously for the second year, the month of January 2021 as “Tamil Language and Heritage Month“ in the state of Minnesota. It is a great milestone to achieve, let us celebrate and feel proud and honored to be a part of this community. As always, follow CDC guidelines during celebrations.

We take this opportunity to thank all the MNTS board members who were instrumental in working to get this proclamation sanctioned by the Governor. We sincerely thank Governor Tim Waltz and his staff for their incredible support for MN Tamil Community.

MNTS Family

by Swathi   on 02 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது. பப்புவா நியூ கினி ஆளுநருக்கு சாதனைத் தமிழன் விருது.
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமானச் சேவை தொடர்ந்து பாதிப்பு.
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.