LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 436 - அரசியல்

Next Kural >

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும். சாலமன் பாப்பையா உரை:
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின், இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது? (அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும்அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப.)
மணக்குடவர் உரை:
தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம். இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் - முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது ? ஒன்று மில்லை. இது குடிகளின் வழக்குத் தீர்த்துத் தண்டித்தல் பற்றியது. பிறர் குற்றங்கண்டு தண்டிப்பவன் முன்பு தான் அக்குற்றமில்லாதவனா யிருத்தல் வேண்டும். அரசன் தன் குற்றத்தை நீக்காது பிறர் குற்றத்திற்குத் தண்டிப்பதே கு ற் ற மா ம். அங்ஙன மன்றித்தன் குற்றத்தை நீக்கியபின் தண்டிப்பின் அது முறைசெய்தலாம். அது அவன் கடமையாதலால் 'என்குற்ற மாகும்' என்றார். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை.
கலைஞர் உரை:
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிறர் குற்றத்தைக் கண்டிப்பதற்கு முன்னால்) தன் குற்றங்களை முதலில் நீக்கிக்கொண்டு அதன் பிறகு பிறர் குற்றத்தைக் கண்டிக்கிற தலைவனுக்கு ஒரு துன்பமும் வராது
Translation
Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan faults of other men.
Explanation
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
Transliteration
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin Enkutra Maakum Iraikku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >