LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

(பெண்களின்) குடிப்பழக்கம்

குறிப்பு: இப்பதிவை வாசிக்கும் இணையதள நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் பெண்ணியத்திற்கு எதிரானதல்ல, பெண்ணியத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் பெண்ணியம் என்ற பெயரில் புதிதாக முளைத்துவரும் சமூகச் சீர்கேட்டை எதிர்க்கும் ஒரு பொது மனிதனின் கருத்து என்ற நிலைபாட்டினிலிருந்து வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

இன்று பொழுதுபோக்கு என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இல்லாமல், பொழுதுபோக்கே வாழ்க்கையாக மாறிவருகிறது. பொழுதுபோக்கிற்காகத் தொடங்கப்பட்ட பல செயல்கள் இன்று குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தியுள்ளன. 

சமீபத்தில் இணையத்தில் உலவும்போது தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான மதுபானக்கடை தொடங்கப்பட்டதை படித்து வியப்பில் ஆழ்ந்தேன். இவ்வளவு நாள் ஆண்களுக்குப் பயந்து (அரசு) மதுக்கடைகளுக்கு செல்லமுடியாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பயந்துகொண்டே இருப்பது! ஆண்-பெண் சமம்  என்பது விவாதங்களில் மட்டும் இருந்தால் போதுமா? இதை நடைமுறைப்படுத்தி நிஜவாழ்வில் சாத்தியமக்கவேண்டாமா என்று கேட்பவர்களுக்கு - இதோ ஒரு உதாரணம், பெண்களின் குடி/மதுப்பழக்கம் – ஆணுக்குப் பெண் நிகரென்று நிரூபிக்க!


டெல்லி செய்தியை வாசித்ததிலிருந்து இதுபற்றி எழுத வேண்டுமென்ற எண்ண என்னுள்ளிருந்தது. இதற்கு மற்றொரு காரணம் சமீபத்தில் இணையத்தில் வாசித்த வலைப்பதிவின் வெளிப்பாடு.

ஆண்கள் மதுவருந்துவதை ஏற்கும் இச்சமுதாயம் பெண்களின் குடிப்பழக்கத்தை ஏன் இழிவாகச் சித்தரிக்கின்றது? மதுவருந்துதல் தனிமனித உரிமையா அல்லது பொதுப்பிரச்சனையாகப் பார்க்கப்படவேண்டுமா? தனிமனித உரிமை என்றெண்ணினால்  பெண்கள் மதுவருந்துவது  மட்டும் ஏன் சமூகச் சீர்கேடாகச் சித்தரிக்கப்படுகின்றது? இதில் ஆண்களுக்கொரு நியாயம்? பெண்களுக்கொரு நியாயமா?

ஆண்-பெண் சமம் அல்லது பெண்ணியம் என்பது இதுதானா?

இப்பிரச்சனையை முழுமையாக அணுகும் முன், முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். எனது பார்வையில் பெண்ணியம் என்பது பெண்ணை/பெண்களைத் தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள் மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றிற்கெதிரான செயல்பாடு அல்லது கோட்பாடு.

பெண் மதுவருந்துதல் சரியா தவறா என்று விவாதிப்பதற்கு முன், பெண்களிலிடத்தில் குடிப்பழக்கம் உருவாக அல்லது பெண்கள் குடிப்பதற்கானக் காரணங்களைப் பற்றி ஆய்வோம். 


க்ளபிங்க் (Clubbing), சமூகமயமாதல் (Socializing), கேளிக்கை விடுதிகள், சோசியல் ஸ்ட்ரெஸ் போன்றவை முக்கிய வெளிக்காரணிகளாக அறியப்பட்டுள்ளது. இவைமட்டுமல்லாது வீட்டிற்குள் நிகழும் ஆண்களின் கேலி, மன அழுத்தம், குழந்தையின்மை, விவாகரத்து, பெற்றோர்களின் தவறான வளர்ப்புமுறைகள் போன்றவைகளும் காரணிகளாகவுள்ளது.  
நல்லதை சொல்லி தவறை கண்டிக்கும் பெற்றோர்கள் இங்கு மிகவும் குறைவு. பிள்ளையை பெற்றெடுத்தால் மட்டும் போதாது, அவர்களை முறையாக வளர்ப்பதும் பெற்றோரின் கடமையாகும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பது போல் பிள்ளைகளின் இதுபோன்ற தவறுகளுக்குப் பெற்றோர்களே காரணமாகின்றனர்.  இன்னொரு முக்கியக் காரணம் ஆண்களே!

