LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது- மத்திய அரசு தகவல்!

வெளிநாட்டில் இருந்து  சுற்றுலாப் பயணிகளை வருவதில், தமிழ்நாடு  முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள உலகின் பழமையான கலாச்சாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோயில்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினர் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளாக வருவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

பன்னாட்டு விமான நிலையங்கள், தரமான சாலை வசதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் அதிகம் இருப்பதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில்,  12.1% அதிகரித்து உள்ளது.

2017-ம் ஆண்டு 15.55 மில்லியனாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2018-ம் ஆண்டு 17.42 மில்லியனாக அதிகரித்து உள்ளது என்றும் மத்திய அரசு தகவல் வெளியிட்டு  உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதில் 2014ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 17 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை!
‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்! ‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்! முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!
சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு-  இஸ்ரோ அறிவிப்பு! சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு!
தமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்! தமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்!
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்-ஆழ்ந்த இரங்கல்கள்
இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு! இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் - யுனெஸ்கோ அறிவிப்பு!
மத்திய பட்ஜெட் 2019-2020: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்! மத்திய பட்ஜெட் 2019-2020: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.