LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்தின் வேதாளம் தீபாவளிக்கு ரிலீஸ்!!

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, அஜீத், வீரம் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன் இணைந்து, ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். பெரும்பாலான படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்திற்கு பெயர் வைக்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த படத்திற்கு வேதாளம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு வேதாளம் எனப் பெயர் வைத்தற்கு என்னக்கரணம் என கோடம்பாக்கத்தில் விசாரித்த போது, நிகழ்கால, மற்றும் ஃப்ளாஷ் பேக் என இரு கதைகள் உள்ளனவாம். இதில் வேதாளம் என்பது ஃப்ளாஷ் பேக்கில் வரும் அஜித்தின் பெயராம். மேலும் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள மொட்டைத் தலை, காதில் கடுக்கன், கையில் காப்பு இருக்கும் தாதா போன்றத் தோற்றத்தில் தான் ஃப்ளாஷ் பேக்கில் வருகிறாராம் அஜித்.

படத்தில் இரண்டு அஜித் இல்லை. ஒரே அஜித் தான் தாதாவாக ஃப்ளாஷ் பேக்கில் இருப்பதாகவும், அந்த கேரக்டரின் பெயர்தான் வேதாளம் எனவும் காரணம் கிடைத்துள்ளது. எது எப்படியோ அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

வேதாளம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.

by CinemaNews   on 24 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன் ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதிமாறன்
லைசென்ஸ்  திரைப்படத்தின்  இசை & ட்ரெய்லர்  வெளியீட்டு விழா!... லைசென்ஸ் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!...
முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம் முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசும் லைசென்ஸ் திரைப்படம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.