ஆண்களிடத்தில் த்ரில் மற்றும் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கிய இப்பழக்கம் இன்று சமுதாயத்தில் புற்றுநோய் போல் பரவியுள்ளது. அதேபோல் மதுவருந்துதலென்பது பணம் படைத்த மற்றும் சமுதாய அந்தஸ்துள்ள பெண்களிடத்தில் மட்டுமல்லாது நகர்ப்புற பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வோரிடத்திலும் பரவிவருகிறது. இன்று இளம்பெண்களிடத்தில் மதுவருந்துவது குற்றமில்லை என்ற நிலைப்பாடு பரவலாக உள்ளது. கேம்பஸ் பார்ட்டி, அலுவலக பார்டிகளில் மதுவருந்துவது நாகரிகமாகக் கருதப்படுகின்றது.

மேற்கத்திய நாடுகளின் தாக்கமும், அவர்களின் பழக்கவழக்கங்களின் மீதுள்ள மோகமும், இன்றைய தவறான சினிமாக்களின் மறைமுகத் தாக்கமும் இளம்பெண்களிடத்தில் மதுப்பழக்கம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது. இது குடிப்பழக்கமுள்ள ஆண்களுக்கும் பொருந்தும்.

2010ல் 2% இருந்த மதுவருந்தும் பெண்களின் எண்ணிக்கை, 2015ல் 5%ஆக உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது 50% ஆகும் என்பதில் வியப்பில்லை. மதுவில் தொடங்கும் இதுபோன்ற விஷயங்கள் போதைப் பொருட்கள் வரை செல்லலாம். இது தனிமனிதனோடு மட்டும் நிற்காமல் இச்சமூகத்தையே அழிக்கும்.

இன்றைய நிலையில் மது அருந்தாதவர்கள் குற்றவாளிகளாக பாவிக்கப்படுகிறார்கள். நீ மது அருந்தியதில்லையா? நீயெல்லாம் ஆண்மகனா? போன்ற கேள்விகளை நண்பர்கள் என்னிடத்தில் கேட்டதுண்டு. ஒரு ஆண் தன்னை ஆண்மகன் என்று நிரூபிக்க மதுவருந்தினால் மட்டும் போதுமா? வியப்பாக உள்ளது.

நவீன இந்தியாவில் பெண்கள் சுயமுடிவெடுப்பது வரவேற்கத்தக்கது, அதே நேரத்தில் சுதந்திரம்  மற்றும் கருத்துச் சுதந்தரம் என்பது மதுவருந்தினால் வருமென்பது முற்றிலும் தவறானது. பெண்ணியம் மற்றும் பெண்முன்னேற்றம் என்பது ஆண்களுக்கெதிராக மதுவருந்துவதில் மட்டும்தான் உள்ளதா? பெண்களை சமமாக பாவித்து மரியாதையளிக்கும் ஆண்கள் வெகுகுறைவென்றாலும் எண்ணிக்கையில் இருக்கவே செய்கிறார்கள். அதேபோல் மது அருந்தாத ஆண்களும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.

இதில் இன்னும் ஸ்வாரசியமான விஷயம் யாதெனில், பெண்களின் குடிப்பழக்கத்தை தடுக்க பல்வேறு தனியார் கவுன்சிலிங் மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஆலோசனை மையங்களில் ஒரு கவுன்சிலிங்கிற்கு 25000 முதல் 100000 வரை வசூலிக்கப்படுகிறது. இன்னும் கொடுமையான விஷயம் ஆலோசனைக்குச் சென்ற பெண்ணொருத்தி அந்த மையத்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். இதுபோன்ற தவறான ஆலோசனை மையங்கள் நாடெங்கிலும் பெருகிவருகின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகின்றதோ இல்லையோ மதுவருந்தும் ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. என்னுடைய பார்வையில் இதுபோன்ற சமுக சீர்கேடுகள் அவசியம் தடுக்கப்பட வேண்டும். மதுவருந்துவதால் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக கற்பழிப்பு, பலாத்காரம், வன்கொடுமைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

பெண்ணியம் மற்றும் பெண் பாதுகாப்பைப் பற்றிப் பேசுபவர்கள் இதுபோன்ற பிரச்ச்னைகளுக்கெதிராக குரல் கொடுக்காமலிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்நிலை பிற்காலத்தில் நிகழவிருக்கும் அவலங்களை வரவேற்பதற்குச் சமம். 

