தமிழர் ஆடைகள், தமிழர் அளவியல், தமிழக ஊர்ப் பெயர்கள், சென்னை (1639க்கு முன் பின்), மணப் பொருட்கள் (சிலப்பதிகாரத்தில்), தமிழர் பண்பாட்டுச் சொற்குவை, தொல்காப்பிய உரைவளம் (மரபியல்) முதலிய நூல்களின் ஆசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் கு.பகவதி அவர்கள், கொரனா தொற்றால் நேற்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
|