வாஷிங்டன், அமெரிக்க வாழ் இந்திய பெண்ணுக்கு பெருமை மிக்க தேசிய கவுன்சில் உறுப்பினர் அந்தஸ்தை அதிபர் ஒபாமா வழங்கியுள்ளார். இது போன்ற பொறுப்புகளுக்கு ஆறுக்கும் மேற்பட்டவர்களை நியமித்து பட்டியலை வெளியிட்டுள்ள அதிபர் ஒபாமா, அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பிரச்சினைகளை எதிர்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். இவர்களுடன் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ராணிராமசாமி தேசிய கவுன்சிலில் கலைப் பிரிவு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
|