LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பாம்புக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து தமிழக மருத்துவர் சாசாதனை

பாம்பு என்றாலே உள்ளூற பயம்எழுவது இயற்கைதான். உலகளவில் சுமார் 2,968 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இந்திய அளவில் ராஜநாகம் மட்டுமே அதீத விஷத்தன்மை கொண்டது. தமிழகத்தில் சாரைப்பாம்பு, நீர்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்சைப்பாம்பு, கொம்பேறிமூக்கன், மண்ணுளி பாம்பு, பவளப்பாம்பு, அழகுபாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான் குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு உள்ளிட்ட சிலவகைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதில், நல்லபாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் வகை பாம்புகள் மட்டும் விஷமுள்ளவை.
***************************************
பாம்புகளை அழிவில் இருந்து மீட்கவும்
*********************************
காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், உணவுச்சங்கிலி உடைபட்டதாலும் பாம்பு இனங்கள் அழிவை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றன. உணவுதேடி வனத்தையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகும் பாம்புகள் பெரும்பாலும் கொல்லப்படுகின்றன. வனஉயிரின பாதுகாப்புச்சட்டம் 1972-ன்படி பாம்புகளை அடித்துக் கொன்றால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்டம் இருந்தும் பாம்புகள் கொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. பாம்புகளை அழிவில் இருந்து மீட்கவும், அவற்றை காப்பதன் அவசியம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு கால்நடை மருத்துவர் கே.அசோகன்.
***************************
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‘யானை’ டாக்டர்என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யன்நான். கடந்த 1996-ம் ஆண்டுமுதல் 2000-வது ஆண்டு வரை முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனக்கால்நடை மருத்துவ அலுவலராகவும், 2011-ம் ஆண்டுமுதல் 2014-ம் ஆண்டு வரை கோவை வஉசி உயிரியல் பூங்காவின் இயக்குநராகவும் நான் பணியாற்றியுள்ளேன். என் பணிக்காலத்தில் சுட்டித்தனமான யானைகளான சின்னதம்பி, விநாயகன், உதகை சங்கர், மக்னா மூர்த்தி ஆகியவற்றை வனக்குழுவுடன் இணைந்து, நான் பாதுகாப்பாக பிடித்தேன். 300 யானைகளுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளேன். சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, என்னால் சிகிச்சையளிக்கப்பட்டு ‘அம்மு’ என பெயரிடப்பட்ட யானைதான், தற்போது ஆஸ்கர் விருதை வென்ற ‘பொம்மி’.
*******************************************
டிரான்ஸ்மீட்டர் பொருத்தினேன்
**************************
வனத்துறையில் பணியாற்றியபோது மலைப்பாம்பு, கண்ணாடிவிரியன் என 100-க்கும் மேற்பட்ட பாம்புகளையும், ஆந்தைகள், முயல்கள், மயில்கள் போன்ற வனஉயிர்களையும் காயத்தில் இருந்தும், நோயில் இருந்தும் மீட்டுள்ளேன். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கராச்சிக்கொரை வனக்கால்நடை மருத்துவமனையில் 14 மலைப்பாம்புகளின் இயல்பை கண்டறிய அறுவை சிகிச்சையின் மூலம் டிரான்ஸ்மீட்டர் பொருத்தினேன். இது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.
**************************
நாகப்பாம்புக்கு புற்றுநோய்
*************************
 கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நாகப்பாம்பின் வயிற்றுப்பகுதியில் சற்று உப்பலாக சில கட்டிகள் இருந்ததைக்கண்ட பூங்கா ஊழியர்கள், எனக்கு தகவல் தெரிவித்தனர். பாம்பை பரிசோதித்தபோது, அவை புற்றுநோய் கட்டிகள் என தெரியவந்தது. உடனடியாக பாம்புக்கு நான் அறுவை சிகிச்சை செய்து, புற்றுநோயில் இருந்து மீட்டேன். இந்தியாவிலேயே விஷப்பாம்புக்கு செய்யப்பட்ட முதல் புற்றுநோய் அறுவை சிகிச்சை இதுதான். இதேபோல கோவை உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட சாரைப்பாம்புக்கு ‘ப்ரோட்டஸ்’ இனக் கிருமிகள் பாதிப்பால் 3 கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.
*****************************
உக்கடம் வாலாங்குளத்தில் மீன் பிடிக்கும் தூண்டில் கொக்கி தொண்டையில் சிக்கிய நிலையில் தண்ணீர் பாம்பு உயிருக்கு போராடியது. அதை பாம்புகள் பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மீட்டு, என்னிடம் கொண்டு வந்தனர். பாம்புக்கு தொண்டைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து பாதுகாப்பாக கொக்கியை அகற்றி, கரைந்து போகக்கூடிய நரம்பு கொண்டு தையல்போடப்பட்டது. அதன்பின் தீவிர கண்காணிப்பில், பாம்பு நலம்பெற்றது. இதுபோல, கட்டிட இடிபாடுகளிலும், விபத்திலும், உணவு கிடைக்காததாலும் உயிருக்கு போராடிய பல பாம்புகளை மீட்டுள்ளேன். அறுவை சிகிச்சைக்குப்பின் பாம்புகளை வெதுவெதுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எறும்புகள்கூட பாம்புகளுக்கு எமனாகிவிடும்.
*********************
அடைகாக்கும் ஆண் பாம்புகள் 
***********************
பொதுவாக தங்கள் இனங்களிலேயே தங்களுக்கான இணையை பாம்புகள் தேடிக்கொள்ளும். முட்டையிடும் உயிரினங்களில் பெண் இனங்களே அடைகாக்கும். ஆனால் பாம்பு இனங்களில் பெரும்பாலும் ஆண் பாம்புகள்தான் முட்டையை அடைகாக்கும். கட்டுவிரியன், பச்சைப்பாம்பு, மண்ணுளி பாம்பு ஆகியவை கருமுட்டையை வயிற்றில் சுமந்து, குட்டி போடுகின்றன. பெரும்பாலும் முட்டைகளுக்கு பாம்புகள் அதிக பாதுகாப்பு தருவதில்லை. இதனால் விவசாய நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும்கிடைக்கும் பாம்பு முட்டைகளை, பொதுமக்களும், விவசாயிகளும், வன ஆர்வலர்களும் என்னிடம் கொடுத்தனர்.அவற்றை செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கச்செய்துகாடுகளில் விட்டுள்ளேன். இவ்வாறு, நாகப்பாம்பு 50, சாரைமற்றும் தண்ணீர் பாம்பு 70, கண்ணாடிவிரியன் 42, பச்சைப்பாம்பு 62, மண்ணுளிப்பாம்பு 60 குட்டிகளை சத்தியமங்கலம், முதுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் விடுவித்துள்ளேன், என்றார்.

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.

தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.