இக்காலத்தில் பெண்கள் தனியே செல்வதே கடினமாக இருக்கும்போது, மதுவருந்திவிட்டு சென்றால் யோசிக்கவே பயமாக இருக்கிறது. பெண்பாதுகாப்பு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமையளிக்காமல் இதுபோன்ற சமூக சீர்கேட்டை வரவேற்பது இன்னும் வேதனை அளிக்கிறது.

இன்று புருஷன், மகன் எங்கு விழுந்துகிடக்கின்றான் என்று வேதனையில் புலம்பும் பெண்களைப் போல், நாளை பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோரும் கணவர்களும் புலம்பும் நிலை வெகுதொலைவில் இல்லை.  நாளைய சந்ததிகளுக்கு `மதுவருந்துதல்` இயல்பானது என்ற நிலை வருமுன் இதைத் தடுக்க வேண்டும்.

மதுவருந்தி தள்ளாடும் இவளல்ல நாம் வேண்டும் புதுமைப் பெண்;

 ‘”வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் கலி யழிப்பது பெண்க ளறமடா கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்”
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ!"


“சாத்தி ரங்கள் பலபல கற்பராம் சவுரி யங்கள் பலபல செய்வராம் மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம் காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம் ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்”

இதோ இவள்தான் நான் விரும்பும், பாரதி கண்ட புதுமைப் பெண்;

by varun   on 18 Jul 2016  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
20-May-2018 07:29:47 குப்புசாமி said : Report Abuse
கலிகாலம் !!!?
 
29-Dec-2017 10:53:16 கி.முனுசாமி said : Report Abuse
ஹாய், நல்ல தலைப்பு ஆசிரியர்க்கு நன்றி பல. இன்னும் சில பெண்கள் புகை பிடிக்கின்றனர். மது,சிகரெட்,போதை பொருள்கள் பயன்படுத்துகின்றனர். இது பெண்களின் உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும். அவர்களை பெற்றோர்கள், கணவன், சகோதர்கள்,உறவினர்கள் கண்டிக்க வேண்டும். அறிவுரை கூறி எதிர்கால வாழ்கை வாழ உதவவேண்டும். என்பது என் மனமார்ந்த விருப்பம். பிறக்கும் குழந்தைகள் பாதிக்க நேரிடும். குழந்தை பிறப்பதில் பல சிக்கல் நேரிடும். ஆயுள் குறைய நேரிடும். நாசா ஆய்வில் கூறியுள்ளது.
 
29-Dec-2017 09:35:14 கி.முனுசாமி said : Report Abuse
ஹாய், நல்ல தலைப்பு ஆசிரியருக்கு நன்றிகள் பல. இன்றைய சமூக சீர்கேட்டை படம் பிடித்து காட்டியுள்ளார். பெண்கள் மது குடிப்பதால் குடும்பம் மானம் போய்விடும். பெண்ணை வைத்து தன ஒரு குடும்பம் நல்ல குடும்பம் என்று சொல்வார்கள். அவர்களே இப்படி மது குடித்தால், சமுதாயம் கெடும், ஏன் இந்த நாட்டை எல்லோரும் காறி துப்புவார்கள். நல்ல குடும்பம் பல்கலை கழகம் என்பது பெண்கள் வைத்து தான் சொல்கிறோம்.
 
28-Jul-2017 04:56:38 சரவணன் said : Report Abuse
தமிழ்...பெண்ணுக்கென்று.. தனி..பண்பாடு.. உண்டு.. அதை.. கட்டி..காக்க..வேண்டியது..நமது..கடமையே.. நாகரிகம்..என்ற.. பெயரில்...சமுதாயத்தை.. நாசம்..பண்ணாதீர்கள்..நன்றி..வணக்கம்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.