LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழினப் போராளி சான்றோர் பேரவை நிறுவனர் உயர்திரு அருணாச்சலம் அவர்களுக்கு வீரவணக்கம்!

தனது ஆழ்ந்த அறிவாலும் சிந்தனைத் திறனாலும் தமிழ் மேம்படவும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் பாடுபட்டவர். சொல்லும் செயலும் ஒன்றாய் வாழ்ந்தவர். தமிழ் சான்றோர் பேரவை மூலமாக தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் தன் இறுதி மூச்சுள்ளவரை தமிழரின் நலனுக்காகவே முழு ஆற்றலையும் மூலதனமாகியவர். தமிழ் மக்கள் - மொழி நலன்களுக்காகத் துவளாது, அயராது, அச்சமின்றி உழைத்தவர். அதிலும் தந்தை பெரியார் தமிழ் இசை மன்றம் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய இசைகளான நாட்டுபுறப்பாட்டு, பறை உள்ளிட்டவற்றை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகளை நடத்தி தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றியவர். தமிழினப் போராளி இயக்குநர் உயர்திரு. அருணாச்சலம் அவர்கள் உயிர்நீத்தார் எனும் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குத்  தாங்கொணாத் துயரை ஏற்படுத்தியுள்ளது.

"அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் - என் உடையரேனும் இலர்."
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் - என்பும் உரியர் பிறர்க்கு."

போன்ற திருக்குறள்களுக்கு இணங்க அனைவராலும் அன்பு செலுத்தப்பட்ட, மதிக்கப்பட்ட தமிழ் உணர்வாளரான உயர்திரு. அருணாச்சலம் அவர்களுக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் சார்பாக உலகத் தமிழ் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அவரைப் பிரிந்து வாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் அவர் சென்ற பாதையில் தொடர்ந்து பயணித்து, தமிழ் மொழி, தமிழ் இசை வளர பாடுபட உறுதி ஏற்று நடப்பதே நாம் அனைவரும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

அன்புடன்,
முனைவர் வை. க. தேவ்
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு
24-மே-2016, அமெரிக்கா

by Swathi   on 03 Jun 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உழவர் திருவிழா – 2019 பஹ்ரைன் மனாமாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது உழவர் திருவிழா – 2019 பஹ்ரைன் மனாமாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
விக்டோரியா கேசி தமிழ் மன்றம் உற்சாகப் பொங்கலை கொண்டாடியது விக்டோரியா கேசி தமிழ் மன்றம் உற்சாகப் பொங்கலை கொண்டாடியது
மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது.. மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..
அமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு! அமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு!
அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள் அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள்
தமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள்ளது-தென் கொரிய தூதர் தகவல்! தமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள்ளது-தென் கொரிய தூதர் தகவல்!
விரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன்  விரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன் 
விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை! விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.