வாட்டும் வெப்பம் தணிக்க வாங்கிய
வாடகை இலவச மின்விசிறி - மின்சாரம்
இல்லாமல் வியர்வை ஆறென ஓடியது
இம்சை வறுமையில் சுழன்று!
***
வியர்வை குளிப்பில் வெம்மை தணிக்க
விலை கொடுத்து வாங்கும் - செயற்கை
குளிர்பானம் தரும் கெடுதி உணர்ந்து
துளிர்இயற்கை பழரசம் அருந்து!
***
நாட்டம்இல்லா காரியம் ஆற்றி நட்பு
நாடகம் அரங்கேற்றும் பொய் _ முகம்
கொஞ்சமும் தளராது வளர்ந்தால் தலைகுனியும்
கொடுமையில் உண்மையன்பு உழன்று!
.. நாகினி
|