|
||||||||||
புதினா கீரையின் 12 மருத்துவ குணங்கள் !! |
||||||||||
புதினா கீரை ஒரு மருத்துவ மூலிகையாகும். நிறைய ஊட்டச்சத்துடன், காரமும், மணமும் கொண்டது புதினாக் கீரை. இதில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம், கந்தகம், தாது உப்புக்கள், ஆக்ஸாலிக் அமிலம், க்ளோரின் போன்றவையும், வைட்டமின்ஏ, சி, தயாமின், ஹைப்போஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், நார்ச் சத்துக்கள் போன்றவையும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையின் இலை, தண்டு, விதை, வேர் என எல்லாப் பொருட்களுமே மருத்துவப் பயன்பாடு கொண்டவை. புதினா கீரையின் முக்கிய மருத்துவ பயன்கள் பற்றி இங்கு காண்போம். புதினாக்கீரையைச் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாவதோடு, புதிய இரத்தமும் உற்பத்தியாகும். வயிறுபோக்கு அதிகமாக இருந்தால், புதினா கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு குணமாகும். புதினாக் கீரை, ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினாக் கீரையை கிள்ளி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்த பின்னர். சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்துக்கொள்ளக்கொள்ளவேண்டும். இந்த பொடியில் தினமும் பல் தேய்த்து வந்தால், ஆயுள் முழுவதும், பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் உங்களை தீண்டாது. மேலும் பற்கள் பளபளக்கும், ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு, புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர பிரச்சனைகள் விரைவில் குணமாகும். புதினாக்கீரையைத் துவையலாக சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்தினால், இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். மஞ்சள் காமாலை, வறட்டு இருமல், வாதம், ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. |
||||||||||
by Swathi on 12 Nov 2013 4 Comments | ||||||||||
Tags: புதினா புதினா கீரை Pudina Mentha | ||||||||||
Disclaimer: |
||||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|