LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சுதந்திர தின சிந்தனை- நினைவிடங்களை நினைவு கூர்வோம்

(தலைவர்களின் நினைவிடங்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை)

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரிலுள்ள காந்தி மண்டபத்தில் நாட்டுக்காகப் பாடுபட்ட பல்வேறு தியாகிகளின் நினைவிடங்கள், மணிமண்டபங்கள் உள்ளன. இத்தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு லோக் சத்தா கட்சி நிர்வாகிகள் காந்தி மண்டபத்திற்கு சென்றிருந்தோம். நாட்டுக்காக உடல்,பொருள்,ஆவி அத்தனையும் அர்ப்பணித்த இத்தியாகிகளின் நினைவிடங்கள் பராமரிக்கப்படும் நிலை குறித்து ஆழ்ந்த வருத்தமே தோன்றியது.

ஏராளமான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்நினைவிடத்தை மேம்படுத்த தமிழக அரசிற்கு கீழ்கண்ட கோரிக்கைகளை   பொதுமக்களின் சார்பாக முன்வைக்கிறோம்:

1. காந்திக்கு உள்ளது போல் நினைவிடங்களில் உள்ள எல்லாத் தலைவர்களுக்கும் (காமராஜர், ராஜாஜி, ரெட்டைமலை சீனிவாசன், பக்தவத்சலம்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, போராட்டங்களை நினைவு கூறும் விதமாக படங்கள், செய்திக்குறிப்புகள் வைக்கப்பட வேண்டும்.

 

2.  நினைவிடங்களுக்கு வந்து செல்பவர்களுக்கு அவர்களின் வரலாற்றை சுருக்கமாகத் தெரிந்துகொள்ள சிறுவெளியீடு (ஓரிரண்டு பக்கங்கள்) தரப்படவேண்டும்.

 

3. தலைவர்களின் போராட்ட வரலாறு, தன்னலமற்ற வாழ்க்கை  போன்றவற்றை உணர்வுபூர்வமாகக் காட்ட ஒளிப்படக் காட்சிகள்(Videos) திரையிட ஒளிப்படக் காட்சி அறைகள் அமைக்கப்படவேண்டும்.



4. தலைவர்கள், சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். அரசு நிதியுதவி அளித்து இப்புத்தகங்கள் சிறப்புச் சலுகை(50%) விலையில் விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

5. சுற்றுலாத் தலங்களில் வழிகாட்டிகள் இருப்பதுபோல் இங்கும் தலைவர்களின் வாழ்க்கையை எடுத்துச்சொல்ல, சந்தேகங்களுக்கு  விளக்கமளிக்க வழிகாட்டிகள் இருக்கச் செய்ய வேண்டும். ( தன்னார்வ நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்தால் சிறப்பாகப் பணிபுரிவார்கள்.)

 

6. இங்குள்ள திறந்தவெளி அரங்கில் தலைவர்கள் குறித்த குறும்படங்களை அடிக்கடி (தினந்தோறும் கூடத்) திரையிடலாம்.

 

7. ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்லும் இவ்விடத்தில் முறையான வாகன நிறுத்த வசதியில்லை.  வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்ய ஏராளமான இடம் காலியாக உள்ளது. இதில் இருசக்கர, நான்கு சக்கரங்கள் நிறுத்த வசதி செய்து தரவேண்டும்.

மெரினாவில் உள்ள காந்தி சிலை மற்றும் கன்னியாகுமரியிலுள்ள காமராஜர் மணிமண்டபத்தை மேம்படுத்த கடந்த வாரம் தமிழக அரசு ரூ.49 இலட்சத்தை ஒதுக்கி தியாகிகளைப் பெருமைப்படுத்தியது, வரவேற்புக்குரியது. இதே போல் மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்தி இளைய சமுதாயத்தின் மனதில் தியாகிகளின் நினைவுகளை, போராட்டங்களை பசுமரத்தாணி போல் பதியச் செய்யவேண்டும் என்பதே லோக் சத்தா கட்சியின் கோரிக்கை.

 

அடுத்த சுதந்திர தினத்தன்று, காந்தி மண்டபம் தியாகிகளின் உயிரோட்டமுள்ள நினைவுகளை சுமந்தபடி புதுப்பொலிவு பெற்றிருக்கும் என்று நம்புவோம். அனைத்துப் பொதுமக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

(படம்:காந்தி மண்டபத்திலுள்ள ராஜாஜி நினைவிடத்தில் உள்ள ராஜாஜி புகைப்படத்தில் காதல்கிறுக்கல்கள்….)

The new generation ought to get a better picture of freedom fighters!!

The Lok Satta Party TN unit President D.Jagadheeswaran, General Secretary Senthil Arumugam and State Youth Wing Secretary Jai Ganesh recently made a visit to the Gandhi Mandapam to take stock of the situation there, in the back drop of India's 66th Independence Day and the Chief Minister announcing lakhs of funds for a few other memorials on July 18th.

The team found the famous Gandhi Mandapam to be wanting the following improvements which do not take much to implement but will go a long way in making the Mandapam really achieve its objective.
The first glaring neglect is the lack of any parking space for visitors to the Mandapam. People have to park their vehicles on the busy road which can invite action from the traffic cops. Providing space to a limited no. of vehicles will make the mandapam more accessible. And then, though there is separate space for various great leaders like Rajaji, Rettaimalai Srinivasan, Bakthavathsalam, Kamarajar apart from Gandhiji and a separate Thiyaagigal mandapam there is hardly anything of academic value except for pictures and a one line description about it for the visiting students and public. There is very little literature on these leaders in those memorials. Proper write ups on the life of each of the leaders can be kept near each leader. Valuable additions like a book shop with books about those leaders, free flyers about them and a mini theater to play short clips about them can make the visit much more meaningful and engaging for everyone.

 

 

by Swathi   on 14 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.